Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, February 13, 2010

காதல் - காதல் - காதல்

மு.கு: இது காதலர் தின சிறப்பு பதிவல்ல..காதலர் தினம் என்பது காதலி கிடைக்காதவர்களுக்கும்,கிடைத்த காதலியை மிஸ் செய்தவர்களுக்கு மட்டுமே..வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!!

உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டத்தில் ஒவ்வொரு காதலரும் குதூகலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் காதலிப்போருக்கும், காதலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும்,காதலின் சம்மதத்துக்கு காத்திருப்போருக்கும்,காதலித்து கரை ஒதுங்கியவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!

காதல் - இன்றைய மட்டுமல்ல என்றைய இளைஞர்களுக்கும் அது ஒரு கனவு..என் பள்ளி நாட்களில் சில நண்பர்களின் காதலைக் கண்டு நம்மை இப்படி காதல் செய்ய யாரும் வர மாட்டார்களா என ஏங்கியதுண்டு..இன்று அந்த ஏக்கத்தை என் நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்..ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன்..காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சியால் வந்து விடக்கூடாது என்று..ஒரு பெண்ணிடம் ஏற்படும் உடல் ரீதியான ஈர்ப்பு எனக்கு வெகு நாட்கள் நீடித்ததில்லை..அதனால் வாழ்க்கை முழுதும் நம்முடன் வரப்போகும் பெண் மாறாத அன்பையும் உண்மையான அக்கறையும் ஏன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்..

என்ன செய்வது? இது போல புரட்சிகரமாக சிந்தித்து விட்டாலும் கூட சில பெண்களை காணும் போதெல்லாம் மனம் தடுமாறவே செய்தது..என் மனதை அலைபாய விடாமல் பெவிக்விக் போட்டு ஒட்டுவது பெரிய வேலையாக இருந்தது..என்னதான் ஒட்டினாலும் கண்ணை மட்டும் 'கண்'ட்ரோல் செய்ய முடியவில்லை..சுடிதார் இருக்கும் திசையெல்லாம் கண்கள் மேய்ந்து கொண்டுதானிருந்தது..

மேலே இருக்கும் பத்தியில் கடைசியாக 'காதலிக்கும் வரை' என்று போட்டு கொள்ளுங்கள்..காதல் வந்து விட்ட பிறகு பிற பெண்களை சைட் அடிப்பது குறைந்து விட்டது...அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க..சரி நாம வேற விசயத்த பத்தி பேசுவோம்..இந்த டாபிக்கில் இனியும் பேசுவது எனக்கு நல்லதல்ல..

நீங்க ஒன்ஸ் காதலிக்க ஆரம்பிச்சீங்கன்னா கவிதை அப்படியே சும்மா சிரேயாவை பார்த்த தலைவர் மாதிரி வாட்டர்பால்ஸா கொட்டணும்..ஆனால்  சில பேரு காதலிக்காமலே நல்லா கவிதை எழுதுறாங்க..காதலிக்கிற மாதிரியே அந்த உணர்வுகளோடு எழுதுவது எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது..

                                        காதலியில்லாத சிலரின்
                                        கவிதைகள் - அவர்கள் எப்போதிருந்து
                                         உன்னைக் காதலிக்க ஆரம்பித்தார்கள் !

மேலே இருப்பதை நீங்கள்  கவிதையாக எடுத்துக் கொண்டாலும் சரி..வாக்கியமாக எடுத்துக் கொண்டாலும் சரி..எனக்கு கவலை இல்லை..ஆனால் சில பேரு நமக்கு கவிதை எழுத வரலேன்னு கவலைப்படுவாங்க..அவங்களுக்காக - இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு..இருக்கவே இருக்கு சினிமா பாடல்கள்..பாடல்களின் நடுநடுவே வரும் வரிகளை கவ்விக்கிட்டு அதை உங்கள் மனம் கவர்ந்தவரிடம் அப்பப்ப சொன்னா போதும்..இதோ இது மாதிரி..

//மகிழ்ச்சியில் என்னை  ஆழ்த்த  பரிசுகள்  தேடி  பிடிப்பாய்
கசந்திடும்  செய்தி  வந்தால், பகிர்ந்திட  பக்கம் இருப்பாய்
 
நோய்  என  கொஞ்சம்  படுத்தால் , தாய்  என  மாறி  அணைப்பாய்! //

//உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூப்பூக்கும் 
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும் 
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும் 
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்!! //

// விண்சொர்க்கமே பொய் பொய் !

 என் சொர்க்கம் நீ பெண்ணே!! //

இதையெல்லாம் அதே ராகத்துல பாடாம கவிதை மாதிரி சொல்லி அவங்கள இந்த வரிகள் எந்த பாடல்ன்னு கண்டுபிடி பார்க்கலாம்ன்னு விளையாடலாம்..(இதெல்லாம் எந்த பாடலின் வரிகள் என்று நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஜெனரல் நாலெட்ஜ் எவ்வளவு என்று)அப்புறம் முக்கியமான ஒன்று : இந்த வரிகள்  'என் சொந்த படைப்பு' என்று புருடா விட்டு பின்னால் மாட்டி கொண்டால் அவ்வளவுதான்..நீங்கள் சொந்த கவிதை எழுதினால் கூட நம்ப மாட்டார்கள்..

கவிதைதான் வேணும்ன்னு அடம்பிடிச்சா இந்த மாதிரி அவுத்து விடுங்க.. அடங்கிடுவாங்க..

                                                          பருக்கள் கூட அழகுதான்
                                                          அவை உன் கன்னத்தில்
                                                           குடியிருக்கும் போது !
                                                           என்னை விட அதிக நேரம்
                                                           முத்தமிடுவதால்
                                                           அவற்றின் மீது பொறாமையும் கூட!


இதெல்லாம் ஓகே..முதலில் பிள்ளை வேணுமே பேரு வைக்க..அப்படிங்கிறீங்களா..(என்னது முதலிலேயே பிள்ளையான்னு கேட்காதீங்க..அது உவமை) காதலி கிடைத்தால் தானே கவிதை சொல்ல முடியும்..பொறுமை..சீக்கிரமா அமையும்..நட்பை காதலாக மாற்ற துடிப்பவர்கள் கூட மேலே இருப்பது போன்ற  பாடல் வரிகளை அனுப்பலாம்..ஒரு கண்டிஷன்: அதுல 'காதல்' அப்படிங்கிற வார்த்தை வரக்கூடாது..வந்தா முதலிலேயே உஷார் ஆகிடுவாங்க..உடனே தன் தோழியிடம் இது குறித்து டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்..காதலையும் தோழியையும் அருகில் வைத்தால் காதலி கோபித்து கொள்வாள் என்பதால் தோழி அடுத்த பாராவுக்கு தாவுகிறார்..

இந்த தோழிகள் விசயத்தில்  கொஞ்சம் முன் எச்சரிக்கை தேவை..நீங்க ப்ரபோஸ் செய்ய செல்பவரின் தோழி யாரையாவது காதலித்து கொண்டிருந்தால் நோ ப்ராப்ளம்..சப்போஸ் அவங்க காதல் தோற்று போயிருந்தாலோ அல்லது காதலன் கிடைக்காமல் பொருமிக் கொண்டிருந்தாலோ உங்கள் காதலை எலுமிச்சம்பழமாகவும் காதலியின்  தோழியை லாரியாகவும் உருவகம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை..

திடீர் என்று உங்கள் தோழி(காதலியாக மாற போகிறவர்) உங்களிடம் 'ஆர் யு லவ்விங் மீ? ' அப்படின்னு கேட்டா உடனே தலையாட்டிடாதீங்க..உங்களை காதலிக்கும் பெண் துணிந்து இவ்வாறு கேட்க மாட்டாள்..அவளின் அப்ரோச் வேறு மாதிரி இருக்கும்..''உன்னை போல ஒரு சிறந்த நண்பனை பார்த்ததில்லை.உன்னை மாதிரி யாரும் என்னை கேரா பாத்துகிட்டதில்ல'' - இந்த மாதிரி இருக்கும்..உடனே ''ஐ லவ் யூ'' ன்னு சொல்லி காஞ்ச மாடு வயலை பார்த்த மாதிரி பாஞ்சுரகூடாது..பொறுமையா கவுதம் படத்துல வர்ற மாதிரி
''இத்தனை காலங்கள் நீ இல்லாமல் வாழ்ந்து விட்டேன்..இனி வரும் காலங்களில் என் ஒவ்வொரு நாளும் உன்னை சுற்றியே, உனது அன்பின் கதகதப்பில் வாழ ஆசை..சம்மதிப்பாயா ? "

இந்த மாதிரி கேட்கணும்..அவங்க சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் 'ஐ லவ் யூ' சொல்லணும்..ஏன்னா 'ஐ லவ் யூ' என்ற வார்த்தைகள் அதன் புனிதத்தை இப்போது இழந்து விட்டன..சினிமாவும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..

பி.கு: 'எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு?' 'நாட்டுக்கு இப்போ இது ரொம்ப முக்கியம்' போன்ற பின்னூட்டங்கள் கடுமையான ஆட்சேபத்துக்கு உள்ளாகும்..

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..