Saturday, February 13, 2010

காதல் - காதல் - காதல்

மு.கு: இது காதலர் தின சிறப்பு பதிவல்ல..காதலர் தினம் என்பது காதலி கிடைக்காதவர்களுக்கும்,கிடைத்த காதலியை மிஸ் செய்தவர்களுக்கு மட்டுமே..வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!!

உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டத்தில் ஒவ்வொரு காதலரும் குதூகலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் காதலிப்போருக்கும், காதலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும்,காதலின் சம்மதத்துக்கு காத்திருப்போருக்கும்,காதலித்து கரை ஒதுங்கியவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!

காதல் - இன்றைய மட்டுமல்ல என்றைய இளைஞர்களுக்கும் அது ஒரு கனவு..என் பள்ளி நாட்களில் சில நண்பர்களின் காதலைக் கண்டு நம்மை இப்படி காதல் செய்ய யாரும் வர மாட்டார்களா என ஏங்கியதுண்டு..இன்று அந்த ஏக்கத்தை என் நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்..ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன்..காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சியால் வந்து விடக்கூடாது என்று..ஒரு பெண்ணிடம் ஏற்படும் உடல் ரீதியான ஈர்ப்பு எனக்கு வெகு நாட்கள் நீடித்ததில்லை..அதனால் வாழ்க்கை முழுதும் நம்முடன் வரப்போகும் பெண் மாறாத அன்பையும் உண்மையான அக்கறையும் ஏன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்..

என்ன செய்வது? இது போல புரட்சிகரமாக சிந்தித்து விட்டாலும் கூட சில பெண்களை காணும் போதெல்லாம் மனம் தடுமாறவே செய்தது..என் மனதை அலைபாய விடாமல் பெவிக்விக் போட்டு ஒட்டுவது பெரிய வேலையாக இருந்தது..என்னதான் ஒட்டினாலும் கண்ணை மட்டும் 'கண்'ட்ரோல் செய்ய முடியவில்லை..சுடிதார் இருக்கும் திசையெல்லாம் கண்கள் மேய்ந்து கொண்டுதானிருந்தது..

மேலே இருக்கும் பத்தியில் கடைசியாக 'காதலிக்கும் வரை' என்று போட்டு கொள்ளுங்கள்..காதல் வந்து விட்ட பிறகு பிற பெண்களை சைட் அடிப்பது குறைந்து விட்டது...அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க..சரி நாம வேற விசயத்த பத்தி பேசுவோம்..இந்த டாபிக்கில் இனியும் பேசுவது எனக்கு நல்லதல்ல..

நீங்க ஒன்ஸ் காதலிக்க ஆரம்பிச்சீங்கன்னா கவிதை அப்படியே சும்மா சிரேயாவை பார்த்த தலைவர் மாதிரி வாட்டர்பால்ஸா கொட்டணும்..ஆனால்  சில பேரு காதலிக்காமலே நல்லா கவிதை எழுதுறாங்க..காதலிக்கிற மாதிரியே அந்த உணர்வுகளோடு எழுதுவது எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது..

                                        காதலியில்லாத சிலரின்
                                        கவிதைகள் - அவர்கள் எப்போதிருந்து
                                         உன்னைக் காதலிக்க ஆரம்பித்தார்கள் !

மேலே இருப்பதை நீங்கள்  கவிதையாக எடுத்துக் கொண்டாலும் சரி..வாக்கியமாக எடுத்துக் கொண்டாலும் சரி..எனக்கு கவலை இல்லை..ஆனால் சில பேரு நமக்கு கவிதை எழுத வரலேன்னு கவலைப்படுவாங்க..அவங்களுக்காக - இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு..இருக்கவே இருக்கு சினிமா பாடல்கள்..பாடல்களின் நடுநடுவே வரும் வரிகளை கவ்விக்கிட்டு அதை உங்கள் மனம் கவர்ந்தவரிடம் அப்பப்ப சொன்னா போதும்..இதோ இது மாதிரி..

//மகிழ்ச்சியில் என்னை  ஆழ்த்த  பரிசுகள்  தேடி  பிடிப்பாய்
கசந்திடும்  செய்தி  வந்தால், பகிர்ந்திட  பக்கம் இருப்பாய்
 
நோய்  என  கொஞ்சம்  படுத்தால் , தாய்  என  மாறி  அணைப்பாய்! //

//உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூப்பூக்கும் 
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும் 
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும் 
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்!! //

// விண்சொர்க்கமே பொய் பொய் !

 என் சொர்க்கம் நீ பெண்ணே!! //

இதையெல்லாம் அதே ராகத்துல பாடாம கவிதை மாதிரி சொல்லி அவங்கள இந்த வரிகள் எந்த பாடல்ன்னு கண்டுபிடி பார்க்கலாம்ன்னு விளையாடலாம்..(இதெல்லாம் எந்த பாடலின் வரிகள் என்று நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஜெனரல் நாலெட்ஜ் எவ்வளவு என்று)அப்புறம் முக்கியமான ஒன்று : இந்த வரிகள்  'என் சொந்த படைப்பு' என்று புருடா விட்டு பின்னால் மாட்டி கொண்டால் அவ்வளவுதான்..நீங்கள் சொந்த கவிதை எழுதினால் கூட நம்ப மாட்டார்கள்..

கவிதைதான் வேணும்ன்னு அடம்பிடிச்சா இந்த மாதிரி அவுத்து விடுங்க.. அடங்கிடுவாங்க..

                                                          பருக்கள் கூட அழகுதான்
                                                          அவை உன் கன்னத்தில்
                                                           குடியிருக்கும் போது !
                                                           என்னை விட அதிக நேரம்
                                                           முத்தமிடுவதால்
                                                           அவற்றின் மீது பொறாமையும் கூட!


இதெல்லாம் ஓகே..முதலில் பிள்ளை வேணுமே பேரு வைக்க..அப்படிங்கிறீங்களா..(என்னது முதலிலேயே பிள்ளையான்னு கேட்காதீங்க..அது உவமை) காதலி கிடைத்தால் தானே கவிதை சொல்ல முடியும்..பொறுமை..சீக்கிரமா அமையும்..நட்பை காதலாக மாற்ற துடிப்பவர்கள் கூட மேலே இருப்பது போன்ற  பாடல் வரிகளை அனுப்பலாம்..ஒரு கண்டிஷன்: அதுல 'காதல்' அப்படிங்கிற வார்த்தை வரக்கூடாது..வந்தா முதலிலேயே உஷார் ஆகிடுவாங்க..உடனே தன் தோழியிடம் இது குறித்து டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்..காதலையும் தோழியையும் அருகில் வைத்தால் காதலி கோபித்து கொள்வாள் என்பதால் தோழி அடுத்த பாராவுக்கு தாவுகிறார்..

இந்த தோழிகள் விசயத்தில்  கொஞ்சம் முன் எச்சரிக்கை தேவை..நீங்க ப்ரபோஸ் செய்ய செல்பவரின் தோழி யாரையாவது காதலித்து கொண்டிருந்தால் நோ ப்ராப்ளம்..சப்போஸ் அவங்க காதல் தோற்று போயிருந்தாலோ அல்லது காதலன் கிடைக்காமல் பொருமிக் கொண்டிருந்தாலோ உங்கள் காதலை எலுமிச்சம்பழமாகவும் காதலியின்  தோழியை லாரியாகவும் உருவகம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை..

திடீர் என்று உங்கள் தோழி(காதலியாக மாற போகிறவர்) உங்களிடம் 'ஆர் யு லவ்விங் மீ? ' அப்படின்னு கேட்டா உடனே தலையாட்டிடாதீங்க..உங்களை காதலிக்கும் பெண் துணிந்து இவ்வாறு கேட்க மாட்டாள்..அவளின் அப்ரோச் வேறு மாதிரி இருக்கும்..''உன்னை போல ஒரு சிறந்த நண்பனை பார்த்ததில்லை.உன்னை மாதிரி யாரும் என்னை கேரா பாத்துகிட்டதில்ல'' - இந்த மாதிரி இருக்கும்..உடனே ''ஐ லவ் யூ'' ன்னு சொல்லி காஞ்ச மாடு வயலை பார்த்த மாதிரி பாஞ்சுரகூடாது..பொறுமையா கவுதம் படத்துல வர்ற மாதிரி
''இத்தனை காலங்கள் நீ இல்லாமல் வாழ்ந்து விட்டேன்..இனி வரும் காலங்களில் என் ஒவ்வொரு நாளும் உன்னை சுற்றியே, உனது அன்பின் கதகதப்பில் வாழ ஆசை..சம்மதிப்பாயா ? "

இந்த மாதிரி கேட்கணும்..அவங்க சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் 'ஐ லவ் யூ' சொல்லணும்..ஏன்னா 'ஐ லவ் யூ' என்ற வார்த்தைகள் அதன் புனிதத்தை இப்போது இழந்து விட்டன..சினிமாவும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..

பி.கு: 'எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு?' 'நாட்டுக்கு இப்போ இது ரொம்ப முக்கியம்' போன்ற பின்னூட்டங்கள் கடுமையான ஆட்சேபத்துக்கு உள்ளாகும்..

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

51 comments:

அண்ணாமலையான் said...

உங்க காதலுக்கு எத்தன வயசு? வாழ்த்துக்கள்....

அகல்விளக்கு said...

//'எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு?' 'நாட்டுக்கு இப்போ இது ரொம்ப முக்கியம்' போன்ற பின்னூட்டங்கள் கடுமையான ஆட்சேபத்துக்கு உள்ளாகும்..//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டீங்களே...

//வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!! //

:-))

குதூகலமான பதிவு...

கலகன் said...

///காதலர் தினம் என்பது காதலி கிடைக்காதவர்களுக்கும்,கிடைத்த காதலியை மிஸ் செய்தவர்களுக்கு மட்டுமே//


நான் இதில் முதல் வகை.

தல ஐடியால்லாம் ஓகே. இந்த ஐடியால்லாம் தோழி கிடைத்த பிறகு.

நல்ல தோழியை எப்படி கண்டுப்பிடிபதுன்னு மொதல்ல சொல்லுங்க தல....

(ஹைய்யா... நான் தான் முதல் commenter !!!)

லோகு said...

உங்களுக்கு இதெல்லாம் ஓவரா தெரியலையா.. சும்மா திரும்பி பார்த்தாலே டிரீட் வைக்கறவங்க நாங்க, தோழியை காதலி ஆக்கறதுக்கு சொல்லி கொடுக்கணுமா.

முதல்ல தோழிக்கு வழி சொல்லுங்க பாஸ்..

Thenammai Lakshmanan said...

//உங்கள் காதலை எலுமிச்சம்பழமாகவும் காதலியின் தோழியை லாரியாகவும் உருவகம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை..//

HAHAHAHAHAHA.....

வயசுக்கேத்த பதிவு ..

அது சரி வீட்டுக்குத்தெரியுமா...?

புலவன் புலிகேசி said...

//காதலித்து கரை ஒதுங்கியவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!
//

இப்பல்லாம் கரை ஒதுங்குபவர்களை விட அறை ஒதுங்குபவர்கள் த்Hஆஆண் அதிகம் தல

சைவகொத்துப்பரோட்டா said...

ஐடியா அய்யாசாமி என்ற பட்டதை உங்களுக்கு அளிக்கிறேன்:))

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹிஹி

Saraj said...

//இன்று அந்த ஏக்கத்தை என் நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்..//

உண்மையா?



//வாழ்க்கை முழுதும் நம்முடன் வரப்போகும் பெண் மாறாத அன்பையும் உண்மையான அக்கறையும் ஏன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்..//




நான் நீங்கள் முடிவு செய்தது போல இருக்கேனா?????????????



//மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த பரிசுகள் தேடி பிடிப்பாய்





கசந்திடும் செய்தி வந்தால், பகிர்ந்திட பக்கம் இருப்பாய் நோய் என கொஞ்சம் படுத்தால் , தாய் என மாறி அணைப்பாய்! //

நான் அனுப்புன எல்லா பாடல் வரிகளையும் ஞாபகம் வசிருகிங்க :)) ஆனா இன்னும் சைட் அடிக்குறின்களா? :-(



//பருக்கள் கூட அழகுதான்





அவை உன் கன்னத்தில்




குடியிருக்கும் போது !




என்னை விட அதிக நேரம்




முத்தமிடுவதால்




அவற்றின் மீது பொறாமையும் கூட!// இந்த கவிதை அருமை .......



//''உன்னை போல ஒரு சிறந்த நண்பனை பார்த்ததில்லை.உன்னை மாதிரி யாரும் என்னை கேரா பாத்துகிட்டதில்ல'' //



இந்த சிறந்த நண்பன் என் வாழ்வின் இறுதி வரை வேண்டும் :)





காதலர் தின வாழ்த்துகள் !!!!!



காதல் கரையில் ஒதுங்கிய நாம் அடுத்து திருமணம் என்னும் இனிய பந்தத்தில் சேர்ந்து வாழ்வது எப்பொழுது ????????????????????

Unknown said...

பாஸ்.உங்கள் காதல் அனுபவமா?சில வரிகள் அற்புதமாக இருக்கு.

திவ்யாஹரி said...

//சைவகொத்துப்பரோட்டா said...

ஐடியா அய்யாசாமி என்ற பட்டதை உங்களுக்கு அளிக்கிறேன்:))//

இதே இதே.. படிக்கும் போது சிரிக்காம இருக்க முடியல வெற்றி.. அருமை. மேடம் படிச்சாச்சா? பின்னூட்டம் போடா சொல்லுப்பா..

//வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!!//

உண்மை வெற்றி..
புலவரின் பின்னூட்டமும் உண்மை தான்..

கிருபாநந்தினி said...

அப்ப... காதலுக்கும் கண் உண்டுங்கிறீங்க!

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல பகிர்வு பலருக்கு பயனுள்ளதாக அமையும் .
நானும் தோழியாய் இருந்து பின் காதலியானவள் .அதனால் தானோ என்னவோ
இதுவரை நமக்குள் சண்டைகள் வந்ததில்லை .நல்ல தோழன் அல்லது தோழி வாழ்க்கை துணையாய் அமைவது ஒரு வரம்.
இது எனது அனுபவம் .

காதலர் தின வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

பல்லு இருக்குற பக்கோடா கடிக்குது.. இரும்பு அடிக்கிற இடத்துல ஈ(நே)க்கு என்ன வேலை?

Chitra said...

வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!!

......... true.

Chitra said...

very good write-up.

cheena (சீனா) said...

வெற்றி - நல்லதொரு இடுகை - காதலர்தின வெளியீடு - வாழ்க
கார்த்தி பொறாமை வேண்டாம் -பெருமூச்சு வேண்டாம் - சீக்கிரமே நிச்சயதார்த்தம் அமைய நல்வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

முத பாரா செம்ம ராஸா...!

Prabu said...

//காதலர் தினம் என்பது காதலி கிடைக்காதவர்களுக்கும்,கிடைத்த காதலியை மிஸ் செய்தவர்களுக்கு மட்டுமே..வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!! //

பார்ர்றா.... :)

Anonymous said...

kaipulaaaaaa..

kalaketenga kaipulla..

superu...padivu superu...

epdipa eppadi ellam yesikrenga....

hahaha..

sirichu sirichu vairu puna pochu..

ungalikum enga sangathila sethuvitommmm....

nala eruku konjam nakkal,

konjam karthu..

mutathill kavithai pola

hikoovaga erunthathu...

Valga Valamudan.

Eppdiku..

V.v.s Group..
(endrum 16,Varuthapadtha Valaipar Sangam)

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க...வாழ்த்துக்கள்..

ஆர்வா said...

வெற்றி அட்டகாசமான பதிவு.. அதுவும் நம்மை காதலிக்கிற நம்ம தோழி அவங்க காதலை
எப்படி வெளிப்படுத்துவாங்கன்னு சொன்னது பிரமாதம்.. முகப்பரு கவிதையும் அழகு..

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் நண்பரே !
நண்பர் அண்ணாமலையான் கேட்டதர்க்கு இன்னும் பதில் தரவில்லையே ? உங்கள் காதலின் வயது என்னவோ ?

அன்புடன் நான் said...

காதல் என்பது... காற்று
சுவாசிப்பவன் மட்டுமே...
முழுமையாய் வாழ்கிறான்.


நீங்க வாழ்கின்றீர்கள்.

வெற்றி said...

@அண்ணாமலையான்

பத்து மாசம் நண்பரே ! (காதலை மட்டும்தான் சொல்கிறேன்)

வெற்றி said...

@அகல்விளக்கு

நன்றி :)

வெற்றி said...

@தர்மா

அதை தனி பதிவுல சொல்றேன் நண்பா :)

வெற்றி said...

@லோகு

வெயிட் பார் தனிப்பதிவு :)

வெற்றி said...

@thenammailakshmanan

மைல்டா டவுட்டு இருக்கு..இன்னும் கன்பார்ம் ஆகலை :)

வெற்றி said...

@புலவன் புலிகேசி

நான் சொன்னது காதலை பற்றி மட்டும் தல..

வெற்றி said...

@சைவகொத்துப்பரோட்டா

//ஐடியா அய்யாசாமி என்ற பட்டதை உங்களுக்கு அளிக்கிறேன்:))//

ஐடியாவை கட் பண்ணிட்டு வர்ற வார்த்தைகளை தனித்தனியாக வாசித்தால் வேறு பொருள் வருகிறதே :))

வெற்றி said...

@கார்க்கி

சிரிப்புக்கு நன்றி :))

வெற்றி said...

@மின்னல்

வாம்மா மின்னல்..சொந்த அனுபவமும் இருக்கிறது :)

வெற்றி said...

@Mrs. திவ்யாஹரி

நன்றி உண்மைவிரும்பி :))

வெற்றி said...

@கிருபாநந்தினி

அதுல என்னங்க தப்பு..?

வெற்றி said...

@நினைவுகளுடன் -நிகே-

வாழ்த்துக்கள்..

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும்!!வாழ்க்கை இன்பவரமாகும்!!

உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர்..சண்டைகளும் அதற்கு பிந்திய சமாதானங்களும் கூட காதலில் அழகுதான்..முயன்று பாருங்கள் :)

வெற்றி said...

@கார்த்திகைப் பாண்டியன்

:)) நன்றி !

வெற்றி said...

@Chitra

நான் என்ன true or false ஆ நடத்திட்டு இருக்கேன் :)

வெற்றி said...

@cheena (சீனா)

உங்களின் ஆசிக்கு நன்றி..கொஞ்சம் தெம்பாக இருக்கிறது ஐயா :)

வெற்றி said...

@பிரியமுடன்...வசந்த்

அது மட்டும் தானா சகா :((

வெற்றி said...

@Prabu

பார்த்துட்டேன் :)

வெற்றி said...

@Complan Surya

ஹையா..ஐ ஆம் ய காம்ப்ளான் பாய் !

வெற்றி said...

@கமலேஷ்

நன்றிங்க :)

வெற்றி said...

@கவிதை காதலன்

அப்படியா..ரொம்ப நன்றிங்க :)

வெற்றி said...

@வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!!

பத்து மாத குழந்தை நண்பரே !

வெற்றி said...

@சி. கருணாகரசு

உங்க கவிதை சூப்பரு..நீங்களும் வாழ ட்ரை செய்யுங்கள் :)

வெற்றி said...

:)

வெற்றி said...

:))

வெற்றி said...

:)))

Joe said...

//
பருக்கள் கூட அழகுதான் அவை உன் கன்னத்தில் குடியிருக்கும் போது !
என்னை விட அதிக நேரம் முத்தமிடுவதால்
அவற்றின் மீது பொறாமையும் கூட!
//

காதலிக்கு கன்னத்தில் அதிகம் முத்தமிடக் கூடாதென உங்களிடம் யாரும் சொல்லவில்லையா? ;-)

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{{{
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...
வாழ்த்துக்கள் நண்பரே !
நண்பர் அண்ணாமலையான் கேட்டதர்க்கு இன்னும் பதில் தரவில்லையே ? உங்கள் காதலின் வயது என்னவோ ?

February 22, 2010 1:13 AM }}}}}}}}}}}


என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !