Monday, January 17, 2011
காவலன் - கரை சேர்க்குமா விஜயை ?
தொடர் தோல்விகள்,திரையரங்கு உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பு,3 இடியட்ஸ் விலகல்,அரசியல்ரீதியான நெருக்கடிகள் இத்தனையும் கடந்து திரைத்துறையில் தன்னை நிரூபித்தாக வேண்டிய ஒரு இக்கட்டான, கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்னும் நிலையில் இருக்கும் விஜய்க்கு அவரின் அத்தனை பிரச்சனைகளில் இருந்து ஓரளவேனும் அவரை வெளிக்கொணர உதவியிருக்கும் படம் - காவலன் .
பல வருடங்கள் கழித்து விஜய் உண்மையாகவே நடித்திருக்கும் படம் தான் காவலன்.ஒரு பத்து - பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த விஜயை இதில் பார்க்கலாம் (கதையும் அப்படியே). தன்னுடன் போனில் பேசும் பெண்ணுடன் காதல் வசப்பட்ட பின் வரும் ஒவ்வொரு சீனிலும் தளபதி தன்னை நிரூபித்திருக்கிறார்.ஒரு காலத்தில் விஜயின் ரசிகர்களாக இருந்து விஜயின் மசாலா டைப் படங்களைப் பார்த்து அவரை வெறுக்க ஆரம்பித்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பார்கள்.அதிலும் அந்த பார்க் சீன் விஜய் படங்களின் சூப்பர் சீன்களை வரிசைப்படுத்தினால் முதல் ஐந்து இடத்துக்குள் வந்து விடும்.
இது ஒரு சாதாரண படம்தான்.விஜய் மட்டும் இல்லாமல் போனால் இப்படம் ஊத்திக் கொள்ளக் கூடிய கதையம்சம் கொண்ட படம்.ப்ரண்ட்ஸ்,பிரியமானவளே காலகட்டத்தில் வந்திருந்தால் இது அவ்வளவு ஸ்பெஷலாக தோன்றியிருக்காது.வில்லு,வேட்டைக்காரன்,சுறாக்களுக்கு அடுத்ததாக வந்ததால் ரசிகர்களுக்கு இது நிச்சயமா ஒரு ஸ்பெஷல் விருந்து.மக்கள் வெகுகாலமாய் காண ஏங்கிக் கொண்டிருந்த விஜயை இதில் காணலாம்.முந்தைய விஜய் படங்களைப் போல் இது குழந்தைகளைக் கவர்வது எல்லாம் கடினமே.ஆனால் பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் உங்களை திருப்திபடுத்தக் கூடிய படமே காவலன்.
படத்தில் குறையென எனக்குப் பட்டது சில Outdated வடிவேலுவின் காமெடி காட்சிகளுக்கு பதில் கதை சொல்லுதலில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.படத்தின் ஆரம்ப காட்சிகள் புரிந்து கொள்வதற்குள் சரசரவென பறக்கின்றன.லிவிங்ஸ்டன்,மதன்பாப்,அமிதாப் ஆகியோர் வரும் காட்சிகளை இன்னும் ரசிக்கும் படியாக மாற்றியிருக்கலாம்.
நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு போக்கிரி ஒன்று மட்டும் தான் அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தியது.அதன் பிறகு வந்த ஒவ்வொரு படமும் விஜயின் இமேஜை இறக்க மட்டுமே பயன்பட்டது.அஜித்துக்கு பில்லா,சூர்யாவுக்கு அயன்,சில்லுன்னு ஒரு காதல் ; ஆனால் விஜய் ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்வது போல் போக்கிரி தவிர வேறெந்த படமும் வரவில்லை.இப்படம் கல்லூரி படிக்கும் போதே வந்திருந்தால் விஜயை தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம் கல்லூரியில். சரியான மார்கெட்டிங் செய்தால் இப்படம் நிச்சயமாய் விஜயின் மற்றொரு வெற்றிப் படமாகும்.
நான் ரசித்த சில டயலாக்ஸ் :
அழகு கண்ணுக்கு மட்டும்தான்..மனசுக்கு இல்ல !
அவ்ளோ இஷ்டம் !
எனக்காக கொஞ்சம் வேண்டிக்கங்க !
மேற்சொன்னவற்றை விஜய் சொல்லும் போது இன்னும் அழகு.
இனிமேல் விஜய் ரசிகர்களும் காலர் வைத்த சட்டை போட்டு கொள்ளலாம்..அதை தூக்கி விட்டு சொல்லிக் கொள்ளலாம் 'நான் விஜய் ரசிகன்' என்று !
Labels:
விஜய்
Saturday, October 23, 2010
ட்விட்னவங்க சந்திப்பு !!
இதை எப்பவோ பதியணும்னு நினைச்சேன்.கொஞ்சம் லேட்டாயிடுச்சு.ரொம்ப நாளா இன்டர்நெட்டில் பழகுற நண்பர்களின் முகத்தை நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.வேறெதுக்கு அவங்க எல்லாம் ஒரிஜினலா இல்ல 'பாட்'டான்னு தெரிஞ்சுக்கத்தான்.அப்போதான் திடீர்ன்னு ட்விட்டர்ல சாமி அண்ணன் அழைப்பு விடுத்தார்.டிபிசிடி சென்னை வருவதாகவும் அதையொட்டி நடக்கும் ட்வீட்டப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரலாம் என கூறினார்.அதனால் நானும் அங்கு கிளம்பினேன்.....ஆஆஆஆவ்வ்வ்வ் ! எழுதுற எனக்கே கொட்டாவி வருதுங்க.உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு.லிங்கு தர்றேன்.அங்க போய் மேட்டரை சாமியின் சுவையான நடையில் வாசிச்சுக்கோங்க.அங்க இருக்கிற புகைப்பட கமெண்டுகளை வாசிக்க மறந்துடாதீங்க.அங்க தான் இருக்கு மேட்டரு.(அங்கயா இருக்கு 'மேட்டரு'னு எல்லாம் கேட்ககூடாது ) இதுதான் அந்த லிங்க் http://ksaw.me/2010/09/08/tweetup-aug-2010/ டாட்.
அந்த பதிவுல நான் பதிந்ததை இங்கும் பதிந்து கொள்கிறேன்.
‘அண்ணன் டிபிசிடி அழைக்கிறார்’
ட்விட்டரில் இந்த வார்த்தைகளை முதலில் போட்டுத்தான் டிபிசிடி தலைமை ஏற்று நடத்தப் போகும் ட்விட்டர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.அந்த வார்த்தைகளுக்கு அப்படி என்னதான் சக்தி இருந்தது என தெரியவில்லை.
ஒருகாலத்தில் ‘வைகோ அழைக்கிறார்’,'இயேசு அழைக்கிறார்’ போன்ற வார்த்தைகள் நிகழ்த்திய மாயாஜாலத்தை மேலே சொன்ன அந்த வார்த்தைகளும் நிகழ்த்த தவறவில்லை.
ஆம்..பெசன்ட் நகரில் கூட்டம் என அறிவித்ததுதான் தாமதம்.நகரெங்கும் பெசன்ட் நகர் செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிய துவங்கி விட்டன.ஓரிரு நூறு இடங்களில் சிறப்பு பேருந்து விட சொல்லி பொதுமக்கள் மறியலில் கூட ஈடுபட்டதாக செய்தி வந்தது.’எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பதை போல் அன்றைய தினம் எல்லா பேருந்துகளும் ‘பெசன்ட் நகர்’ போர்டு போட்டு ஓடிக் கொண்டிருந்தன.
எவ்வளவு கூட்டம் என்றால் விழா அமைப்பாளர்களாகிய நாங்களே உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பயங்கர கூட்டம்.அங்கு வந்த மக்கள் கூட்டம் இடம் கிடைக்காமல் சர்ச்சுக்குள் நின்று கொண்டு எங்கள் பேச்சை கேட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அலைகடலென கூட்டம் என்ற உவமையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அலையும் கடலும் மட்டுமே பங்குபெற்ற கூட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இது போதாதென்று அன்று நடந்த சென்னை மாரத்தானில் கலந்து கொண்ட வீரர்கள் டிபிசிடி வருவதைக் கேள்விப்பட்டு டெஸ்டிநேஷன் நோக்கி ஓடாமல் நேராக பெசன்ட் நகர் வந்து விட்டனர்.
இதை அறிந்த தமிழக அரசு சும்மா இருக்குமா? தன்னுடைய உளவுத்துறையை அனுப்பி கூட்டத்துக்கு வரும் கூட்டத்தை அறிய சொன்னதால் அவர்களும் ரோந்து என்ற பெயரில் ஹெலிகாப்டரில் வந்து அவ்வப்போது நோட்டம் விட்டு செல்லும் பணியை செவ்வனே செய்தனர்.
என்னதான் டிபிசிடி நல்ல மனிதராக இருந்தாலும் அவரை பிடிக்காத தீய சக்திகள் இருக்கத்தானே செய்யும்.அவர்கள் இந்த கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்த நபர்கள் கர்ம சிரத்தையோடு சில வேலைகளில் ஈடுபட்டனர்.என்ன தெரியுமா? நாங்கள் குழுமியிருந்த இடத்துக்கு வந்து கூச்சலிட்டும் சில வாத்தியங்களை இசைத்தும் பாட்டு என்ற பெயரில் ஊளையிட்டும் பார்த்தனர்.ஊஹூம்..நாங்கள் அசையவே இல்லை..இதை கவனித்த இன்னொரு தீய சக்தி நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ஜிப்புக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து ஆசிட்டை பேசினான்.நல்ல வேளையாக அவன் வைத்திருந்த ஆயுதம் 'சின்ன' அளவில் இருந்ததால் ஆசிட் அங்கேயே சிந்தி விட்டது.நாங்கள் தப்பித்தோம்.இதனை எல்லாம் தாண்டிதான் இந்த கூட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.கூட்டத்துக்கு வந்த மக்கள் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.இனிமேல் நாம் காலரை தூக்கி சொல்லி கொள்ளலாம்.
‘ 2011 நம்ம கையில ‘
‘அண்ணன் டிபிசிடி தான் அடுத்த முதல்வர்’
Saturday, August 14, 2010
பிடித்த பத்து பெண்கள் (18+) !!!!
பதிவுலகில் தொடர்பதிவு விளையாட்டுகள் தற்போது அதிகமாகி விட்டன..இது ஒரு வகையான அன்புத்தொல்லையா இருக்கு.இந்த விளையாட்டுக்கு என்னை அழைத்த திரு.பிரபு அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவரை தனிப்படை தேடி வருகிறது.(எதுக்கா? அத அவர் மாட்டினதுக்கப்புறம் சொல்றேன்)
சரி..வள வளன்னு பேசாம மேட்டருக்கு வரேன்..டைட்டன் யுவர் சீட் பெல்ட்ஸ்..பீ ரெடி டு ஃபீல் ஏ நைஸ் ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ் (பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கோ? ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டா இப்படித்தான் )..இந்த பதிவுக்கு எதுக்கு 18+னு கடைசியா சொல்றேன்..
மிஸ் மீனா:
இவர் பேரு வேற..பார்க்க கொஞ்சம் மீனா மாதிரி இருப்பாங்க.டிவில மீனாவை பாக்கும்போது இவங்கள நினைச்சும்,இவங்கள பாக்கும்போது மீனாவை நினைச்சும் வாட்டர்பால்ஸ் விட்டுருக்கேன்..அப்போ எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயசிருக்கும்..முதல்முதலில் ஜொள்ளு விட்டது இவங்கள பார்த்துதான்.நான் என்னதான் நல்லா படிச்சாலும் என்னை டியூசனுக்கு அனுப்பும் கெட்ட பழக்கம் என் அப்பா,அம்மாவுக்கு உண்டு.அப்படிதான் பள்ளி முடிந்ததும் எக்ஸ்ட்ரா கிளாஸ் இவங்கட்ட படிச்சேன்.அவங்க அங்க சொல்லி கொடுக்குறது ஆல்ரெடி நான் படிச்சதுதாங்கிறதுனால அங்க சும்மா உக்காந்துருப்பேன்..அப்போதான் ஒரு நாள் அவங்க நான் உக்கார்ந்திருந்த டெஸ்க் மேல அவங்க கைய வைக்க , சும்மா இருந்த நான் அதுக்கு மேல சும்மா இருக்க முடியாம அவங்க விரலை தடவ ஆரம்பிச்சுட்டேன்.அதுக்கப்புறம் எப்படா டியூசன் வரும்,எப்படா கைய சாரி விரலை நோண்டலாம்ன்னு யோசிச்சிட்டே இருப்பேன்..இப்படியே நான் பண்ணிட்டு இருக்குறப்ப ஒரு நாள் என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஃ ப்ரண்டு (ம்க்கும் நல்ல பிரண்டு) பாத்துட்டான்.அதுல இருந்து அந்த பழக்கத்தை விட்டுட்டேன்..
மிஸ் X :
இவங்க விரல் சம்பவத்துக்கு அடுத்த வருஷம் எனக்கு கிளாஸ் மிஸ்ஸா வந்தாங்க..பெயரை பாத்துட்டு தப்பா நினைச்சிடாதீங்க.நல்ல மிஸ்தான்.பெயர் சொல்லக்கூடாதுன்னுதான் அப்பிடி.இவங்க டியூசன் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டதுனால டச்சிங் இங்க மிஸ்ஸிங் :( ஒருமுறை பள்ளியில் டூர் கூட்டிட்டு போன போது லாஸ்ட் சீட் கார்னரில் இடம்பிடித்து விட்டேன்..ஆனால் என் தோழன் அந்த இடத்தைக் கேட்கவே ஈவ்னிங்கில் இருந்து அந்த இடம் அவனுக்கு என்று டீலானது.இதற்கிடையில் அவன் வைத்திருந்த ஜாமை நான் கொஞ்சம் கேட்க அவன் மறுக்க டீல் நோ டீல் ஆனது.இந்த நிலையில் இரவு நேரத்தில் நான் ஜன்னலோரம் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்த மிஸ்.X எனதருகே வந்தமர்ந்து என்னை அவரது மடியில் போட்டு தூங்க வைத்தார்.அதுவரை கண்டிப்பான மிஸ்ஸாக மட்டுமே அவரைப் பார்த்து வெறுத்த என்னை அவரின் அரவணைப்பு இந்த லிஸ்டில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்து விட்டது :)
மிஸ் தேவயானி :
என் பள்ளிப் பருவத்தில் என்னை மிகவும் சோதித்தது இவர்தான்.பார்க்க கொஞ்சம் அமோகாவும் தேவயானியும் கலந்த தோற்றத்தில் இருப்பார்.நன்றாக பாடம் நடத்துவார்.குரலும் சோ ஸ்வீட்.மணமான பெண்களை சைட் அடிக்கக்கூடாது என்ற எனது கொள்கையை கடுமையான மறுபரிசீலனைக்கு உள்ளாக்கியவர்.இவர் புதிதாய் வகுப்புக்கு வந்த இரண்டாம் நாளிலேயே என் பெயரை தனியாக சொல்லி அழைத்ததால் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.இவரிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டால் தன் உடை மீதான கான்ஷியஸ்னசை இழந்து விடுவார்.இவர் 'structure of .. ' என ஆரம்பிக்க மாணவர்கள் வேறொரு ஸ்ட்ரக்சரைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தனர்.இதையெல்லாம் பார்த்தால் மார்க் குறைந்து விடும் என்றெண்ணி அவரது வகுப்பு நேரங்களில் நான் தூங்கி விடுவது (அட்லீஸ்ட் தூங்குவது போல் நடிப்பது) என முடிவெடுத்தேன்.ஆனால் சீன் பார்த்த மாணவர்கள் என்னை விட அதிக மார்க் எடுத்து விட்ட காரணத்தினால் நான் எனது தூக்கத்தைக் கலைக்க வேண்டியதாகி விட்டது.பின்னர் ஏதோ ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நன்னாளில் நான் திருந்தும் வரை அவர் வகுப்பில் தூங்காமல் விழித்து விழித்து 'கவனித்துக்' கொண்டிருந்தேன்.ஆனாலும் ஏதோ ஒன்று என்னை உறுத்திக் கொண்டிருந்தது.பள்ளி விட்டு போவதற்கு முன்னால் அவரிடம் நடந்ததை சொல்லி இனிமேல் வகுப்பில் உடை மீதும் கொஞ்சம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ள எத்தனிக்கையில், ஜூனியர் மாணவர்களின் காய்ந்து போன முகங்கள் கண்முன் விரிய அந்த எண்ணத்தை டிராப் செய்து விட்டேன்.
சினேகா:
ஒரு மூன்று,நான்கு வருடத்துக்கு முன்னால் என் தூக்கத்தை கெடுப்பதில் முதலிடம் இவளுக்குத்தான்.ஆளும் பார்க்க சினேகா போலவே செம கிக்காக இருப்பாள்.இவள் என்னருகில் வரும்போது நான் மூச்சு விட்டதை விட பெருமூச்சு விட்டதே அதிகம்.இதுக்கு மேல சொன்னா அப்புறம் கூகிளில் அஜால் குஜால் கதைகளில் இந்த பதிவு வந்து விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நடிகை ஷாலினி:
ஷாலினி - இவரை எனக்கு சின்ன வயதிலிருந்தே ரொம்ப பிடிக்கும்.இவர் சின்ன வயதில் நடித்த போது எனக்கு ரொம்ப சின்ன வயது.காதலுக்கு மரியாதை படம் வந்த புதிதில் அந்த படத்தின் போஸ்டரைக் கூட விட மாட்டேன்.டிவியில் அந்த படத்தின் பாடல்களை எப்போது போடுவார்கள் என டிவியின் முன்னால் தவமிருப்பேன்.என்னவென்றே தெரியவில்லை அப்படி ஒரு கிரேஸ் ஷாலினியின் மீது.இப்போதும் கூட அது அப்படியே இருக்கிறது.என்ன அஜித்தை கட்டிக் கொண்டாரே என்னும் சின்ன கோபத்தை தவிர.
உஃப்...................அப்பாடா.....................
அஞ்சு பொண்ணுங்களுக்கே மூச்சு வாங்குது..
இதுல இன்னும் அஞ்சு எல்லாம் தாங்காது..இதோட நிறுத்திக்குவோம்.
டிஸ்கி: இந்த பதிவுல வர்ற பெண்கள் எல்லாருக்குமே இப்போ வயசு 18-க்கு மேல இருக்கும்.அதுதான் இந்த பதிவுக்கு 18+ :)
டிஸ்கி 2 :ரொம்ப நாளா கிடப்பில் கிடந்ததை தூசி தட்டி கொஞ்சம் எடிட் பண்ணி ரொம்ப சோம்பேறித்தனம் பட்டு பாதிலேயே நிறுத்தின பதிவு.யாராவது விருப்பம் இருந்தா கண்டினியூ பண்ணுங்க..
கடைசியா சேர்த்தது : கொஞ்ச நாளா என்னென்னமோ நடக்குதுங்க..விகடன்ல நம்ம ட்வீட் வருது..மதன் கார்க்கி நம்ம ப்ளாக்ல கமென்ட் போடுறாரு..இந்த வாரம் அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு :)