Saturday, October 23, 2010

ட்விட்னவங்க சந்திப்பு !!



இதை எப்பவோ பதியணும்னு நினைச்சேன்.கொஞ்சம் லேட்டாயிடுச்சு.ரொம்ப நாளா இன்டர்நெட்டில் பழகுற நண்பர்களின் முகத்தை நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.வேறெதுக்கு அவங்க எல்லாம் ஒரிஜினலா இல்ல 'பாட்'டான்னு தெரிஞ்சுக்கத்தான்.அப்போதான் திடீர்ன்னு ட்விட்டர்ல சாமி அண்ணன் அழைப்பு விடுத்தார்.டிபிசிடி சென்னை வருவதாகவும் அதையொட்டி நடக்கும் ட்வீட்டப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரலாம் என கூறினார்.அதனால் நானும் அங்கு கிளம்பினேன்.....ஆஆஆஆவ்வ்வ்வ் ! எழுதுற எனக்கே கொட்டாவி வருதுங்க.உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு.லிங்கு தர்றேன்.அங்க போய் மேட்டரை சாமியின் சுவையான நடையில் வாசிச்சுக்கோங்க.அங்க இருக்கிற புகைப்பட கமெண்டுகளை வாசிக்க மறந்துடாதீங்க.அங்க தான் இருக்கு மேட்டரு.(அங்கயா இருக்கு 'மேட்டரு'னு எல்லாம் கேட்ககூடாது ) இதுதான் அந்த லிங்க் http://ksaw.me/2010/09/08/tweetup-aug-2010/   டாட்.

அந்த பதிவுல நான் பதிந்ததை இங்கும் பதிந்து கொள்கிறேன்.


‘அண்ணன் டிபிசிடி அழைக்கிறார்’
ட்விட்டரில் இந்த வார்த்தைகளை முதலில் போட்டுத்தான் டிபிசிடி தலைமை ஏற்று நடத்தப் போகும் ட்விட்டர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.அந்த வார்த்தைகளுக்கு அப்படி என்னதான் சக்தி இருந்தது என தெரியவில்லை.
ஒருகாலத்தில் ‘வைகோ அழைக்கிறார்’,'இயேசு அழைக்கிறார்’ போன்ற வார்த்தைகள் நிகழ்த்திய மாயாஜாலத்தை மேலே சொன்ன அந்த வார்த்தைகளும் நிகழ்த்த தவறவில்லை.
ஆம்..பெசன்ட் நகரில் கூட்டம் என அறிவித்ததுதான் தாமதம்.நகரெங்கும் பெசன்ட் நகர் செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிய துவங்கி விட்டன.ஓரிரு நூறு இடங்களில் சிறப்பு பேருந்து விட சொல்லி பொதுமக்கள் மறியலில் கூட ஈடுபட்டதாக செய்தி வந்தது.’எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பதை போல் அன்றைய தினம் எல்லா பேருந்துகளும் ‘பெசன்ட் நகர்’ போர்டு போட்டு ஓடிக் கொண்டிருந்தன.
எவ்வளவு கூட்டம் என்றால் விழா அமைப்பாளர்களாகிய நாங்களே உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பயங்கர கூட்டம்.அங்கு வந்த மக்கள் கூட்டம் இடம் கிடைக்காமல் சர்ச்சுக்குள் நின்று கொண்டு எங்கள் பேச்சை கேட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அலைகடலென கூட்டம் என்ற உவமையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அலையும் கடலும் மட்டுமே பங்குபெற்ற கூட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இது போதாதென்று அன்று நடந்த சென்னை மாரத்தானில் கலந்து கொண்ட வீரர்கள் டிபிசிடி வருவதைக் கேள்விப்பட்டு டெஸ்டிநேஷன் நோக்கி ஓடாமல் நேராக பெசன்ட் நகர் வந்து விட்டனர்.
இதை அறிந்த தமிழக அரசு சும்மா இருக்குமா? தன்னுடைய உளவுத்துறையை அனுப்பி கூட்டத்துக்கு வரும் கூட்டத்தை அறிய சொன்னதால் அவர்களும் ரோந்து என்ற பெயரில் ஹெலிகாப்டரில் வந்து அவ்வப்போது நோட்டம் விட்டு செல்லும் பணியை செவ்வனே செய்தனர்.
என்னதான் டிபிசிடி நல்ல மனிதராக இருந்தாலும் அவரை பிடிக்காத தீய சக்திகள் இருக்கத்தானே செய்யும்.அவர்கள் இந்த கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்த நபர்கள் கர்ம சிரத்தையோடு சில வேலைகளில் ஈடுபட்டனர்.என்ன தெரியுமா? நாங்கள் குழுமியிருந்த இடத்துக்கு வந்து கூச்சலிட்டும் சில வாத்தியங்களை இசைத்தும் பாட்டு என்ற பெயரில் ஊளையிட்டும் பார்த்தனர்.ஊஹூம்..நாங்கள் அசையவே இல்லை..இதை கவனித்த இன்னொரு தீய சக்தி நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ஜிப்புக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து ஆசிட்டை பேசினான்.நல்ல வேளையாக அவன் வைத்திருந்த ஆயுதம் 'சின்ன' அளவில் இருந்ததால் ஆசிட் அங்கேயே சிந்தி விட்டது.நாங்கள் தப்பித்தோம்.

இதனை எல்லாம் தாண்டிதான் இந்த கூட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.கூட்டத்துக்கு வந்த மக்கள் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.இனிமேல் நாம் காலரை தூக்கி சொல்லி கொள்ளலாம்.
‘ 2011 நம்ம கையில ‘
‘அண்ணன் டிபிசிடி தான் அடுத்த முதல்வர்’


Saturday, August 14, 2010

பிடித்த பத்து பெண்கள் (18+) !!!!

பதிவுலகில் தொடர்பதிவு விளையாட்டுகள் தற்போது அதிகமாகி விட்டன..இது ஒரு வகையான அன்புத்தொல்லையா இருக்கு.இந்த விளையாட்டுக்கு என்னை அழைத்த திரு.பிரபு அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவரை தனிப்படை தேடி வருகிறது.(எதுக்கா? அத அவர் மாட்டினதுக்கப்புறம் சொல்றேன்)

சரி..வள வளன்னு பேசாம மேட்டருக்கு வரேன்..டைட்டன் யுவர் சீட் பெல்ட்ஸ்..பீ ரெடி டு  ஃபீல் ஏ நைஸ் ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ் (பில்டப் கொஞ்சம்  ஓவரா இருக்கோ? ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டா இப்படித்தான் )..இந்த பதிவுக்கு எதுக்கு 18+னு கடைசியா சொல்றேன்..

மிஸ் மீனா:
இவர் பேரு வேற..பார்க்க கொஞ்சம் மீனா மாதிரி இருப்பாங்க.டிவில மீனாவை பாக்கும்போது இவங்கள நினைச்சும்,இவங்கள பாக்கும்போது மீனாவை நினைச்சும் வாட்டர்பால்ஸ் விட்டுருக்கேன்..அப்போ எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயசிருக்கும்..முதல்முதலில் ஜொள்ளு விட்டது இவங்கள பார்த்துதான்.நான் என்னதான் நல்லா படிச்சாலும் என்னை டியூசனுக்கு அனுப்பும் கெட்ட பழக்கம் என் அப்பா,அம்மாவுக்கு உண்டு.அப்படிதான் பள்ளி முடிந்ததும் எக்ஸ்ட்ரா கிளாஸ் இவங்கட்ட படிச்சேன்.அவங்க அங்க சொல்லி கொடுக்குறது ஆல்ரெடி நான் படிச்சதுதாங்கிறதுனால அங்க சும்மா உக்காந்துருப்பேன்..அப்போதான் ஒரு நாள் அவங்க நான் உக்கார்ந்திருந்த டெஸ்க் மேல அவங்க கைய வைக்க , சும்மா இருந்த நான் அதுக்கு மேல சும்மா இருக்க முடியாம அவங்க விரலை தடவ ஆரம்பிச்சுட்டேன்.அதுக்கப்புறம் எப்படா டியூசன் வரும்,எப்படா கைய சாரி விரலை நோண்டலாம்ன்னு யோசிச்சிட்டே இருப்பேன்..இப்படியே நான் பண்ணிட்டு இருக்குறப்ப ஒரு நாள் என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஃ ப்ரண்டு (ம்க்கும் நல்ல பிரண்டு) பாத்துட்டான்.அதுல இருந்து அந்த பழக்கத்தை விட்டுட்டேன்..

மிஸ் X :
இவங்க விரல் சம்பவத்துக்கு அடுத்த வருஷம் எனக்கு கிளாஸ் மிஸ்ஸா வந்தாங்க..பெயரை பாத்துட்டு தப்பா நினைச்சிடாதீங்க.நல்ல மிஸ்தான்.பெயர் சொல்லக்கூடாதுன்னுதான் அப்பிடி.இவங்க டியூசன் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டதுனால டச்சிங் இங்க மிஸ்ஸிங் :( ஒருமுறை பள்ளியில் டூர் கூட்டிட்டு போன போது லாஸ்ட் சீட் கார்னரில் இடம்பிடித்து விட்டேன்..ஆனால் என் தோழன் அந்த இடத்தைக் கேட்கவே ஈவ்னிங்கில் இருந்து அந்த இடம் அவனுக்கு என்று டீலானது.இதற்கிடையில் அவன் வைத்திருந்த ஜாமை நான் கொஞ்சம் கேட்க அவன் மறுக்க டீல் நோ டீல் ஆனது.இந்த நிலையில் இரவு நேரத்தில் நான் ஜன்னலோரம் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்த மிஸ்.X எனதருகே வந்தமர்ந்து என்னை அவரது மடியில் போட்டு தூங்க வைத்தார்.அதுவரை கண்டிப்பான மிஸ்ஸாக மட்டுமே அவரைப் பார்த்து வெறுத்த என்னை அவரின் அரவணைப்பு இந்த லிஸ்டில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்து விட்டது :)

மிஸ் தேவயானி :
என் பள்ளிப் பருவத்தில் என்னை மிகவும் சோதித்தது இவர்தான்.பார்க்க கொஞ்சம் அமோகாவும் தேவயானியும் கலந்த தோற்றத்தில் இருப்பார்.நன்றாக பாடம் நடத்துவார்.குரலும் சோ ஸ்வீட்.மணமான பெண்களை சைட் அடிக்கக்கூடாது என்ற எனது கொள்கையை கடுமையான மறுபரிசீலனைக்கு உள்ளாக்கியவர்.இவர் புதிதாய் வகுப்புக்கு வந்த இரண்டாம் நாளிலேயே என் பெயரை தனியாக சொல்லி அழைத்ததால் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.இவரிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டால் தன் உடை மீதான கான்ஷியஸ்னசை இழந்து விடுவார்.இவர் 'structure of .. ' என ஆரம்பிக்க மாணவர்கள் வேறொரு ஸ்ட்ரக்சரைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தனர்.இதையெல்லாம் பார்த்தால் மார்க் குறைந்து விடும் என்றெண்ணி அவரது வகுப்பு நேரங்களில் நான் தூங்கி விடுவது (அட்லீஸ்ட் தூங்குவது போல் நடிப்பது) என முடிவெடுத்தேன்.ஆனால் சீன் பார்த்த மாணவர்கள் என்னை விட அதிக மார்க் எடுத்து விட்ட காரணத்தினால் நான் எனது தூக்கத்தைக் கலைக்க வேண்டியதாகி விட்டது.பின்னர் ஏதோ ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நன்னாளில் நான் திருந்தும் வரை அவர் வகுப்பில் தூங்காமல் விழித்து விழித்து 'கவனித்துக்' கொண்டிருந்தேன்.ஆனாலும் ஏதோ ஒன்று என்னை உறுத்திக் கொண்டிருந்தது.பள்ளி விட்டு போவதற்கு முன்னால் அவரிடம் நடந்ததை சொல்லி இனிமேல் வகுப்பில் உடை மீதும் கொஞ்சம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ள எத்தனிக்கையில், ஜூனியர் மாணவர்களின் காய்ந்து போன முகங்கள் கண்முன் விரிய அந்த எண்ணத்தை டிராப் செய்து விட்டேன்.

சினேகா:
ஒரு மூன்று,நான்கு வருடத்துக்கு முன்னால் என் தூக்கத்தை கெடுப்பதில் முதலிடம் இவளுக்குத்தான்.ஆளும் பார்க்க சினேகா போலவே செம கிக்காக இருப்பாள்.இவள் என்னருகில் வரும்போது  நான் மூச்சு விட்டதை விட பெருமூச்சு விட்டதே அதிகம்.இதுக்கு மேல சொன்னா அப்புறம் கூகிளில் அஜால் குஜால் கதைகளில் இந்த பதிவு வந்து விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


நடிகை ஷாலினி:
ஷாலினி - இவரை எனக்கு சின்ன வயதிலிருந்தே ரொம்ப பிடிக்கும்.இவர் சின்ன வயதில் நடித்த போது எனக்கு ரொம்ப சின்ன வயது.காதலுக்கு மரியாதை படம் வந்த புதிதில் அந்த படத்தின் போஸ்டரைக் கூட விட மாட்டேன்.டிவியில் அந்த படத்தின் பாடல்களை எப்போது போடுவார்கள் என டிவியின் முன்னால் தவமிருப்பேன்.என்னவென்றே தெரியவில்லை அப்படி ஒரு கிரேஸ் ஷாலினியின் மீது.இப்போதும் கூட அது அப்படியே இருக்கிறது.என்ன அஜித்தை கட்டிக் கொண்டாரே என்னும் சின்ன கோபத்தை தவிர.

உஃப்...................அப்பாடா.....................
அஞ்சு பொண்ணுங்களுக்கே  மூச்சு வாங்குது..

இதுல இன்னும் அஞ்சு எல்லாம் தாங்காது..இதோட நிறுத்திக்குவோம்.

டிஸ்கி: இந்த பதிவுல வர்ற பெண்கள் எல்லாருக்குமே இப்போ வயசு 18-க்கு மேல இருக்கும்.அதுதான் இந்த பதிவுக்கு 18+ :)

டிஸ்கி 2 :ரொம்ப நாளா கிடப்பில் கிடந்ததை தூசி தட்டி கொஞ்சம் எடிட் பண்ணி ரொம்ப சோம்பேறித்தனம் பட்டு பாதிலேயே நிறுத்தின பதிவு.யாராவது விருப்பம் இருந்தா கண்டினியூ பண்ணுங்க..

கடைசியா சேர்த்தது : கொஞ்ச நாளா என்னென்னமோ நடக்குதுங்க..விகடன்ல நம்ம ட்வீட் வருது..மதன் கார்க்கி நம்ம ப்ளாக்ல கமென்ட் போடுறாரு..இந்த வாரம் அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு :) 



Tuesday, August 3, 2010

எந்திரன் கதை !!

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் மணி ௦௦௦௦௦00:43..

'இரும்பிலே ஓர் இருதயம்' பாடலை தொடர்ந்து பத்தாவது தடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.அதிலும் பாடலின் 35 வது செகன்ட் முதல் 55 வது செகன்ட் வரை வரும் இசை என்னை ஏதோ செய்துக் கொண்டிருக்கின்றன.

சரி.கதை சொல்றேன்னு சொல்லிட்டேன்.கதையை சொல்லிட்டு அப்புறம் பாட்டை பத்தி பாப்போம்.







'விஞ்ஞானியான ரஜினி ஒரு ரோபோ உருவாக்குறாராங்க.அது திடீர்ன்னு உணர்ச்சி வந்து காதலிக்க ஆரம்பிச்சுடுது.அதுனால வர்ற பிரச்சனைகளும்,சுவாரசியங்களும் தான் கதை'

என்னாது..அதான் எங்களுக்கு தெரியுமேங்கிறீங்களா.வாஸ்தவம்தாங்க.எனக்கும் அவ்ளோதான் தெரியும்.

வெயிட் வெயிட்.உடனே கோவப்பட்டு 'X' அ  அமுக்கிடாதீங்க.சொல்றேன் சொல்றேன்.டிரைலரை உன்னிப்பாக கவனித்தால் ஒரு விஷயம் புரியும்.(ஒன்னுதாங்க புரிஞ்சுச்சு.ப்ளீஸ் விட்டுடுங்க !) ஐஸ் அடிக்கடி ரோபோவுக்கு முத்தமிடுகிறார்.ரோபோ விஞ்ஞானியின் காதலுக்கு தூது போகிறது.ஏன்னா அவருக்கு காதல் செய்ய நேரமில்லை.செல்லமாக ஒரு பொம்மையை கொஞ்சுவதை போல் அதைக்  கொஞ்சுகிறார்.அதை வைத்து ரோபோவுக்கு உணர்ச்சிகள் பொங்கி ஒரு கட்டத்தில் ஐஸை காதலிக்க ஆரம்பித்து விடுகிறது.அதனால் தான் உருவாக காரணமாக இருந்தா விஞ்ஞானியிடம் சண்டை போட்டுக் கொண்டு ஐஸை தூக்கிக் கொண்டு போய் விடுகிறது.இதற்கிடையில் ஐஸையும் வில்லன்களிடம் இருந்து காக்கிறது.
ஒரு நிமிஷம்.நாமளே இவ்ளோ யோசிச்சா ஷங்கர் எவ்ளோ யோசிச்சிருப்பாரு.பார்க்கலாம்.மேல நான் சொன்னது சரியா இருந்தா நான் புத்திசாலி.சரியா இல்லேன்னா நீ முட்டாளான்னு  கேக்குறீங்களா ? ஐ,அசுக்கு புசுக்கு.சரியா இல்லேன்னா ஷங்கர் புத்திசாலி.

ஓகே.இப்போ மறுபடியும் பாட்டை பாக்கலாம்..யாரும் பழக்க தோசத்தில தம்மடிக்க எந்திரிச்சு போனா பிச்சு பிச்சு.இது தலைவர் படம்.

இதுநாள்வரை இந்த பாடலை போல் எந்த பாடலும் இப்படி பைத்தியம் பிடித்துக் கேட்டதில்லை.இந்த பாடலின் வரிகளா,இசையா,இல்லை பாடகர்களின் குரலா என்னை ஈர்த்தது எதுவென தெரியவில்லை..இந்த பாடலில் இருக்கும் மந்திர சக்தி இந்த நேரத்தில் எனது தூக்கத்தை ஆக்கிரமித்து பதிவெழுத தூண்டி விட்டது.

இந்த பாடல் படமாக்கிய விதத்திலும் சொதப்பாமல் இருந்தால் ,தயங்காமல் சொல்லி விடலாம் 'இந்த வருடத்தின் ஹிட் இதுவென்று'.

ரோபோவின் காதலையும்,அதைக் காதலிப்பதில் அந்த பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளையும் சொல்கிறது பாடல்.அதிலும் கீழே உள்ள வரிகள் ஒருமுறை என் நண்பர்களுடனான உரையாடலின் போது பேசப்பட்டவை.

'தொட்டுப் பேசும் நேரம் ஷாக்கடிக்க கூடும்.
காதல் செய்யும் நேரம் மோட்டார் வேகம் கூடும்
இரவின் நடுவில் பேட்டரிதான் தீரும்'

மேட்டர் இதுதான்.கல்லூரியில் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி திடீரென்று என்னைப் பேச சொல்ல நானோ என்ன பேசவென்று தெரியாமல் அப்போது பேப்பரில் படித்த செக்ஸ் ரோபோவைப் பற்றி அள்ளி விட்டேன்.நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா.அவங்களுக்குதான் பாடத்தை தவிர மத்த  எல்லாத்திலயும் டவுட்டு நல்லா வருமே.ஆரம்பித்தார்கள்.

'டேய் ரோபோன்னு சொல்ற ஷாக் அடிக்காதா?'
'இல்லடா..மேல இன்சுலேட்டிங் மெட்டீரியல் போட்டுருப்பாங்க.ஒன்னும் கவலை வேணாம்'ன்னு சொன்னேன்.

அடுத்து செந்திலோட ஒன்னு விட்ட தம்பிக்கு ரெண்டு விட்ட பையன் ஒருத்தன் கேட்டான்

'சப்போஸ் நாம லாக் ஆகி இருக்கிற நேரத்துல பேட்டரி இறங்கிடுச்சுன்னா என்னடா பண்றது?'

'மறுபடியும் எந்திரிச்சு போயி சார்ஜ் ஏத்திக்கோடா'

'எசகுபிசகா மாட்டிக்கிட்டு இருக்கும்போது அப்படியே உள்ளே இருந்து வெளிய எடுக்க முடியலேனா என்னா பண்றது? அப்போ எப்படி எந்திரிச்சு போறது?' என அவன் கேட்டது தான் தாமதம்,சுற்றியிருந்த அனைவரும் குபீரென சிரித்து விட்டோம்.இப்போது கூட 'அதை' நினைத்தால் என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.(அவனுக்கு நான் லாஜிக்கலாக யோசித்து ஒரு பதிலை சொன்னேன்.அதை இங்கே சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது)

டிஸ்கி: மதன் கார்க்கி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.ஒருவேளை அவருட்டயும் இதே சந்தேகத்தை அவரோட மாணவர்கள் கேட்டுருப்பாங்களோ? அவரை எப்பவாச்சும் மீட் பண்ணா கேக்கணும்.

டிஸ்கி 2 :இந்த எந்திர சக்தியை எந்த 'கண்ண'பிரானாலும் தடுக்க முடியாது.எத்தனை களவாணிப் பயல்களை ஆதரித்தாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறாது.ஹி ஹி ஹி !!!

Thursday, July 29, 2010

நலம்தானா நண்பர்களே !!



வந்தாச்சு வந்தாச்சு !

நான் மறுபடியும் பதிவெழுத வந்தாச்சு !! 

இடையில் சில நாட்கள் வேலை அதிகம் இருந்ததால் (உடனே 'யாரோட இடையில்' ன்னு எல்லாம் கமென்ட் போட்டு கலாய்க்க கூடாது) பதிவெழுத முடியாமல், பின் ஒரு நன்னாளில் பழைய வேகம் வந்து 'இனி எப்படியாவது பதிவெழுதி விடுவது' என முடிவெடுத்து இதோ வந்து விட்டேன்.. 

எதை எழுதுவது என தெரியவில்லை..பாதியில் ட்ராப்டில் தூசி மண்டிக்கிடக்கும் பதிவுகளை போடுவதா அல்லது புதிதாக எழுதுவதா என தெரியவில்லை..

சரி..ட்ராப்டில் இருப்பதை 'பொக்கிஷ'த்துக்கு அனுப்பி விட்டு புதிதாக வந்த மதராசபட்டினம் , களவானி படங்களின் விமர்சனங்களை எழுதலாம் என நினைத்தால் அதை ஏற்கனவே பலர் எழுதி விட்டார்கள்..பதிவுலகுக்கு ரீ-என்ட்ரியாக வரவிருக்கும் பதிவு கொஞ்சம் புதிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க தோன்றுகிறது என மனம் டைப்படிக்க சொல்கிறது..

பதிவுகள் போடாவிட்டாலும் அவ்வப்போது பதிவுலக நண்பர்களிடம் இணையம் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடுதலில்('டச்'சுக்கு தமிழில் இதுதானே அர்த்தம்) தான் இருந்தேன்..

தமிழ்,அர்த்தம் என்றவுடன் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.'அட்ஜஸ்ட்' என்னும் தமிழ் வார்த்தைக்கு செம்மொழி அர்த்தம் என்ன? நானும் யோசித்து யோசித்து பார்த்தேன்.பொறுத்தல்,அமைதியாக இருத்தல் இதை தவிர வேறு எந்த வார்த்தையும் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது.சரி ஒரு வேளை 'அட்ஜஸ்ட்' என்பதே செம்மொழி வார்த்தைதானோ என வரைமுறைக்கு வந்தால் 'ஜ' இடிக்கிறது.போதாக்குறைக்கு 'ஸ்' வேறு.ஸ்ஸ்ஸப்பாஆஆ !! உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..இல்லையென்றால் 'ஜ'வையும்,'ஸ்'சையும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போக வேண்டியதுதான்.'ஜெ'வையும் 'தாஸை'யும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டவர்களுக்கு இது ஒன்னும் பெருஞ்சிரமமில்லை.

என்னடா திடீரென்று அரசியல் பக்கம் தாவி விட்டேனென்று நினைக்கிறீர்கள் சரிதானே.'இந்த வயதில் எதற்கு அரசியல்.ஒழுங்காக தொழிலை பார்க்கலாமே?' என சிலர் சொல்லலாம்.இதைதான்  நாங்களும் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.கேட்க மாட்டேன்கிறாரே.சரி அவர் தளவிதி(இங்கு எழுத்துப்பிழை என நினைப்பவர்கள் பதிவுக்கு வெளியே நிற்க வைக்கப் படுவார்கள்) அவர் கால்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில்.

சரி..எனக்கு தூக்கம் தூக்கமா வருது..நாளைக்கு பார்க்கலாம்.

டிஸ்கி: பதிவில் நிறைய கொம்பு தெரிவதாக உங்களுக்கு தோன்றினால் அது மிகையல்ல.இனிமே  எல்லாம் அப்படித்தான் 

Saturday, February 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - முற்றிலும் யூத்துகளுக்காக

 விண்ணைத்  தாண்டி வருவாயா - இந்த படத்தை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும்.அவர்தான் த்ரிஷா - அவர் இந்த படத்தில் அவ்ளோ அழகு.இனிமேல் 'த்ரிஷா இல்லைனா திவ்யா' என்றும் யாரும் சொல்ல மாட்டார்கள்.எனக்கு த்ரிஷாதான் வேணும்ன்னு அடம்பிடிப்பார்கள்.


படம் முழுக்க ஒரு தேவதை போலவே வந்து போகிறார்.தேவதை என்ற சொல்லுக்கு த்ரிஷா என்று இன்றைய இளைஞர்கள் அர்த்தம் சொல்லுவார்கள்.வெகு சீக்கிரமே ஒரு கோவில் கட்டினாலும் அது அசாதாரணம் இல்லை.நான் படம் பார்க்க சென்றதே த்ரிஷாவுக்காகதான். அந்த எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செய்து விட்டார்கள் இந்த படத்தில்.

அவரின் அந்த கர்லி ஹேரை சொல்லவா இல்லை அந்த மென்மையான பார்வையை சொல்லவா இல்லை கழுத்துக்கு அழகு சேர்க்கும் அந்த டாலரை சொல்லவா இல்லை புடவையை கொஞ்சம் தளர்வாக உடுத்தியிருக்கும் அழகை சொல்லவா இல்லை அந்த ஸ்டைலான நடையை சொல்லவா.எதைச் சொல்லவென்றே தெரியவில்லை.அதிலும் நான் சொல்ல போகும் இந்த காட்சியில் யாராக இருந்தாலும் த்ரிஷாவின் ரசிகராகிவிடும் வாய்ப்பு இருப்பதால் த்ரிஷாவை தொடர்ந்து வெறுத்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காட்சியில் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

த்ரிஷாவின் திருமணத்தைப் பார்ப்பதற்காக கேரளா செல்லும் சிம்பு அங்கு இரவில் அவரை தனிமையில் சந்திப்பார்.அப்போது ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கும் த்ரிஷா அந்த இரவொளியில் நிலவாய் மின்னுவார்.

                      தொலைதூரத்து வெளிச்ச்சம் நீ !
                      உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே !!

இந்த வரிகளை நிச்சயமாக தாமரை அந்த ஸ்பாட்டில் தான் எழுதியிருக்க வேண்டும்.கச்சிதமாக பொருந்துகிறது த்ரிஷாவிற்கு.படத்தின் இறுதிவரை எல்லாக் காட்சிகளிலும் நேர்த்தியான உடை தேர்வு செய்த உடை வடிவமைப்பாளர் பாராட்டுக்குரியவர்.

அப்புறம் சிம்புவை பற்றி என்ன சொல்ல - மனிதர் பல இடங்களில் வாரணம் ஆயிரம் சூர்யாவை போல் நடிக்க முயன்று தோற்றிருக்கிறார்.சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எரிச்சலை வரவழைக்கிறது.எனக்கு ஆரம்பத்தில் சிம்புவை இந்த பாத்திரத்தில் பொருத்திப் பார்ப்பது கடினமாக இருந்தது.போக போக சரியாகி விட்டது.இதில் விரலாட்டி பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்திருப்பது மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

படத்தில் சிம்புவின் நண்பராக வருபவர் கொஞ்சம் மெதுவான திரைக்கதைக்கு ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார்.அவரின் முகமும் அவரின் குரலும் இவர் இதற்கு முன்னர் ஏதோ ஒரு படத்தில் நடித்தவர் என்று சொல்லுகின்றன.என்ன படம் என நினைவில்லை.

இந்த படத்தில் இன்னொரு நடிகர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.திரையில் அவரின் முகத்தை தேடாதீர்கள்.உங்களால் கண்டுபிடிக்க முடியாது.அவர்தான் பின்னணி இசை.ரகுமான் அவரின் வாத்தியங்களை வைத்து நம்மை மகுடி கேட்ட பாம்பாய் மயக்குகிறார்.குறிப்பாக சிம்பு முதலில் த்ரிஷாவை பார்க்கும் போது கேட்டில் சாய்வார்.அப்போதும் அப்புறம் சிம்பு குத்துச்சண்டையிடும் போதும் பின்னணி இசை செம!பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது.இனி படு ஹிட்டாகி விடும்.

காதலில் வரும் நிஜமான பிரச்சனைகளை யதார்த்தத்தோடு படமாக்கியிருக்கிறார்கள்.நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான காதல் கதைதான். ஆனால் நிறைய காட்சிகள் வாரணம் ஆயிரத்தை நினைவுபடுத்துகின்றன.அந்த ரயில் காட்சி,ஹீரோ காதலியை தேடி செல்லும் காட்சி,பாடல்களில் ஒரு ஐந்தாறு வெளிநாட்டு பிச்சைக்காரகள் ஹீரோவை சுற்றி ஆடும் காட்சி,இப்படி நிறையவே.அப்புறம் ஒரு பெண்ணை பார்த்த நொடியில் காதல் வருவது,பாதி காட்சிகளில் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்றவை  கவுதம் பாணியாகவே மாறி விட்டது.ஆனாலும் படம் பிடிக்கத்தான் செய்கிறது.

ஒரு காட்சியில் கவுதம் சுய எள்ளல் செய்கிறார்.அதைப் பார்த்த பின்பு  இப்படத்தில் அதை கைவிட்டுவிட்டார் என நினைத்தால் அதைத்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார்.இந்த படம் ஏ சென்டர் படம் என்றெல்லாம் சொல்லப் போவதில்லை.அப்புறம் சில குசும்பர்கள் 'நானே என்னை ஏ கிளாஸ் என்று சொல்லி நுண்ணரசியல் செய்வதாக' சொல்லும் அபாயம் இருப்பதால் அதை உங்க கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

'பச்சக் பச்சக்' என நினைத்த மாத்திரத்தில் சாதாரணமாக படத்தில் கிஸ் அடிப்பதால் 'ஆ ஊ ன்னா கிஸ் அடிச்சுடுறாங்க டா' என்ற கமெண்டை எல்லா தியேட்டர்களிலும் கேட்கலாம்.மொத்தத்தில் படத்தில் பிரித்து சாரி பிரிக்காம மேய்ந்திருக்கிறார் (யார் யாரை என்றெல்லாம் கேட்கக்கூடாது.அதை திரையரங்கில் காண்க!).இப்படம் வயதானவர்களுக்கு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.படத்தின்இரண்டாம் பாதி தொய்வாக செல்வதாக சிலர் சொல்கின்றனர்.ஆனால் எனக்கு படத்தில் பிடித்ததே இரண்டாம் பாதி தான்.

இன்னொரு முக்கியமான விஷயம்..'a film by ' என க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி என்டு கார்ட் போடுவார்கள்.அதை நம்பி வெளியே வந்து விடாதீர்கள்.ஆபரேட்டரிடம் படம் முடிந்து விட்டதா என கன்பார்ம் செய்து விட்டு வெளியேறவும்.

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Saturday, February 13, 2010

காதல் - காதல் - காதல்

மு.கு: இது காதலர் தின சிறப்பு பதிவல்ல..காதலர் தினம் என்பது காதலி கிடைக்காதவர்களுக்கும்,கிடைத்த காதலியை மிஸ் செய்தவர்களுக்கு மட்டுமே..வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!!

உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டத்தில் ஒவ்வொரு காதலரும் குதூகலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் காதலிப்போருக்கும், காதலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும்,காதலின் சம்மதத்துக்கு காத்திருப்போருக்கும்,காதலித்து கரை ஒதுங்கியவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!

காதல் - இன்றைய மட்டுமல்ல என்றைய இளைஞர்களுக்கும் அது ஒரு கனவு..என் பள்ளி நாட்களில் சில நண்பர்களின் காதலைக் கண்டு நம்மை இப்படி காதல் செய்ய யாரும் வர மாட்டார்களா என ஏங்கியதுண்டு..இன்று அந்த ஏக்கத்தை என் நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்..ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன்..காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சியால் வந்து விடக்கூடாது என்று..ஒரு பெண்ணிடம் ஏற்படும் உடல் ரீதியான ஈர்ப்பு எனக்கு வெகு நாட்கள் நீடித்ததில்லை..அதனால் வாழ்க்கை முழுதும் நம்முடன் வரப்போகும் பெண் மாறாத அன்பையும் உண்மையான அக்கறையும் ஏன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்..

என்ன செய்வது? இது போல புரட்சிகரமாக சிந்தித்து விட்டாலும் கூட சில பெண்களை காணும் போதெல்லாம் மனம் தடுமாறவே செய்தது..என் மனதை அலைபாய விடாமல் பெவிக்விக் போட்டு ஒட்டுவது பெரிய வேலையாக இருந்தது..என்னதான் ஒட்டினாலும் கண்ணை மட்டும் 'கண்'ட்ரோல் செய்ய முடியவில்லை..சுடிதார் இருக்கும் திசையெல்லாம் கண்கள் மேய்ந்து கொண்டுதானிருந்தது..

மேலே இருக்கும் பத்தியில் கடைசியாக 'காதலிக்கும் வரை' என்று போட்டு கொள்ளுங்கள்..காதல் வந்து விட்ட பிறகு பிற பெண்களை சைட் அடிப்பது குறைந்து விட்டது...அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க..சரி நாம வேற விசயத்த பத்தி பேசுவோம்..இந்த டாபிக்கில் இனியும் பேசுவது எனக்கு நல்லதல்ல..

நீங்க ஒன்ஸ் காதலிக்க ஆரம்பிச்சீங்கன்னா கவிதை அப்படியே சும்மா சிரேயாவை பார்த்த தலைவர் மாதிரி வாட்டர்பால்ஸா கொட்டணும்..ஆனால்  சில பேரு காதலிக்காமலே நல்லா கவிதை எழுதுறாங்க..காதலிக்கிற மாதிரியே அந்த உணர்வுகளோடு எழுதுவது எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது..

                                        காதலியில்லாத சிலரின்
                                        கவிதைகள் - அவர்கள் எப்போதிருந்து
                                         உன்னைக் காதலிக்க ஆரம்பித்தார்கள் !

மேலே இருப்பதை நீங்கள்  கவிதையாக எடுத்துக் கொண்டாலும் சரி..வாக்கியமாக எடுத்துக் கொண்டாலும் சரி..எனக்கு கவலை இல்லை..ஆனால் சில பேரு நமக்கு கவிதை எழுத வரலேன்னு கவலைப்படுவாங்க..அவங்களுக்காக - இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு..இருக்கவே இருக்கு சினிமா பாடல்கள்..பாடல்களின் நடுநடுவே வரும் வரிகளை கவ்விக்கிட்டு அதை உங்கள் மனம் கவர்ந்தவரிடம் அப்பப்ப சொன்னா போதும்..இதோ இது மாதிரி..

//மகிழ்ச்சியில் என்னை  ஆழ்த்த  பரிசுகள்  தேடி  பிடிப்பாய்
கசந்திடும்  செய்தி  வந்தால், பகிர்ந்திட  பக்கம் இருப்பாய்
 
நோய்  என  கொஞ்சம்  படுத்தால் , தாய்  என  மாறி  அணைப்பாய்! //

//உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூப்பூக்கும் 
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும் 
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும் 
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்!! //

// விண்சொர்க்கமே பொய் பொய் !

 என் சொர்க்கம் நீ பெண்ணே!! //

இதையெல்லாம் அதே ராகத்துல பாடாம கவிதை மாதிரி சொல்லி அவங்கள இந்த வரிகள் எந்த பாடல்ன்னு கண்டுபிடி பார்க்கலாம்ன்னு விளையாடலாம்..(இதெல்லாம் எந்த பாடலின் வரிகள் என்று நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஜெனரல் நாலெட்ஜ் எவ்வளவு என்று)அப்புறம் முக்கியமான ஒன்று : இந்த வரிகள்  'என் சொந்த படைப்பு' என்று புருடா விட்டு பின்னால் மாட்டி கொண்டால் அவ்வளவுதான்..நீங்கள் சொந்த கவிதை எழுதினால் கூட நம்ப மாட்டார்கள்..

கவிதைதான் வேணும்ன்னு அடம்பிடிச்சா இந்த மாதிரி அவுத்து விடுங்க.. அடங்கிடுவாங்க..

                                                          பருக்கள் கூட அழகுதான்
                                                          அவை உன் கன்னத்தில்
                                                           குடியிருக்கும் போது !
                                                           என்னை விட அதிக நேரம்
                                                           முத்தமிடுவதால்
                                                           அவற்றின் மீது பொறாமையும் கூட!


இதெல்லாம் ஓகே..முதலில் பிள்ளை வேணுமே பேரு வைக்க..அப்படிங்கிறீங்களா..(என்னது முதலிலேயே பிள்ளையான்னு கேட்காதீங்க..அது உவமை) காதலி கிடைத்தால் தானே கவிதை சொல்ல முடியும்..பொறுமை..சீக்கிரமா அமையும்..நட்பை காதலாக மாற்ற துடிப்பவர்கள் கூட மேலே இருப்பது போன்ற  பாடல் வரிகளை அனுப்பலாம்..ஒரு கண்டிஷன்: அதுல 'காதல்' அப்படிங்கிற வார்த்தை வரக்கூடாது..வந்தா முதலிலேயே உஷார் ஆகிடுவாங்க..உடனே தன் தோழியிடம் இது குறித்து டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்..காதலையும் தோழியையும் அருகில் வைத்தால் காதலி கோபித்து கொள்வாள் என்பதால் தோழி அடுத்த பாராவுக்கு தாவுகிறார்..

இந்த தோழிகள் விசயத்தில்  கொஞ்சம் முன் எச்சரிக்கை தேவை..நீங்க ப்ரபோஸ் செய்ய செல்பவரின் தோழி யாரையாவது காதலித்து கொண்டிருந்தால் நோ ப்ராப்ளம்..சப்போஸ் அவங்க காதல் தோற்று போயிருந்தாலோ அல்லது காதலன் கிடைக்காமல் பொருமிக் கொண்டிருந்தாலோ உங்கள் காதலை எலுமிச்சம்பழமாகவும் காதலியின்  தோழியை லாரியாகவும் உருவகம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை..

திடீர் என்று உங்கள் தோழி(காதலியாக மாற போகிறவர்) உங்களிடம் 'ஆர் யு லவ்விங் மீ? ' அப்படின்னு கேட்டா உடனே தலையாட்டிடாதீங்க..உங்களை காதலிக்கும் பெண் துணிந்து இவ்வாறு கேட்க மாட்டாள்..அவளின் அப்ரோச் வேறு மாதிரி இருக்கும்..''உன்னை போல ஒரு சிறந்த நண்பனை பார்த்ததில்லை.உன்னை மாதிரி யாரும் என்னை கேரா பாத்துகிட்டதில்ல'' - இந்த மாதிரி இருக்கும்..உடனே ''ஐ லவ் யூ'' ன்னு சொல்லி காஞ்ச மாடு வயலை பார்த்த மாதிரி பாஞ்சுரகூடாது..பொறுமையா கவுதம் படத்துல வர்ற மாதிரி
''இத்தனை காலங்கள் நீ இல்லாமல் வாழ்ந்து விட்டேன்..இனி வரும் காலங்களில் என் ஒவ்வொரு நாளும் உன்னை சுற்றியே, உனது அன்பின் கதகதப்பில் வாழ ஆசை..சம்மதிப்பாயா ? "

இந்த மாதிரி கேட்கணும்..அவங்க சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் 'ஐ லவ் யூ' சொல்லணும்..ஏன்னா 'ஐ லவ் யூ' என்ற வார்த்தைகள் அதன் புனிதத்தை இப்போது இழந்து விட்டன..சினிமாவும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..

பி.கு: 'எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு?' 'நாட்டுக்கு இப்போ இது ரொம்ப முக்கியம்' போன்ற பின்னூட்டங்கள் கடுமையான ஆட்சேபத்துக்கு உள்ளாகும்..

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Thursday, February 4, 2010

பதிவுலகத்துக்கு குட்பை !

அவ்வளவுதாங்க! எல்லாம் முடிஞ்சு போச்சு..இனிமேல் பதிவுலகத்த விட்டு போயிடலாம்ன்னு இருக்கேன்..ரொம்ப மனசு வெறுத்து போயிட்டேன்..ஒரு சின்ன பையன் எவ்வளவு தான் தாங்குவேன்..எனக்கும் சில உணர்வுகள் இருக்கிறது..ஆள விடுங்கப்பா சாமின்னு நான் புலம்பும் அளவுக்கு என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கிய சில விஷயங்கள் :

==> நான் எங்க போயி பின்னூட்டம் போட்டாலும் என்னை சுத்தி அடிக்கிறதுக்குன்னே சில பேரு இருக்காங்க ..ஸ்மைலி போடுறத கூட சீரியஸா எடுத்துக்குறாங்க..

==> நான் பதிவு போட்ட முதல் ஒரு மணி நேரத்தில் நூறு  ஹிட்ஸ்க்கு மேல வருது..ஆனா அதுல விழுற வோட்டு மூன்று அல்லது நான்கை தாண்ட மாட்டேங்குது..நான் என்ன அவ்ளோ கேவலமாவா எழுதுறேன் ?

==> இந்த கேபிள்,கார்க்கி,பரிசல் போன்றவர்கள் எல்லாம் பின்னூட்டம் போடுவதோட சரி..பாலோ பண்ணுவதோ வோட்டு போடுவதோ கிடையாது..'Follow' பட்டனை அமுக்கி ஒரு ரெண்டு மூணு கிளிக் பண்ணா என்ன குறைஞ்சா போயிடுவாங்க ? என்னை போன்ற சின்ன பதிவர்கள் அவர்களை பின்வாங்க ஆரம்பித்தால் அவர்களுக்கு நூறு பாலோயர் கூட தேறாது..

==> இந்த ராஜுங்றவரு கேபிள் கவிதைக்கு மட்டும் தான் எதிர் கவிதை எழுதுறாரு..நான் எழுதுற கவிதை எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியாதா? நான் கவிதை எழுதாம என்ன கழுதையவா எழுதுறேன்?

==>நான் காதல் (அ) காதலியை பற்றி பதிவு போடுவதால் எல்லாரும் பின்னூட்டத்துல எப்போ கல்யாணம் எப்போ கல்யானம்ன்னு கேக்குறாங்க..ஒரு 21 வயதே நிரம்பியஇளைஞனை இப்படியே கேட்டு உசுப்பேத்துதல் முறைதானா ?

==>சில சமயம் காதலைப் பற்றி பதிவு போட்டு விட்டு அதற்கு வோட்டு கேட்பது எனக்கு என் காதலை விற்பது போல் இருக்கிறது...




மேலே சொன்னதெல்லாம் டூப்பு மச்சி டூப்பு..கீழே சொல்ல போவது தான் டாப்பு...

ஒண்ணுமில்ல..இரண்டு மாத விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பித்து விட்டதால் இனி தொடர்ந்து பதிவு எழுத முடியாது..இனி ஒழுங்காக படித்து ஒரு வேலையில் அமர்ந்தால்தான் எனக்கென்று இருக்கும் ஒரு மிகப்பெரிய  பொறுப்பை 'கை-பற்ற' முடியும்..பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் பதிவு போட முடியும்..நண்பர்களுக்கு பின்னூட்டமோ வோட்டோ போட முடியாது..ரீடரில் தான் பதிவுகளை படிக்கிறேன்..அதுவும் கல்லூரியில் :) என்னை பின்னூட்டமிட தூண்டும்படி(வம்புக்கு இழுக்கும்படி)  ஏதும் பதிவுகள் இருந்தால் அங்கே பின்னூட்டலாம்..மற்ற நண்பர்கள் கோபித்து கொள்ள வேண்டாம்..அப்புறம் முக்கியமான ஒன்று..பாலோயர்ஸ் யாரும் விலகி போயிடதீங்கப்பா..அப்பப்போ பதிவுகள் போடுவேன் :))


ஆணி குறைவாக இருக்கும் மாலை நேரங்களில் டுவிட்டர் பக்கம் நான் தலைகாட்டலாம் சாரி வாலாட்டலாம்..

------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஹைக்கூ:

ஏய் ஓடாதீங்க..நில்லுங்க..ஹைக்கூவை நிதானமாக வாசிக்க வேண்டும்..முதல் இரண்டு வரிகளை மெதுவாக படித்து விட்டு கண்ணை மூடி கவிஞன்(ஹி ஹி! நான்தான்) என்ன சொல்ல வருகிறான் என்று யோசித்து விட்டு பின்பு மூன்றாவது வரியை வாசித்தால் ஒரு உணர்வு கிடைக்கும் பாருங்க..அப்போ நீங்க சொல்லுவீங்க ஹைக்கூகூகூ!!!!!!!

நாத்திகனின்
நெற்றியில் திருநீறு !



வென்றது காதல் !!

-----------------------------------------------------------------------------------------------------------------

அப்புறம் ஒரு ஜோக் போடனும்ன்னு நெனச்சேன்..அதுக்குள்ள கார்க்கி அந்த வடையை லபக்கிட்டார்..இருந்தால் என்ன..என் வேலையை சுலபமாக்கியதற்கு நன்றி !

டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது
டீச்சர்:  தேசிய பூ?
மாணவன்: ஒரு சின்னத் தாமரை
டீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா
மாணவன்: கரிகாலன் காலைப் போல
டீச்சர் : (அடிக்கிறார்)
மாணவன்:  நான் அடிச்சா தாங்கமாட்ட
டீச்சர் : குட்டுக்கிறார்
மாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது
டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்
மாணவன் :??????????????????????????????
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Monday, February 1, 2010

மதுரை கருத்தரங்கம் - ஒரு அரைகுறை பார்வை

எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..அவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறேன்..அரைகுறை பார்வைன்னு ஏன் தலைப்பு வச்சிருக்கேன்னு கேட்கிறீங்களா..என்னாது கேட்கலையா..நீங்க கேக்காட்டியும் நாங்க சொல்லுவோம்..6 மணிக்கு முடிய போகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கெல்லாம் சென்று விட்டேன்..கருத்தரங்கு என்றால் ஏதாவது மொக்கை போடுவார்கள்..நாம் பதிவர்களைமட்டும் சந்தித்து விட்டு வரலாம் என்ற எண்ணமே காரணம்..பாதி நிகழ்ச்சிக்கு மட்டுமே சென்றதால் இது ஒரு அரைகுறை பார்வை ; வேணாம் அரை நிறை பார்வை !

நான் சென்ற போது டாக்டர் ஷாலினி கேள்வி-பதில் செஷன் நடத்திக் கொண்டிருந்தார்..என்னனமோ சொல்றாரு..ராமாயணம் பேசுறாங்க..மகாபாரதம் பேசுறாங்க..இதெல்லாம் தெரிந்து கொள்ள எங்கிருந்துதான் நேரம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை..அது மட்டுமல்ல மிகவும் சுவாரசியமாகவே பேசுகிறார்..அப்போதான் பீலிங்கா இருந்துச்சு..ச்சே..முதலிலேயே வந்திருக்கலாம் என்று..

நிகழ்ச்சி முடிந்ததும் வால்பையன்,தேவன் மாயம் போன்ற பதிவர்கள் குழுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்..நான் ஒரு ஓரமாக நின்று அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..அப்போதான் கா.பா (சாரி! பெயர் பெரிதாக இருப்பதால் சுருக்கிக் கொண்டேன்) வந்து என்னை யாரென்று கேட்டு மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார்..எல்லாரும் கை குலுக்கினார்கள்..செல் நம்பர் வாங்கினார்கள்..மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள்..கா.பா, ஸ்ரீதர்,ஜெர்ரி,தருமி,சீனா,காவேரி கணேஷ்  (ஆணி அதிகமிருப்பதால் அண்ணா,அய்யா போன்றவற்றை நிரப்பி கொள்ளுங்கள் ப்ளீஸ்!) .

வால்பையன் எழுதுவது மட்டுமல்ல பேசுவதும் சூப்பராக பேசுகிறார்..சிலர் நன்றாக எழுதுவார்கள் ஆனால் பேச வராது..எ.கா.க்கு என்னை கூட காட்டலாம் :)..அட! கல்லை கீழே போடுங்கப்பா..சிரிப்பான் போட்டா காமெடியா எடுத்துக்கணும்..வால் சீனா அய்யா குறித்து சொன்ன சின்ன கார் நக்கலை நினைத்து இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்..

கா.பா., ஸ்ரீதர்  குறித்து சொல்லியே ஆக வேண்டும்..தயக்கத்தோடு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தவனை அனைவரிடமும் அறிமுகப்படுத்தி என்னையும் இறுதி வரை கவனித்து கொண்டார்கள்..ஜெர்ரி விடைபெறும் போது என்னிடம் சொல்லி விட்டு கிளம்பினார்..அப்புறம் தருமி அய்யா,சீனா அய்யா ஆகியோர் என்னை போன்ற இளைங்கர்களுடன் பேசும் போது அவர்களும் இளைஞர்கள் ஆகி விடுகிறார்கள்..
முதலில் இவர்களுடன் பேச நான் அஞ்சிக் கொண்டிருந்தேன்..பெரிய மனிதர்கள் நம்மை கண்டு கொள்வார்களா என்று...அவர்களின் பழகும் விதத்துக்கு ஒரு சான்று : நான் கிட்டத்தட்ட மூன்று,நான்கு முறை போய் வருகிறேன் என்று கைகுலுக்கியும் கூட என்னால் போக முடியவில்லை..இறுதி வரை இருந்து விட்டுதான் வந்தேன்..நான் எந்த நிகழ்ச்சிக்கும் இறுதி வரையெல்லாம் இருப்பதில்லை..பாதியிலேயே எஸ்ஸாகி விடுவேன் என்பது கொசுறு தகவல்!

நான் கவனித்த ப்ளஸ் பாயிண்டுகள் :

-.->இவர்கள் யாரிடமும் எந்த ஈகோவும் இருப்பதில்லை..புதிதாக வருபவனிடம் கூட இவ்வளவு தோழமையுடன் பேச முடியுமா என்று வியந்து கொண்டிருக்கிறேன்..

-->அனைவரும் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறார்கள்..இவர்களை பார்த்து சோம்பேறியான எனக்கே 'ஏதாவது உதவி தேவையா' என்று கேட்க  தோன்றியது..

ஒரு மாவட்ட பதிவர்கள் கூடும் போதே இவ்வளவு நெகிழ்ச்சிகள் என்றால் மொத்த தமிழ்நாட்டின் பதிவர்கள் சந்தித்தால்...நினைத்தாலே புல்லரிக்கிறது..

                                 இது போல சொந்தம் தந்ததால் 
                                 கூகிளே வா நன்றி சொல்கிறோம் !!

என்ன ஒரு குறை..எப்போதும் ஒரு முக்கியமானவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பேன்..அவருடன் பேச முடியாததால் கோபித்து கொண்டார்..ஏன்யா சொந்த பந்தங்களை மறக்கும் அளவுக்கா அன்பு காட்டுவீர்கள்..கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் :)

அப்புறம் அவரை சமாதானப்படுத்தி பதிவர் சந்திப்பு குறித்தும் அவர்களின் தோழமையையும் சொன்னேன்..அப்போது அவர் சொன்னது..

'அவங்க எல்லாரையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடனும்ங்க..'

'கண்டிப்பா செல்லம்..அவங்க எல்லாரும்தான் நம் கல்யாணத்தில் சீப் கெஸ்ட் '

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Saturday, January 30, 2010

தமிழ்ப்படம் - பூர்த்தியடையாத எதிர்பார்ப்புகள்


மு.கு : இது விமர்சனம் அல்ல..

இந்த பதிவர்கள் சொல்வதை இனிமேல் கேட்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன்..ஆளாளுக்கு படத்தை ஓவராய் ஏத்தி விட அடுத்த வாரம் படம் பார்க்கலாம் என்ற முடிவை மாற்றி ஆசை ஆசையாய் இன்றே கிளம்பி விட்டேன்..துணைக்கு ஒரு நண்பனையும் அழைத்துக் கொண்டு..(அவன் இனிமேல் நான் கூப்பிடும் எந்த படத்துக்கும் வர போவதில்லை என சொல்லி விட்டான் :((  )

படத்தின் முதல் பாதி தூள் கிளப்பியிருக்கிறார்கள்..ஒரு சில காட்சிகளை தவிர மற்றவைகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்..இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாச்சு..இதுக்கு முன்னால பிரண்ட்ஸ் படத்துக்கு தான் இவ்வாறு சிரித்திருக்கிறேன்..இந்த மாதிரி ஒரு பிரமாதமான நகைச்சுவையுடன் ஒரு முதல் பாதி எங்குமே காணாத ஒன்று..

ஆனால் இரண்டாம் பாதி ????????????????????

எந்த படமானாலும் முதல் பாதி மொக்கை போட்டு விட்டு இரண்டாம் பாதி  அடித்து நொறுக்கியிருந்தால் படம் சுயர் ஹிட்..இங்கே அது தலைகீழ் ஆகியிருக்கிறது...இ.பாதியில் நகைச்சுவை என்பது நீளமான சாலையில்  வரும் கி.மீ பலகையை போல்  ஆங்காங்கே தலை காட்டி விட்டு சென்று விடுகிறது..

அதிலும் D for Death என்று ஒருவர் வருவார்..அவர் யார் என்று திரையில் காண்பிக்கும் போது பாதி கூட்டம் திரையரங்கை காலி செய்து விடுகின்றது..கிளைமாக்ஸ் வரை ஒருவர் உக்காந்து பார்த்து விட்டு வந்தால் அவருக்கு பொறுமை என்பது நாடி,நரம்பு,ரத்தம்,சதை, இன்ன பிற வஸ்துக்களிலும் நிறைய ஊறியிருக்க வேண்டும்..

இறுதியாக நண்பன் கேட்டான்..'இந்த படத்துக்கு ஏன்டா என்னைய இவ்ளோ அனத்தி கூட்டிட்டு வந்த?

'இல்லைடா..பிளாக்ஸ்ல நல்லா விதமா ரிவ்யு போட்டிருந்தாங்க..அதான்டா'...

'அதை எல்லாம் நீ ஏன் நம்புற..ஆ.ஒ. படத்துக்கு கேவலமா எழுதியிருந்தாங்க..படம் எப்படி இருந்துச்சு?'

'சரிடா..இனிமேல் அவங்க சொல்றத நம்பலை' ...

மொத்தத்தில் முதல் பாதி - சரவெடி
இரண்டாம் பாதி - புஸ்ஸான சீனி வெடி  

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Monday, January 25, 2010

விடைதேடல்



எப்போது வேலை கிடைக்கும்?

பெரிய கம்பெனிகள் கேம்பஸ் வருமா?

இந்த முறையாவது டிஸ்டிங்சன் வருமா?

உலக பொருளாதாரம் எப்போது நிமிரும்?

2020இல் இந்தியா வல்லரசாகுமா ?

வாழ்க்கை என்பது என்ன?

நான் என்பது யார்?

கர்மவினை - அதென்ன கருமம்?

எதற்காய் இந்த பிறப்பு ?









முக்கியமில்லை
விடைகள் இவற்றுக்கெல்லாம்!!
இப்போதே
விடைதெரிந்தாக  வேண்டிய
ஒரு கேள்வி!!!





கல்யாணத்த
எங்க ஊரில வச்சுக்கலாமா
அவங்க ஊரில வச்சுக்கலாமா ?
சொல்லிட்டு போங்க...

கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

பி.கு : இந்த டெம்ப்ளேட்ட தமிழ்மணத்துல இணைக்க முடியல..ஏன்னு தெரியல..அது கூட விடைதேடல் தான்..தெரிஞ்சா சொல்லிட்டு போங்க..:))

Tuesday, January 19, 2010

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!






என்னவென்று தெரியவில்லை..சில நாட்களாக கணினி முன்னால் அமர்ந்தாலே தலையின் பின் பகுதியில் இடது புறம் வலி பின்னி பெடலெடுக்கிறது..காரணம் என்னவென்று தெரியவில்லை..மேலே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல tightened muscles என்னும் பகுதியில் ஆரம்பிக்கும் வலி அப்படியே ஒரு ஆர்க் போட்டு இடது புற காதில் வந்து முடிவடைகிறது..வலித்தவுடன் கணினியை அணைத்து விட்டு தலைகாணியில் முகம் புதைத்து கொள்வேன்..மனதுக்குள் 'என் பின்னந்தலையில சுர்ர்ர்ர்ர்ருங்குது'ன்னு பாடல் தோன்றும்..

ஒரு நண்பனிடம் கேட்ட போது ஒழுங்கான முறையில் அமராவிட்டால் வலி ஏற்படும்..கணினிக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் நாற்காலி வாங்கி பயன்படுத்து என்றான்..

சரி என கூறிவிட்டு கூகிளிட்ட போது காரணத்தை கண்டு பிடித்து விட்டேன்..கழுத்தின் பின்புறமுள்ள தசையில் அதிக அழுத்தம் ஏற்படும் போது இது போன்ற வலிகள் ஏற்படுமாம்..இனிமேல் ஒழுங்காக உட்கார்ந்து கொண்டு கணினி பயன்படுத்த வேண்டும்..உங்களுக்கும் இதை போன்ற அனுபவம் இருந்தால் பகிரவும்..

கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும்..அதை நினைத்தால் பயமாகவும் உள்ளது..
போனதும் அவர் ஸ்கேன் எடுக்க சொல்வார்..எடுத்தும் அவர் சொல்ல போவது இந்த இரண்டில் ஒன்றுதான்..

1 . உங்க தலையில ஒண்ணுமில்லை..('யோவ்!மூளை இருந்துச்சுயா, நல்லா பாரு  ' அப்படினுல்லாம் காமெடி பண்ண முடியாது அங்க..)

2 . உங்களுக்கு பெரிய வியாதி இருக்கு..நீங்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்க போறீங்க..

இந்த வலி முதுகுதண்டு அழுத்தத்தால் வந்தால் அவர் சொல்ல போவது ஆப்சன் 1 ..

அவ்வாறு இல்லாமல் நான் பயந்து கொண்டிருக்கும் ஒரு காரணத்துக்காக வந்திருந்தால்
அவர் சொல்ல போவது ஆப்சன் 2 ..

ஆப்சன் 1 அவர் பதிலாக இருந்தால் ஒன்றும் பெரிதாக பயமில்லை..

ஆப்சன் 2 அவர் பதிலாக இருந்தால் 'வாழ்வே மாயம்' பாடிக் கொண்டு மீதி நாட்களை கடக்க வேண்டியதுதான்..

நான் பயந்து கொண்டிருக்கும் காரணம் வேறொன்றும் இல்லை..அடிக்கடி செய்திதாள்களில் போட்டு பயமுறுத்தும் ஒரு மேட்டர்..

அதிகமாக செல்போன் பயன்படுத்தினால் மூளையை பாதிக்கும்..

மணிக்கணக்கில் அடித்த அரட்டை உயிருக்கு மணி அடித்து விடுமோ என்றுதான் பயமாக இருக்கிறது..

பி.கு :  அந்த கவலை எல்லாம் மூளை இருக்கிறவன் அல்லவா பட வேண்டும்..உனக்கேன் இந்த கவலை என்று கேட்க கூடாது..ஏன் என்றால் இது சுய புலம்பல் பதிவு..

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க.. 

Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் கண்ணாடியின் வழியே!!




இந்த படத்தோட கதைய படிக்கணும்னு வந்திருந்தீங்கனா சாரி நான் கதை சொல்ல போவதில்லை..விமர்சனமும் பண்ண போவதில்லை..என் மனதில் பட்ட சில விசயங்களை மட்டுமே எழுத போகிறேன்..

நேத்து ஈவ்னிங் ஷோ  போனேன்..முதலில் 50 ரூபாய் என்றவர்கள் பர்ஸில் இருந்து எடுப்பதற்குள் 100 ஆக்கி விட்டனர்..சரி என்று அடுத்த 50 எடுப்பதற்குள் ஹவுஸ்புல் போர்டு மாட்டி விட்டனர்..பேன்ட் பையை டைட்டாக தைத்த டெய்லரை திட்டிக் கொண்டே வெளியே வந்தேன்..

வரும் வழியில் பார்த்த நண்பன் படத்துக்கு டிக்கெட் புக் பண்ண போவதாக சொல்ல,எனக்கும் ஒன்று ஆர்டர் செய்து விட்டு வந்தேன் அவன் சொந்த செலவில்..இரவு பத்து மணிக்கு வெற்றி திரையரங்கினுள் சென்றோம் (எங்க தியேட்டர் இல்லீங்க)..படத்தை பத்து நிமிடத்துக்கு முன்னரே போட்டு விட்டார்கள்..நான் போகும் போது எம்.ஜி.ஆர் பாடலுக்கு கார்த்தி ஆடிக் கொண்டிருந்தார்..முதலில் இருந்து இராண்டாம் வரிசையில் தான் இடம் கிடைத்தது..கழுத்து வலி இன்னும் விடவில்லை..

அந்த கப்பலையும் தீவையும் பார்த்தவுடனே தோன்றி விட்டது இது சாதாரண படமல்ல என்று..படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க செல்வாதான் தெரிகிறார்..அவரின் படங்களில் வரும் எதையுமே நக்கலாக எடுத்து கொள்ளும் கதாநாயகன், அமைதியாக ஒரு கதாநாயகி (ஆண்ட்ரியா), அப்புறம் இன்னொரு ஹீரோ (ரீமா சென்)..எனக்கென்னமோ படத்தின் முதல் பாதியில் மட்டுமல்ல கிளைமாக்ஸ் வரை ரீமா தான் படத்தின் கதாநாயகனாக தெரிந்தார்..

படத்தின் ட்ரைலரில் கார்த்தி தலையை குனிந்து கொண்டே ஒரு காட்சியில் செல்வார்..அப்போதே வித்தியாசமாய் தெரிந்த அந்த காட்சியின் அர்த்தத்தை படத்தில் காணும் போது சுவாரசியமாக இருந்தது..

முதல் பாதியில் வரும் அந்த ஏழு ஆபத்துகள் நாம் தமிழ் படம் தான் பார்த்து கொண்டிருக்கிறோமா என்னும் எண்ணத்தை ஏற்படுத்தி விட கூடியவை..ஆபத்துகளை அவர்கள் எப்படி கடக்கிறார்கள் என்பதை லாஜிக் பார்க்காமல் பார்க்கவும்..ஏன் என்றால் இப்படம் ஓர் கற்பனை கதை மட்டுமே..

இரண்டாம் பாதியில் வரும் அந்த ராஜா காலத்து கதை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒன்று..அங்கே அந்த குகையில் உள்ளவர்கள் நிறைய வித்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்..அதிலும் ஓரிடத்தில் பார்த்திபன் ரீமாவின் உடலை தொடாமல் நிழலை தொட்டே அவரை எதிர்கொள்வார்..சபாஷ் போட வைத்த காட்சி..

பார்த்திபனுக்கும் ரீமாவுக்கும் நடக்கும் உரையாடலில் சங்க கால வார்த்தைகள் பயன்படுத்தபட்டிருக்கின்றன..புரிதல் ஒன்னும் கஷ்டமாக எல்லாம் இல்லை..பள்ளியில் மேல்நிலை வகுப்பில் செய்யுளை அர்த்தம் புரிந்து படித்திருந்தால் எளிதில் புரிந்து விடக்கூடியது  தான்..

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதற்காக அவர்கள் சிந்திய வியர்வை துளிகள்,மெனக்கெடல்கள் நன்றாகவே தெரிகிறது..ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையும் அவ்வப்போது கண்முன்  நிழலாடுகின்றது..இறுதியில் வரும் போர்க்கள காட்சி இன்னும் பிரமாண்டமாய் எடுத்திருக்கலாம்..செல்வாவின் பேட் லக் (நமக்கும்தான்)..அவருக்கு கிடைத்தது இவ்வளவு மட்டுமே செலவு செய்யும் தயாரிப்பாளர்..

இசையும் ஒளிப்பதிவும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சிறப்பான ஒரு ஒளி-ஒலி அனுபவத்தை தருகின்றன..

படத்தில் எனக்கிருந்த குறை இரண்டே இரண்டுதான் :

1 . மிகவும் எதிர்பார்த்த இரண்டு பாடல்கள் படத்தில் இல்லை..பெம்மானே - நான்கு வரியோடு அமுங்கி விடுகிறது..மாலை நேரம் - இன்னும் அவர்களுக்கு பொழுது சாயவில்லை போலும்..

2 . சில காட்சிகளை தியேட்டர்காரர்களே  கட் செய்து விட்டார்கள் என்று படம் பார்த்து விட்டு சில விமர்சனங்களை படிக்கும் போது தெரிந்தது..

மற்றபடி பெரிதாக குறை ஒன்றும் இல்லை..

எத்தனையோ படங்களை லாஜிக் பார்க்காமல் அற்ப விஷயங்களுக்காக ஓட வைத்திருக்கிறோம்..முதன் முறையாக நிகழ்காலத்தையும் வரலாறையும் இணைக்கும் இப்படத்தை தமிழ் என்னும் ஒரே காரணத்துக்காக ஓட வைக்கலாமே...

இறுதியாக ஒரு வேண்டுகோள் : எப்போதாவது வரும் இது போன்ற படைப்புகளை முதல் நாளிலேயே படத்தின் குறைகளை மட்டும் சொல்லி, புதிய முயற்சிகளை புறந்தள்ளி விடாதீர்கள்..தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே  ப்ளீஸ்!!

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..



Thursday, January 14, 2010

அந்த மூன்று வார்த்தை!



                                         சூர்யா,மாயா - இவங்கதான் இந்த கதையோட ஹீரோ அண்ட் ஹீரோயின்.. இப்போ கதைக்குள்ள போவோம்.

இருவரும் வழக்கம் போல் மாமன் பிள்ளைகளாய் பிறக்க போய் கதை எழுதுபவனின் சதியால்  பக்கத்து வீட்டுகாரர்கள் என்றளவில் மட்டும் உறவாகி போனார்கள்.

சிறு வயதிலிருந்தே மிகவும் நெருங்கி பழகிய இருவரும் தங்கள் பெயர் ஒரே போல் முடிய வேண்டும் என்றெண்ணி சூரியன் சூர்யாவாகவும்,மாயன் மாயாவாகவும் பெயர் மாற்றி கொள்ள தீர்மானித்து சூரியன் மட்டும் பெயர் மாற்றலில் வெற்றி பெற்றான்..ஏன்னா மாயன் என்பது ஆம்பிள பேர்..அத எப்படி பெண் குழந்தைக்கு வைப்பாங்க..(சும்மா வாசிக்கனும்னு கடனுக்கு வாசிச்சா இப்படிதான் ஆகும்.கவனமா படிங்க..)

சூர்யாவுக்கு ஏகப்பட்ட கேள் பிரண்ட்ஸ்..ஆனாலும் யாரும் இதுவரைக்கும் அவன்ட்ட ப்ரொபோஸ் பண்ணதில்ல அப்படிங்கற அளவுக்கு அழகன்(?).

ஆனா மாயாவ  பாருங்க..அவளுக்கு  சூர்யா தான் உலகம்..சூர்யா எந்த பொண்ணுட்ட பேசுனாலும் அவளுக்கு பிடிக்காது.ஒரு நாள் சூர்யாட்ட வந்து இன்னிக்கு 'உன்ன நினைச்சிட்டே மருதாணி வச்சேன்..எப்படி சிவந்திருக்குன்னு பாரு' என்று ஆசையாய் அவள் உள்ளங்கைகளை காமிக்க அவனோ 'இது என்ன பெரிய சிவப்பு..உன் உதட்டின் வண்ணம் இன்னும் இதை விட சிவப்பு' என பிட்டை போட அவள் 'போடா எனக்கு வெட்கமா இருக்கு ' என அவன் கன்னத்தை கிள்ளிய போது நிஜமாகவே சிவந்து போனது அவன் கன்னம்..


ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஜூவாலஜி கூட பக்காவா பொருந்தும்..அவங்க வளர்க்கிற பூனைய சொன்னேங்க..(இருவர் கைகளிலும் செல்போன் இருப்பதால் புறா தப்பித்தது..)

இனா பாருங்க(எத்தன நாளைக்கிதான் ஆனாவையே பார்ப்பிங்க!)..அவ்ளோ க்ளோசா பழகியும் ரெண்டு பேருக்கும் ஒரு வருத்தம் இருக்கு..அவங்க இன்னும் அந்த மூன்று வார்த்தைகளை சொன்னதே இல்லை..பின்ன போன SMS ல  பழக ஆரம்பிக்குறவங்க கூட அடுத்த SMS ல அந்த வார்த்தைகளை சொல்லிக்கும் போது பத்து வருசமா பழகியும் நம்மளால இன்னும் சொல்ல முடியலயேன்னு உள்ளுக்குள்ளே பொருமிகிட்டு இருந்தாங்க..

அந்த நாள் வந்தது..இருவருக்கும் பள்ளி இறுதி தேர்வின் இறுதி தேர்வு..இன்னிக்கு சொல்லலேன்னா எப்பவும் சொல்ல முடியாதுன்னு முடிவெடுத்து இன்னிக்கு எப்படியாவது சொல்லிடனும்ன்னு முடிவெடுத்து 
கிளம்பிட்டாங்க..


சூர்யா மாயாவை நெருங்கி வந்து அவள் கண்ணும் இவன் கண்ணும் சந்தித்து இருவரின் பார்வைகளும் முத்தமிட்டு கொண்ட நேரத்தில் அவன் சொல்ல வந்ததை தைரியமாக சொல்லி விட்டான்..அவளும்  இதையே எதிர்பார்த்தவளாய் புன்னகையுடன் தலைகுனிந்து (வெட்கம்!) அவன் சொன்னதையே அவளும் சொன்னாள்..

தேர்வு முடிவுகள் வெளிவந்தன..எதிர்பாரா விதமாய் சூர்யா இறுதியாக எழுதின தேர்வில் பெயில் ஆகி இருந்தான்..அவளோ அந்த பாடத்தில் பள்ளியிலேயே முதலாவதாக தேறியிருந்தாள்..தேர்வு அன்று நடந்ததை நினைத்து பார்த்தான்.. அவள் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளும் ரீங்காரமாய் ச்சீய் தேனீயாய் அவன் காதில் கொட்டின..


                                            





                         ALL THE BEST!!!!!




 நீதி :  நல்லவங்க வாக்கு(மட்டுமே) பலிக்கும்..



 கதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Monday, January 11, 2010

டவுன் பஸ் பயணங்களில்




 பின் மதிய நேரம்- துணைக்கு 
 யாருமில்லா
 தேசிய நெடுஞ்சாலை
 பேருந்து நிறுத்தத்தில்
 எனக்கு ஆதரவாய்
 எனது கைபேசி மட்டும்!

 வந்தது பேருந்து
 வந்து சேர்ந்தது
 சந்தேகமும்..
 ஒட்டுனருக்கும் நடத்துனருக்கும்
 எங்காவது செல்ல
 தோன்றினால்
 தோள் மேல் கை
 போட்டு கொண்டு
 இந்த பேருந்தை
 எடுத்து கிளம்பி விடுவார்களோ ?

 தனியனாய் உள்ளேறி
 பின்னிருக்கையின் மத்தியில்
 அமர்ந்தேன்!
 அதன் பின் தான்
 அந்த பரவச
 அனுபவம்!!

 மிதமான இளவெயில்
 இதமாக  ஏன் முகத்தில் விழ !
 சாலையின் இருபுறமும்
 ஆங்காங்கே
 ஜன.30 பிறந்தநாள் வாசகங்கள்
 நிரம்பிய பதாகைகள் !
 காதை பிளந்து
 கபாலம் வரை கதிகலக்கும்
 DTS தொல்லை இன்றி
 காற்றின் ஓசை
 இசையாய் தழுவ !
 பேருந்தின் மிதவேக
 குலுங்கல் என்னை
 தொட்டில்லாட்ட !
 சிறிது
 கண்ணை மூடினால் 
 அடடா! அடடா!
 இதுவல்லவோ
 இங்கல்லவோ ஆனந்தம்!

 அருகினில் அவள்
 இல்லாததும்
 குறையாய் தெரியவில்லை! 

 இருந்திருந்தால்
 இவற்றையா
 ரசித்துக் கொண்டிருந்திருப்பேன்!
 அவளை  மறந்து !!!!

 இந்த கவிதை உரையாடல் கவிதை போட்டிக்கு.........
 கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Saturday, January 9, 2010

கேபிளார்க்கு ஒரு அட்வைஸ்!




பார்வர்ட் செய்த கவிதை
'நீ எழுதினாயா'
என அவள் கேட்க
நான் சொன்னேன்
'இல்லை எனக்கும் 
பார்வார்டாய் தான் வந்தது

அதானே!
நீ பதிவிற்கு மட்டும்தானே 
கவிதை எழுதுவாய்..

எப்படி சொல்வேன் 
அவளிடம் 
எனக்கு கவிதை எழுத 
தைரியம் வந்தது 
இவருடைய கவிதையை 
பார்த்துதான் என்று!

பின்னே 
என் குருவின்  கவிதைகள் 
என
இவரின் கவிதைகளை 
நீட்டினால் 
கிழித்து தொங்க 
போட்டு விடுவார்களே 

நீ இவ்வளவு நாள்
ப்ளாக்கில் படித்தது
இந்த கருமத்தைதானா
என்று!

தலைவா!
உனக்கு நான் கூறுவது 
காமம் மட்டுமே 
கவிதையல்ல
வேறு பல 
விசயங்களையும் 
எண்டர் செய்யும் 
பாக்கியத்தை உன் 
எண்டர் கீ பெறட்டும்!!

இதே பாணியை 
தொடர்ந்து
செக்ஸ் கவிஞர்
என்னும் பட்டத்தை
வாங்கி 
சொந்த காசில் 
சூனியம் வைத்து 
கொள்ளாதீர்!!!!


சகல வயதினரும்
இரு பாலரும் 
வாசிக்கும் வண்ணம்
கவிதை இயற்றி
உம் எண்டர் கீக்கு
சாப விமோசனம்
கொடுத்தருள்வாய்!!!





பி.கு : நானும் எத்தன நாள்தான் கொத்து பரோட்டா ல நம்ம பேரு வாரம் ஒரு பதிவர் ல வரும்ன்னு காத்திருக்கிறது..அதான் புறவாசல் வழியா உள்ள நுழைந்திடலாம் என்னும் நம்பிக்கையில் இந்த பதிவை எழுதியுள்ளேன்..கவிதையின் நாயகன் லிங்க் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்.....

 கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..


 


  

Sunday, January 3, 2010

கற்றுக் கொடுக்கும் கள்ளம்




என் அப்பா
'யாரிடம் பேசுகிறாய்? '
என கேட்டால்
என்ன சொல்வது?

'தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் '
என்று சொல்..

வீட்டில்
'எங்கே செல்கிறாய்? '
என கேட்டால்
என்ன சொல்வது?

'கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் '
என சொல்ல தெரியாதா?

'பேலன்ஸ் ஏன் சீக்கிரம் தீர்ந்தது ?'
என கேட்டால்?

ஜாப் அலெர்ட்ஸ்க்கு
பிடிக்கிறார்கள் என
பொய் சொல்லடி!

'இந்த பரிசு யார் கொடுத்தார்கள்? '
என்றார்கள்..
சொல்லிவிட்டேன்
'என் பள்ளிதோழி என'

அப்பாடா என்றேன்
நிம்மதி
பெருமூச்சுடன்!

ஒவ்வொன்றாக
கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
கள்ளத்தனங்களை..
        .
        .
        .
        .
        .
        .
        .
        .
        .

நாளை எனக்கெதிராக
அவை பயன்படுத்தப்படாது
என்ற நம்பிக்கையில்!!

கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..