Saturday, January 30, 2010

தமிழ்ப்படம் - பூர்த்தியடையாத எதிர்பார்ப்புகள்


மு.கு : இது விமர்சனம் அல்ல..

இந்த பதிவர்கள் சொல்வதை இனிமேல் கேட்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன்..ஆளாளுக்கு படத்தை ஓவராய் ஏத்தி விட அடுத்த வாரம் படம் பார்க்கலாம் என்ற முடிவை மாற்றி ஆசை ஆசையாய் இன்றே கிளம்பி விட்டேன்..துணைக்கு ஒரு நண்பனையும் அழைத்துக் கொண்டு..(அவன் இனிமேல் நான் கூப்பிடும் எந்த படத்துக்கும் வர போவதில்லை என சொல்லி விட்டான் :((  )

படத்தின் முதல் பாதி தூள் கிளப்பியிருக்கிறார்கள்..ஒரு சில காட்சிகளை தவிர மற்றவைகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்..இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாச்சு..இதுக்கு முன்னால பிரண்ட்ஸ் படத்துக்கு தான் இவ்வாறு சிரித்திருக்கிறேன்..இந்த மாதிரி ஒரு பிரமாதமான நகைச்சுவையுடன் ஒரு முதல் பாதி எங்குமே காணாத ஒன்று..

ஆனால் இரண்டாம் பாதி ????????????????????

எந்த படமானாலும் முதல் பாதி மொக்கை போட்டு விட்டு இரண்டாம் பாதி  அடித்து நொறுக்கியிருந்தால் படம் சுயர் ஹிட்..இங்கே அது தலைகீழ் ஆகியிருக்கிறது...இ.பாதியில் நகைச்சுவை என்பது நீளமான சாலையில்  வரும் கி.மீ பலகையை போல்  ஆங்காங்கே தலை காட்டி விட்டு சென்று விடுகிறது..

அதிலும் D for Death என்று ஒருவர் வருவார்..அவர் யார் என்று திரையில் காண்பிக்கும் போது பாதி கூட்டம் திரையரங்கை காலி செய்து விடுகின்றது..கிளைமாக்ஸ் வரை ஒருவர் உக்காந்து பார்த்து விட்டு வந்தால் அவருக்கு பொறுமை என்பது நாடி,நரம்பு,ரத்தம்,சதை, இன்ன பிற வஸ்துக்களிலும் நிறைய ஊறியிருக்க வேண்டும்..

இறுதியாக நண்பன் கேட்டான்..'இந்த படத்துக்கு ஏன்டா என்னைய இவ்ளோ அனத்தி கூட்டிட்டு வந்த?

'இல்லைடா..பிளாக்ஸ்ல நல்லா விதமா ரிவ்யு போட்டிருந்தாங்க..அதான்டா'...

'அதை எல்லாம் நீ ஏன் நம்புற..ஆ.ஒ. படத்துக்கு கேவலமா எழுதியிருந்தாங்க..படம் எப்படி இருந்துச்சு?'

'சரிடா..இனிமேல் அவங்க சொல்றத நம்பலை' ...

மொத்தத்தில் முதல் பாதி - சரவெடி
இரண்டாம் பாதி - புஸ்ஸான சீனி வெடி  

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Monday, January 25, 2010

விடைதேடல்



எப்போது வேலை கிடைக்கும்?

பெரிய கம்பெனிகள் கேம்பஸ் வருமா?

இந்த முறையாவது டிஸ்டிங்சன் வருமா?

உலக பொருளாதாரம் எப்போது நிமிரும்?

2020இல் இந்தியா வல்லரசாகுமா ?

வாழ்க்கை என்பது என்ன?

நான் என்பது யார்?

கர்மவினை - அதென்ன கருமம்?

எதற்காய் இந்த பிறப்பு ?









முக்கியமில்லை
விடைகள் இவற்றுக்கெல்லாம்!!
இப்போதே
விடைதெரிந்தாக  வேண்டிய
ஒரு கேள்வி!!!





கல்யாணத்த
எங்க ஊரில வச்சுக்கலாமா
அவங்க ஊரில வச்சுக்கலாமா ?
சொல்லிட்டு போங்க...

கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

பி.கு : இந்த டெம்ப்ளேட்ட தமிழ்மணத்துல இணைக்க முடியல..ஏன்னு தெரியல..அது கூட விடைதேடல் தான்..தெரிஞ்சா சொல்லிட்டு போங்க..:))

Tuesday, January 19, 2010

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!






என்னவென்று தெரியவில்லை..சில நாட்களாக கணினி முன்னால் அமர்ந்தாலே தலையின் பின் பகுதியில் இடது புறம் வலி பின்னி பெடலெடுக்கிறது..காரணம் என்னவென்று தெரியவில்லை..மேலே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல tightened muscles என்னும் பகுதியில் ஆரம்பிக்கும் வலி அப்படியே ஒரு ஆர்க் போட்டு இடது புற காதில் வந்து முடிவடைகிறது..வலித்தவுடன் கணினியை அணைத்து விட்டு தலைகாணியில் முகம் புதைத்து கொள்வேன்..மனதுக்குள் 'என் பின்னந்தலையில சுர்ர்ர்ர்ர்ருங்குது'ன்னு பாடல் தோன்றும்..

ஒரு நண்பனிடம் கேட்ட போது ஒழுங்கான முறையில் அமராவிட்டால் வலி ஏற்படும்..கணினிக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் நாற்காலி வாங்கி பயன்படுத்து என்றான்..

சரி என கூறிவிட்டு கூகிளிட்ட போது காரணத்தை கண்டு பிடித்து விட்டேன்..கழுத்தின் பின்புறமுள்ள தசையில் அதிக அழுத்தம் ஏற்படும் போது இது போன்ற வலிகள் ஏற்படுமாம்..இனிமேல் ஒழுங்காக உட்கார்ந்து கொண்டு கணினி பயன்படுத்த வேண்டும்..உங்களுக்கும் இதை போன்ற அனுபவம் இருந்தால் பகிரவும்..

கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும்..அதை நினைத்தால் பயமாகவும் உள்ளது..
போனதும் அவர் ஸ்கேன் எடுக்க சொல்வார்..எடுத்தும் அவர் சொல்ல போவது இந்த இரண்டில் ஒன்றுதான்..

1 . உங்க தலையில ஒண்ணுமில்லை..('யோவ்!மூளை இருந்துச்சுயா, நல்லா பாரு  ' அப்படினுல்லாம் காமெடி பண்ண முடியாது அங்க..)

2 . உங்களுக்கு பெரிய வியாதி இருக்கு..நீங்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்க போறீங்க..

இந்த வலி முதுகுதண்டு அழுத்தத்தால் வந்தால் அவர் சொல்ல போவது ஆப்சன் 1 ..

அவ்வாறு இல்லாமல் நான் பயந்து கொண்டிருக்கும் ஒரு காரணத்துக்காக வந்திருந்தால்
அவர் சொல்ல போவது ஆப்சன் 2 ..

ஆப்சன் 1 அவர் பதிலாக இருந்தால் ஒன்றும் பெரிதாக பயமில்லை..

ஆப்சன் 2 அவர் பதிலாக இருந்தால் 'வாழ்வே மாயம்' பாடிக் கொண்டு மீதி நாட்களை கடக்க வேண்டியதுதான்..

நான் பயந்து கொண்டிருக்கும் காரணம் வேறொன்றும் இல்லை..அடிக்கடி செய்திதாள்களில் போட்டு பயமுறுத்தும் ஒரு மேட்டர்..

அதிகமாக செல்போன் பயன்படுத்தினால் மூளையை பாதிக்கும்..

மணிக்கணக்கில் அடித்த அரட்டை உயிருக்கு மணி அடித்து விடுமோ என்றுதான் பயமாக இருக்கிறது..

பி.கு :  அந்த கவலை எல்லாம் மூளை இருக்கிறவன் அல்லவா பட வேண்டும்..உனக்கேன் இந்த கவலை என்று கேட்க கூடாது..ஏன் என்றால் இது சுய புலம்பல் பதிவு..

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க.. 

Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் கண்ணாடியின் வழியே!!




இந்த படத்தோட கதைய படிக்கணும்னு வந்திருந்தீங்கனா சாரி நான் கதை சொல்ல போவதில்லை..விமர்சனமும் பண்ண போவதில்லை..என் மனதில் பட்ட சில விசயங்களை மட்டுமே எழுத போகிறேன்..

நேத்து ஈவ்னிங் ஷோ  போனேன்..முதலில் 50 ரூபாய் என்றவர்கள் பர்ஸில் இருந்து எடுப்பதற்குள் 100 ஆக்கி விட்டனர்..சரி என்று அடுத்த 50 எடுப்பதற்குள் ஹவுஸ்புல் போர்டு மாட்டி விட்டனர்..பேன்ட் பையை டைட்டாக தைத்த டெய்லரை திட்டிக் கொண்டே வெளியே வந்தேன்..

வரும் வழியில் பார்த்த நண்பன் படத்துக்கு டிக்கெட் புக் பண்ண போவதாக சொல்ல,எனக்கும் ஒன்று ஆர்டர் செய்து விட்டு வந்தேன் அவன் சொந்த செலவில்..இரவு பத்து மணிக்கு வெற்றி திரையரங்கினுள் சென்றோம் (எங்க தியேட்டர் இல்லீங்க)..படத்தை பத்து நிமிடத்துக்கு முன்னரே போட்டு விட்டார்கள்..நான் போகும் போது எம்.ஜி.ஆர் பாடலுக்கு கார்த்தி ஆடிக் கொண்டிருந்தார்..முதலில் இருந்து இராண்டாம் வரிசையில் தான் இடம் கிடைத்தது..கழுத்து வலி இன்னும் விடவில்லை..

அந்த கப்பலையும் தீவையும் பார்த்தவுடனே தோன்றி விட்டது இது சாதாரண படமல்ல என்று..படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க செல்வாதான் தெரிகிறார்..அவரின் படங்களில் வரும் எதையுமே நக்கலாக எடுத்து கொள்ளும் கதாநாயகன், அமைதியாக ஒரு கதாநாயகி (ஆண்ட்ரியா), அப்புறம் இன்னொரு ஹீரோ (ரீமா சென்)..எனக்கென்னமோ படத்தின் முதல் பாதியில் மட்டுமல்ல கிளைமாக்ஸ் வரை ரீமா தான் படத்தின் கதாநாயகனாக தெரிந்தார்..

படத்தின் ட்ரைலரில் கார்த்தி தலையை குனிந்து கொண்டே ஒரு காட்சியில் செல்வார்..அப்போதே வித்தியாசமாய் தெரிந்த அந்த காட்சியின் அர்த்தத்தை படத்தில் காணும் போது சுவாரசியமாக இருந்தது..

முதல் பாதியில் வரும் அந்த ஏழு ஆபத்துகள் நாம் தமிழ் படம் தான் பார்த்து கொண்டிருக்கிறோமா என்னும் எண்ணத்தை ஏற்படுத்தி விட கூடியவை..ஆபத்துகளை அவர்கள் எப்படி கடக்கிறார்கள் என்பதை லாஜிக் பார்க்காமல் பார்க்கவும்..ஏன் என்றால் இப்படம் ஓர் கற்பனை கதை மட்டுமே..

இரண்டாம் பாதியில் வரும் அந்த ராஜா காலத்து கதை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒன்று..அங்கே அந்த குகையில் உள்ளவர்கள் நிறைய வித்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்..அதிலும் ஓரிடத்தில் பார்த்திபன் ரீமாவின் உடலை தொடாமல் நிழலை தொட்டே அவரை எதிர்கொள்வார்..சபாஷ் போட வைத்த காட்சி..

பார்த்திபனுக்கும் ரீமாவுக்கும் நடக்கும் உரையாடலில் சங்க கால வார்த்தைகள் பயன்படுத்தபட்டிருக்கின்றன..புரிதல் ஒன்னும் கஷ்டமாக எல்லாம் இல்லை..பள்ளியில் மேல்நிலை வகுப்பில் செய்யுளை அர்த்தம் புரிந்து படித்திருந்தால் எளிதில் புரிந்து விடக்கூடியது  தான்..

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதற்காக அவர்கள் சிந்திய வியர்வை துளிகள்,மெனக்கெடல்கள் நன்றாகவே தெரிகிறது..ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையும் அவ்வப்போது கண்முன்  நிழலாடுகின்றது..இறுதியில் வரும் போர்க்கள காட்சி இன்னும் பிரமாண்டமாய் எடுத்திருக்கலாம்..செல்வாவின் பேட் லக் (நமக்கும்தான்)..அவருக்கு கிடைத்தது இவ்வளவு மட்டுமே செலவு செய்யும் தயாரிப்பாளர்..

இசையும் ஒளிப்பதிவும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சிறப்பான ஒரு ஒளி-ஒலி அனுபவத்தை தருகின்றன..

படத்தில் எனக்கிருந்த குறை இரண்டே இரண்டுதான் :

1 . மிகவும் எதிர்பார்த்த இரண்டு பாடல்கள் படத்தில் இல்லை..பெம்மானே - நான்கு வரியோடு அமுங்கி விடுகிறது..மாலை நேரம் - இன்னும் அவர்களுக்கு பொழுது சாயவில்லை போலும்..

2 . சில காட்சிகளை தியேட்டர்காரர்களே  கட் செய்து விட்டார்கள் என்று படம் பார்த்து விட்டு சில விமர்சனங்களை படிக்கும் போது தெரிந்தது..

மற்றபடி பெரிதாக குறை ஒன்றும் இல்லை..

எத்தனையோ படங்களை லாஜிக் பார்க்காமல் அற்ப விஷயங்களுக்காக ஓட வைத்திருக்கிறோம்..முதன் முறையாக நிகழ்காலத்தையும் வரலாறையும் இணைக்கும் இப்படத்தை தமிழ் என்னும் ஒரே காரணத்துக்காக ஓட வைக்கலாமே...

இறுதியாக ஒரு வேண்டுகோள் : எப்போதாவது வரும் இது போன்ற படைப்புகளை முதல் நாளிலேயே படத்தின் குறைகளை மட்டும் சொல்லி, புதிய முயற்சிகளை புறந்தள்ளி விடாதீர்கள்..தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே  ப்ளீஸ்!!

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..



Thursday, January 14, 2010

அந்த மூன்று வார்த்தை!



                                         சூர்யா,மாயா - இவங்கதான் இந்த கதையோட ஹீரோ அண்ட் ஹீரோயின்.. இப்போ கதைக்குள்ள போவோம்.

இருவரும் வழக்கம் போல் மாமன் பிள்ளைகளாய் பிறக்க போய் கதை எழுதுபவனின் சதியால்  பக்கத்து வீட்டுகாரர்கள் என்றளவில் மட்டும் உறவாகி போனார்கள்.

சிறு வயதிலிருந்தே மிகவும் நெருங்கி பழகிய இருவரும் தங்கள் பெயர் ஒரே போல் முடிய வேண்டும் என்றெண்ணி சூரியன் சூர்யாவாகவும்,மாயன் மாயாவாகவும் பெயர் மாற்றி கொள்ள தீர்மானித்து சூரியன் மட்டும் பெயர் மாற்றலில் வெற்றி பெற்றான்..ஏன்னா மாயன் என்பது ஆம்பிள பேர்..அத எப்படி பெண் குழந்தைக்கு வைப்பாங்க..(சும்மா வாசிக்கனும்னு கடனுக்கு வாசிச்சா இப்படிதான் ஆகும்.கவனமா படிங்க..)

சூர்யாவுக்கு ஏகப்பட்ட கேள் பிரண்ட்ஸ்..ஆனாலும் யாரும் இதுவரைக்கும் அவன்ட்ட ப்ரொபோஸ் பண்ணதில்ல அப்படிங்கற அளவுக்கு அழகன்(?).

ஆனா மாயாவ  பாருங்க..அவளுக்கு  சூர்யா தான் உலகம்..சூர்யா எந்த பொண்ணுட்ட பேசுனாலும் அவளுக்கு பிடிக்காது.ஒரு நாள் சூர்யாட்ட வந்து இன்னிக்கு 'உன்ன நினைச்சிட்டே மருதாணி வச்சேன்..எப்படி சிவந்திருக்குன்னு பாரு' என்று ஆசையாய் அவள் உள்ளங்கைகளை காமிக்க அவனோ 'இது என்ன பெரிய சிவப்பு..உன் உதட்டின் வண்ணம் இன்னும் இதை விட சிவப்பு' என பிட்டை போட அவள் 'போடா எனக்கு வெட்கமா இருக்கு ' என அவன் கன்னத்தை கிள்ளிய போது நிஜமாகவே சிவந்து போனது அவன் கன்னம்..


ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஜூவாலஜி கூட பக்காவா பொருந்தும்..அவங்க வளர்க்கிற பூனைய சொன்னேங்க..(இருவர் கைகளிலும் செல்போன் இருப்பதால் புறா தப்பித்தது..)

இனா பாருங்க(எத்தன நாளைக்கிதான் ஆனாவையே பார்ப்பிங்க!)..அவ்ளோ க்ளோசா பழகியும் ரெண்டு பேருக்கும் ஒரு வருத்தம் இருக்கு..அவங்க இன்னும் அந்த மூன்று வார்த்தைகளை சொன்னதே இல்லை..பின்ன போன SMS ல  பழக ஆரம்பிக்குறவங்க கூட அடுத்த SMS ல அந்த வார்த்தைகளை சொல்லிக்கும் போது பத்து வருசமா பழகியும் நம்மளால இன்னும் சொல்ல முடியலயேன்னு உள்ளுக்குள்ளே பொருமிகிட்டு இருந்தாங்க..

அந்த நாள் வந்தது..இருவருக்கும் பள்ளி இறுதி தேர்வின் இறுதி தேர்வு..இன்னிக்கு சொல்லலேன்னா எப்பவும் சொல்ல முடியாதுன்னு முடிவெடுத்து இன்னிக்கு எப்படியாவது சொல்லிடனும்ன்னு முடிவெடுத்து 
கிளம்பிட்டாங்க..


சூர்யா மாயாவை நெருங்கி வந்து அவள் கண்ணும் இவன் கண்ணும் சந்தித்து இருவரின் பார்வைகளும் முத்தமிட்டு கொண்ட நேரத்தில் அவன் சொல்ல வந்ததை தைரியமாக சொல்லி விட்டான்..அவளும்  இதையே எதிர்பார்த்தவளாய் புன்னகையுடன் தலைகுனிந்து (வெட்கம்!) அவன் சொன்னதையே அவளும் சொன்னாள்..

தேர்வு முடிவுகள் வெளிவந்தன..எதிர்பாரா விதமாய் சூர்யா இறுதியாக எழுதின தேர்வில் பெயில் ஆகி இருந்தான்..அவளோ அந்த பாடத்தில் பள்ளியிலேயே முதலாவதாக தேறியிருந்தாள்..தேர்வு அன்று நடந்ததை நினைத்து பார்த்தான்.. அவள் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளும் ரீங்காரமாய் ச்சீய் தேனீயாய் அவன் காதில் கொட்டின..


                                            





                         ALL THE BEST!!!!!




 நீதி :  நல்லவங்க வாக்கு(மட்டுமே) பலிக்கும்..



 கதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Monday, January 11, 2010

டவுன் பஸ் பயணங்களில்




 பின் மதிய நேரம்- துணைக்கு 
 யாருமில்லா
 தேசிய நெடுஞ்சாலை
 பேருந்து நிறுத்தத்தில்
 எனக்கு ஆதரவாய்
 எனது கைபேசி மட்டும்!

 வந்தது பேருந்து
 வந்து சேர்ந்தது
 சந்தேகமும்..
 ஒட்டுனருக்கும் நடத்துனருக்கும்
 எங்காவது செல்ல
 தோன்றினால்
 தோள் மேல் கை
 போட்டு கொண்டு
 இந்த பேருந்தை
 எடுத்து கிளம்பி விடுவார்களோ ?

 தனியனாய் உள்ளேறி
 பின்னிருக்கையின் மத்தியில்
 அமர்ந்தேன்!
 அதன் பின் தான்
 அந்த பரவச
 அனுபவம்!!

 மிதமான இளவெயில்
 இதமாக  ஏன் முகத்தில் விழ !
 சாலையின் இருபுறமும்
 ஆங்காங்கே
 ஜன.30 பிறந்தநாள் வாசகங்கள்
 நிரம்பிய பதாகைகள் !
 காதை பிளந்து
 கபாலம் வரை கதிகலக்கும்
 DTS தொல்லை இன்றி
 காற்றின் ஓசை
 இசையாய் தழுவ !
 பேருந்தின் மிதவேக
 குலுங்கல் என்னை
 தொட்டில்லாட்ட !
 சிறிது
 கண்ணை மூடினால் 
 அடடா! அடடா!
 இதுவல்லவோ
 இங்கல்லவோ ஆனந்தம்!

 அருகினில் அவள்
 இல்லாததும்
 குறையாய் தெரியவில்லை! 

 இருந்திருந்தால்
 இவற்றையா
 ரசித்துக் கொண்டிருந்திருப்பேன்!
 அவளை  மறந்து !!!!

 இந்த கவிதை உரையாடல் கவிதை போட்டிக்கு.........
 கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Saturday, January 9, 2010

கேபிளார்க்கு ஒரு அட்வைஸ்!




பார்வர்ட் செய்த கவிதை
'நீ எழுதினாயா'
என அவள் கேட்க
நான் சொன்னேன்
'இல்லை எனக்கும் 
பார்வார்டாய் தான் வந்தது

அதானே!
நீ பதிவிற்கு மட்டும்தானே 
கவிதை எழுதுவாய்..

எப்படி சொல்வேன் 
அவளிடம் 
எனக்கு கவிதை எழுத 
தைரியம் வந்தது 
இவருடைய கவிதையை 
பார்த்துதான் என்று!

பின்னே 
என் குருவின்  கவிதைகள் 
என
இவரின் கவிதைகளை 
நீட்டினால் 
கிழித்து தொங்க 
போட்டு விடுவார்களே 

நீ இவ்வளவு நாள்
ப்ளாக்கில் படித்தது
இந்த கருமத்தைதானா
என்று!

தலைவா!
உனக்கு நான் கூறுவது 
காமம் மட்டுமே 
கவிதையல்ல
வேறு பல 
விசயங்களையும் 
எண்டர் செய்யும் 
பாக்கியத்தை உன் 
எண்டர் கீ பெறட்டும்!!

இதே பாணியை 
தொடர்ந்து
செக்ஸ் கவிஞர்
என்னும் பட்டத்தை
வாங்கி 
சொந்த காசில் 
சூனியம் வைத்து 
கொள்ளாதீர்!!!!


சகல வயதினரும்
இரு பாலரும் 
வாசிக்கும் வண்ணம்
கவிதை இயற்றி
உம் எண்டர் கீக்கு
சாப விமோசனம்
கொடுத்தருள்வாய்!!!





பி.கு : நானும் எத்தன நாள்தான் கொத்து பரோட்டா ல நம்ம பேரு வாரம் ஒரு பதிவர் ல வரும்ன்னு காத்திருக்கிறது..அதான் புறவாசல் வழியா உள்ள நுழைந்திடலாம் என்னும் நம்பிக்கையில் இந்த பதிவை எழுதியுள்ளேன்..கவிதையின் நாயகன் லிங்க் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்.....

 கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..


 


  

Sunday, January 3, 2010

கற்றுக் கொடுக்கும் கள்ளம்




என் அப்பா
'யாரிடம் பேசுகிறாய்? '
என கேட்டால்
என்ன சொல்வது?

'தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் '
என்று சொல்..

வீட்டில்
'எங்கே செல்கிறாய்? '
என கேட்டால்
என்ன சொல்வது?

'கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் '
என சொல்ல தெரியாதா?

'பேலன்ஸ் ஏன் சீக்கிரம் தீர்ந்தது ?'
என கேட்டால்?

ஜாப் அலெர்ட்ஸ்க்கு
பிடிக்கிறார்கள் என
பொய் சொல்லடி!

'இந்த பரிசு யார் கொடுத்தார்கள்? '
என்றார்கள்..
சொல்லிவிட்டேன்
'என் பள்ளிதோழி என'

அப்பாடா என்றேன்
நிம்மதி
பெருமூச்சுடன்!

ஒவ்வொன்றாக
கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
கள்ளத்தனங்களை..
        .
        .
        .
        .
        .
        .
        .
        .
        .

நாளை எனக்கெதிராக
அவை பயன்படுத்தப்படாது
என்ற நம்பிக்கையில்!!

கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..