Wednesday, December 30, 2009

விஜய்யும் ஜென் தத்துவமும் !



 பதிவர்கள் அனைவருக்கும்  புத்தாண்டு  வாழ்த்துக்கள்.

2009 - இந்த வருடம் என் வாழ்வில் மறக்க முடியாத பல சுவையான அனுபவங்களை அள்ளித் தந்த ஆண்டாகி விட்டது.

முதலாவது - கடந்த ஆண்டின் இறுதியில் பழக ஆரம்பித்த உறவொன்று பரிணாம வளர்ச்சி அடைந்து இந்த ஆண்டு அடுத்த கட்டத்துக்கு சென்றது.

இரண்டாவது - பல ஆண்டுகளாக வாசகனாய் மட்டுமே இருந்த நான் பதிவுலகில் சில கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி அடுத்த அவதாரம் எடுத்தது.

அப்புறம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பல வெளி கல்லூரிகளுக்கு(உள்நாட்டிலும் தான்) சென்று பரிசு மழையில் நனைந்தது.

வரும் ஆண்டும் இதே போல் எனக்கு நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன்.

என்ன ஒரு சுயநலம்!

மன்னிக்கவும்.இந்த பதிவை படித்து ஓட்டு போடுவர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக இருக்க கடவது!

பார்ரா!

சரி.என் பதிவை படிக்கும் அனைவருக்கும் புத்தாண்டு நல்லபடியாய் இருக்கும்.

மறுபடியும் பார்ரா!

சரி.சரி.உலக மக்கள் எல்லாரும் வரும் ஆண்டில் அமைதியான ஒரு வாழ்வை வாழ்ந்து ஒருவருக்கொருவர் சமாதானமும் அன்பும் போற்றுவார்களாக!

ம்ம்..இதுதான் சரி..என்ன ஒரு வில்லத்தனம்!

---------------------------------------------------------------------------------------

விஜயை கிண்டலடித்து அதிகமாக SMS அனுப்பும் நண்பன் ஒருவன் சமீபத்தில் என்னிடம் கேட்டான்..
'ஏண்டா மத்த படத்த எல்லாம் நல்லா ஞானக்கண்ணோட பாக்குற.ஆனா விஜய் படம்னு வந்தா மட்டும் என் உன் ரசனை இப்படி குறைஞ்சு போய்டுது?

நான் சொன்னேன்.

'வேட்டைக்காரன் பார்க்க குழந்தைகள் ரொம்ப அனத்தியதால் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்றோம்.அவர்கள் நன்றாய் ரசித்து பார்த்தார்கள்.விஜய் படம் பார்க்க குழந்தை போன்ற மனநிலை போதும்.குழந்தையாய் மாறினால் வாழ்க்கை குதூகலமாக மாறி விடும்.இதைத்தான் ஜென் தத்துவம் சொல்கிறது.'

அன்றிலிருந்து அவன் நிறுத்தி விட்டான்.விஜயை கிண்டலடிப்பதை அல்ல.அதை எனக்கு SMS அனுப்புவதை.

-----------------------------------------------------------------------------------
வரும் ஆண்டில் நான் எடுக்கப் போகும்  உறுதிமொழிகள் சில:

1 .காலேஜுக்கு செல்போன் கொண்டு போக கூடாது............
                         (விடுமுறை தினங்களில் மட்டும் )

2 .பாடங்களை முந்திய நாள் இரவே படித்து விட வேண்டும்.......
                         (தேர்வுக்கு முந்திய நாள் மட்டும் )

3 .வகுப்பறையில் தூங்கக் கூடாது................
                        (ஒரு நல்ல பிகர் செமினார் எடுக்கும் போது மட்டும்)

4 .மாஸ் கட் அடிக்க கூடாது..........
                        (அன்று நான் கல்லூரிக்கு முதலிலேயே விடுப்பு சொல்லியிருந்தால்)

5 .வேறு எந்த பெண்ணையும் சைட் அடிக்க கூடாது.......
                          ('அவள்' என்னருகில் இருக்கும் போது மட்டும்)

------------------------------------------------------------------------------------
புத்தாண்டு சிறப்புபுதிர்:

பள்ளியில் binary arithmetic படித்திருப்போம்.அதில் வரும் கூட்டல் கணக்கு:
                                                01 + 01 = 10
இதை இப்போது சொல்வதற்கு என்ன காரணம்?
தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

பதிவை ரசித்திருந்தால் ஓட்டு போட மறவாதீர்..மறவாதீர்..மறவாதீர்..

Saturday, December 26, 2009

மகனே என் அருமை மகனே!!




மகனே!
உன்னுடன் விளையாடும்
அடுத்த வீட்டு டாக்டரின்
பிள்ளையை போல
உனக்கும் உயர்விலை 
துணி வேண்டுமென்றாய்!
எடுத்துக் கொடுத்தேன்..
எனக்கான சீமைத்துணி
தியாகம் செய்து !!

அவனை போல
சைக்கிளில் தான்
பள்ளி செல்வேன் என்றாய்!
வாங்கி கொடுத்தேன்
என் கொலுசை விற்று!!

காட்டில் வெயிலில்
சுள்ளி பொறுக்க
கால் பொசுங்க
நடக்க இயலாததால்
செருப்பு வாங்க வைத்திருந்த
பணத்தையும் உனக்கு தந்தேன்!
அவனைப் போல
நீயும் கறுப்புக் கண்ணாடி அணிந்து
கதாநாயகனாட்டம் வலம் வர!!

உன் அப்பன்
குடித்துத் தொலைத்த
காசை நீயோ
படித்துத் தொலைத்தாய்
அவனைப் போல ஏதோ
கணினிப் படிப்பு!!

ஆனால் அவனுக்கு இல்லாத
தலைக்கனம்
உனக்கு இயல்பாய்!
இன்று அவனோ வெளிநாட்டில்
நீயோ என் காலடியில்

அவன் அங்கிருந்து
அனுப்பும்
வெளிநாட்டு மதுவின்
வாசனை மயக்கத்தோடு
என்னை விரட்டுகிறாய்
உனக்கு சைட் டிஷ்
வாங்க - நடக்கிறேன்
எனக்கான  இன்றைய
மாத்திரையை மறந்து!!

என்ன குடித்தாலும்
குடல்  புண்ணாகும்
அளவுக்கு அதிகமாக
குடித்து விடாதே - மகனே
என்னருமை மகனே!!!


இந்த கவிதை உரையாடல் கவிதை போட்டிக்கு.........

கவிதை பிடிச்சிருந்தா மறக்காம உங்க வோட்ட க்ளிக்கிட்டு  போய்டுங்க....
ச்சும்மா ஒரு கவிதை

Wednesday, December 23, 2009

முத்தமே!!




                                       சாயம் பூசாமலே
                                       போதை தரும்
                                       இதழ்களை குவித்து
                                       இச் இச் இச்'
                                       என இச்சை குறையா
                                       ஒரு முத்தத்தை
                                        மிக அழுத்தமாய் 
                                        நீ 'முத்தின' போது
                                        நெஞ்சினில் பரவிய
                                        ஏக்க உணர்வினில்
                                        சூடாகிப் போனது  
                                        என்
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                        செல்போனும் கூடத்தான்!!!

டிஸ்கி : ஏதோ உரையாடல் போட்டின்னு ஒன்னு நடக்குதாமே...அதுக்கு இந்த கவிதைய அனுப்பலாமான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க..:)

Monday, December 21, 2009

வேட்டைக்காரன்-ஒரு விஜய் ரசிகனின் குமுறல்



                                 வேட்டைக்காரன் - சில நாட்களாக பரபரப்பாக 'அடிபட்ட' பெயர்.இந்த அளவிற்கு வேறு எந்த நடிகரின் படமும் negative hype create பண்ணதில்லை.நிற்க.நீங்கள் விஜய் ரசிகராக அல்லாமல் விஜய் வசையராக இருந்தால் இந்த பதிவு உங்கள் உடல்நலத்திற்கோ மனநலத்திற்கோ உகந்ததல்ல.Reading ahead is injurious to health.
.
.
.
.
நாம் தொடரலாம்
.
.
                                 படம் வெளி வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் பதிவுலகத்துக்கு வெளியே நான் கேட்டவரையில் (நான் இன்னும் படம் பார்க்கவில்லை) SMSகளில்  வேட்டையாடப்பட்ட அளவுக்கு படம் ஒன்னும் மோசமில்லை என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.
                           
                               ஆனால் இங்கேதான் படம் வேட்டையாடப்பட்டு அதன்பிம்பம் சுக்குநூறாக மிளகுஇருநூறாக உடைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக உலக சினிமா பார்பவர்களுக்கு விஜய்யின் தற்போதைய படங்கள் பிடிக்காது.but common people படம் ரசிக்கத்தக்க வகையில் உள்ளதாகவே கூறுகின்றனர்.
                             
                                பலருடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் படத்தின் விமர்சனத்தையும் தாண்டி தனிமனித(விஜய்) தாக்குதலும் கிண்டலும் கேலியும்(காரணங்கள் நிறைய) நிறையவே 'தல'விரித்தாடியது.யாராக இருந்தாலும் அவர் தனது தகுதிக்கு மீறிய உயரத்தை அடைந்தால் இந்த வகை குத்துக்களை வாங்க வேண்டியது இருக்கும்.thats wat happening wit vijay.தொடர்ந்து மூன்று தோல்விப் படங்கள் கொடுத்தும் ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய mass opening இருக்கிறது என்றால் அவர் இருக்கும் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
                             
                                நான் 'பூவே உனக்காக' காலத்தில் இருந்து(நான் சினிமா பார்க்க ஆரம்பித்த காலம்)  விஜய் ரசிகன்.இதுவரை அவர் செய்த அனைத்தையும் ரசித்திருக்கிறேன் except மேஜர் சரவணன்.ஏனென்றால் அவர் விறைப்பாக மீசையை முறுக்கிக் கொண்டு வரும்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன்.தள ஏன் நமக்கு வராதத எல்லாம் ட்ரை பண்றீங்க.அதுக்குல்லாம் வேற ஆள் இருக்காங்க.நீங்க உங்களுக்கு என்ன வருமோ அத மட்டும் செய்யுங்க.
                          
                              அப்புறம் அவர் jump செய்வது மிகவும் நகைப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.மசாலா சினிமா என்றால் ஒவ்வொருவரையும் கவரும் வகையில் ஒவ்வொன்று இருக்கும்.அதில் குழந்தைகளை கவருவதற்காகதான் superman சாகசங்கள்.இது ஒன்றும் தவறல்ல.
                          
                                அவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது உலக சினிமாக்களை அல்ல.only a good entertainer .அந்த வகையில் வேட்டைக்காரன்-ரசிகர்கள் கொண்டாடத்தக்க ஒரு படமென நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போக்கிரியை ரசித்தவர்களுக்கு குருவி,வில்லு கசந்திருக்கும்.ஆனால் குருவி,வில்லு பார்த்து நொந்தவர்களுக்கு வேட்டைக்காரன் நிச்சயமாக ஒரு தித்திக்கும் தேனாகும்.
                           
                                'நான் விஜய் ரசிகன்' என்று உன்னால் காலரை தூக்கி சொல்ல முடியுமா என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லி கொள்வது 'நான் அணிவது round neck T shirts மட்டுமே'.
  
பின்குறிப்பு :
                         'நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல நாராயணா' என பின்னூட்டுபவர்கள் தங்கள் முகவரியை குறிப்பிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.அவர்களுக்கு நாராயணனிடம் இருந்து 2 மோர்டீன் கொசுவர்த்தி சுருள் அனுப்பி வைக்கப்படும்.                    


பதிவு பிடிச்சவங்க உங்க வோட்ட மறக்காம குத்திட்டு போய்டுங்க.........

Thursday, December 17, 2009

முதல் நாள் அனுபவம்!!!



கல்லூரி சென்ற
முதல் நாள் !
நிறைய படிக்க வேண்டுமென்பதை விட
நிறைய பார்க்கவே ஆர்வம்;
அன்றுதான் அவளை
முதலில் பார்த்தேனா - நினைவில்லை !

என் மீது அளவுக்கதிகமாய்
அன்பையும் கோபத்தையும்
ஒருசேர பொழிய போகிறவள்
இவள்தானா - தெரியவில்லை !

இதழ் வழியாய்
பேசியதை  விட
குறுஞ்செய்தி வாயிலாய்
நிறைய பேசப்போவது
இவளுடன்தானா - தெரியவில்லை !

நேற்று உன் கனவுக்குள்
என்னை ஏன்
அனுமதிக்கவில்லை என
சண்டையிட போவது
இவள்தானா - தெரியவில்லை !

எல்லாவற்றையும் விட
என்னை விட என்
குடும்பத்தின் மீது
அக்கறை செலுத்த வந்தவள்
இவள்தானா - தெரியவில்லை !!

 மொத்தத்தில்
பள்ளி நாட்களை போலவே
எல்லா பிகர்களையும் சைட் அடித்து
நன்றாகவே கழிந்தது அ(ந)ந்நாள்!!!!

 டிஸ்கி: ச்சும்மா ஒரு கவிதை...

Tuesday, December 1, 2009

கோவிலா கொடியவர்களின் கூடாரமா???

              
           கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை திங்கு திங்குன்னு ஆடுச்சாம்!!                                                                                          கோவில் கருவறைக்குள் லீலை நடத்திய அர்ச்சகர் - இச்செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அலைகள் மனதில் பரவ தொடங்கின.ஏற்கனவே ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி வழிபாட்டுத் தளங்களில் பாலியல் கொடுமைகள் அதிகளவில் நடப்பதாக தெரிய வந்துள்ளது.இதில் இந்த செய்தி வேறு.
             
           கோவிலுக்கு மன அமைதி தேடி வரும் பெண்களையும் சிறுமிகளையும் கோவில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்திருக்கிறார் இந்த குருக்கள்.
             
           முன்பெல்லாம்(இப்போதும் சில இடங்களில்) கோவிலுக்குள் ஒரு சமூகம் நுழைவதையே  தீட்டு ஏற்பட்டு விடும் என்று தடுத்துக் கொண்டிருந்த பெரியவர்கள் இப்போது நடந்தமைக்கு என்ன சொல்ல போகிறார்கள்??
             
           பெண்கள் தைரியமாக வெளியிடங்களுக்கு செல்வதே கோவில் ஒன்றுதான் ..அங்கும் இதை போன்ற அக்கிரமங்கள் நடந்தால் என்னதான் செய்வது?
           
            கோவிலுக்கு வெளியே  நின்று பக்தர்களை கவனிக்கும் காவல்துறை உள்ளே சென்றும் நடப்பவற்றை அறிந்து கொளல் வேண்டும்.
             
             வெளிபிரகாரங்களில் மட்டும் கண்காணிப்பு கருவிகள் வைத்தால் போதாது..கருவறைக்குள்ளும் வைத்து நடப்பவற்றை கண்காணிக்க வேண்டும்.. 

டிஸ்கி : இந்த பதிவு கோவில் கூடாது என்பதற்காக அல்ல...கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்பதற்காக... 

மறக்காம உங்கள் வாக்கை தமிழிஷ்-ல குத்திட்டு போய்டுங்க......