Tuesday, August 3, 2010

எந்திரன் கதை !!

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் மணி ௦௦௦௦௦00:43..

'இரும்பிலே ஓர் இருதயம்' பாடலை தொடர்ந்து பத்தாவது தடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.அதிலும் பாடலின் 35 வது செகன்ட் முதல் 55 வது செகன்ட் வரை வரும் இசை என்னை ஏதோ செய்துக் கொண்டிருக்கின்றன.

சரி.கதை சொல்றேன்னு சொல்லிட்டேன்.கதையை சொல்லிட்டு அப்புறம் பாட்டை பத்தி பாப்போம்.







'விஞ்ஞானியான ரஜினி ஒரு ரோபோ உருவாக்குறாராங்க.அது திடீர்ன்னு உணர்ச்சி வந்து காதலிக்க ஆரம்பிச்சுடுது.அதுனால வர்ற பிரச்சனைகளும்,சுவாரசியங்களும் தான் கதை'

என்னாது..அதான் எங்களுக்கு தெரியுமேங்கிறீங்களா.வாஸ்தவம்தாங்க.எனக்கும் அவ்ளோதான் தெரியும்.

வெயிட் வெயிட்.உடனே கோவப்பட்டு 'X' அ  அமுக்கிடாதீங்க.சொல்றேன் சொல்றேன்.டிரைலரை உன்னிப்பாக கவனித்தால் ஒரு விஷயம் புரியும்.(ஒன்னுதாங்க புரிஞ்சுச்சு.ப்ளீஸ் விட்டுடுங்க !) ஐஸ் அடிக்கடி ரோபோவுக்கு முத்தமிடுகிறார்.ரோபோ விஞ்ஞானியின் காதலுக்கு தூது போகிறது.ஏன்னா அவருக்கு காதல் செய்ய நேரமில்லை.செல்லமாக ஒரு பொம்மையை கொஞ்சுவதை போல் அதைக்  கொஞ்சுகிறார்.அதை வைத்து ரோபோவுக்கு உணர்ச்சிகள் பொங்கி ஒரு கட்டத்தில் ஐஸை காதலிக்க ஆரம்பித்து விடுகிறது.அதனால் தான் உருவாக காரணமாக இருந்தா விஞ்ஞானியிடம் சண்டை போட்டுக் கொண்டு ஐஸை தூக்கிக் கொண்டு போய் விடுகிறது.இதற்கிடையில் ஐஸையும் வில்லன்களிடம் இருந்து காக்கிறது.
ஒரு நிமிஷம்.நாமளே இவ்ளோ யோசிச்சா ஷங்கர் எவ்ளோ யோசிச்சிருப்பாரு.பார்க்கலாம்.மேல நான் சொன்னது சரியா இருந்தா நான் புத்திசாலி.சரியா இல்லேன்னா நீ முட்டாளான்னு  கேக்குறீங்களா ? ஐ,அசுக்கு புசுக்கு.சரியா இல்லேன்னா ஷங்கர் புத்திசாலி.

ஓகே.இப்போ மறுபடியும் பாட்டை பாக்கலாம்..யாரும் பழக்க தோசத்தில தம்மடிக்க எந்திரிச்சு போனா பிச்சு பிச்சு.இது தலைவர் படம்.

இதுநாள்வரை இந்த பாடலை போல் எந்த பாடலும் இப்படி பைத்தியம் பிடித்துக் கேட்டதில்லை.இந்த பாடலின் வரிகளா,இசையா,இல்லை பாடகர்களின் குரலா என்னை ஈர்த்தது எதுவென தெரியவில்லை..இந்த பாடலில் இருக்கும் மந்திர சக்தி இந்த நேரத்தில் எனது தூக்கத்தை ஆக்கிரமித்து பதிவெழுத தூண்டி விட்டது.

இந்த பாடல் படமாக்கிய விதத்திலும் சொதப்பாமல் இருந்தால் ,தயங்காமல் சொல்லி விடலாம் 'இந்த வருடத்தின் ஹிட் இதுவென்று'.

ரோபோவின் காதலையும்,அதைக் காதலிப்பதில் அந்த பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளையும் சொல்கிறது பாடல்.அதிலும் கீழே உள்ள வரிகள் ஒருமுறை என் நண்பர்களுடனான உரையாடலின் போது பேசப்பட்டவை.

'தொட்டுப் பேசும் நேரம் ஷாக்கடிக்க கூடும்.
காதல் செய்யும் நேரம் மோட்டார் வேகம் கூடும்
இரவின் நடுவில் பேட்டரிதான் தீரும்'

மேட்டர் இதுதான்.கல்லூரியில் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி திடீரென்று என்னைப் பேச சொல்ல நானோ என்ன பேசவென்று தெரியாமல் அப்போது பேப்பரில் படித்த செக்ஸ் ரோபோவைப் பற்றி அள்ளி விட்டேன்.நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா.அவங்களுக்குதான் பாடத்தை தவிர மத்த  எல்லாத்திலயும் டவுட்டு நல்லா வருமே.ஆரம்பித்தார்கள்.

'டேய் ரோபோன்னு சொல்ற ஷாக் அடிக்காதா?'
'இல்லடா..மேல இன்சுலேட்டிங் மெட்டீரியல் போட்டுருப்பாங்க.ஒன்னும் கவலை வேணாம்'ன்னு சொன்னேன்.

அடுத்து செந்திலோட ஒன்னு விட்ட தம்பிக்கு ரெண்டு விட்ட பையன் ஒருத்தன் கேட்டான்

'சப்போஸ் நாம லாக் ஆகி இருக்கிற நேரத்துல பேட்டரி இறங்கிடுச்சுன்னா என்னடா பண்றது?'

'மறுபடியும் எந்திரிச்சு போயி சார்ஜ் ஏத்திக்கோடா'

'எசகுபிசகா மாட்டிக்கிட்டு இருக்கும்போது அப்படியே உள்ளே இருந்து வெளிய எடுக்க முடியலேனா என்னா பண்றது? அப்போ எப்படி எந்திரிச்சு போறது?' என அவன் கேட்டது தான் தாமதம்,சுற்றியிருந்த அனைவரும் குபீரென சிரித்து விட்டோம்.இப்போது கூட 'அதை' நினைத்தால் என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.(அவனுக்கு நான் லாஜிக்கலாக யோசித்து ஒரு பதிலை சொன்னேன்.அதை இங்கே சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது)

டிஸ்கி: மதன் கார்க்கி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.ஒருவேளை அவருட்டயும் இதே சந்தேகத்தை அவரோட மாணவர்கள் கேட்டுருப்பாங்களோ? அவரை எப்பவாச்சும் மீட் பண்ணா கேக்கணும்.

டிஸ்கி 2 :இந்த எந்திர சக்தியை எந்த 'கண்ண'பிரானாலும் தடுக்க முடியாது.எத்தனை களவாணிப் பயல்களை ஆதரித்தாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறாது.ஹி ஹி ஹி !!!

Thursday, July 29, 2010

நலம்தானா நண்பர்களே !!



வந்தாச்சு வந்தாச்சு !

நான் மறுபடியும் பதிவெழுத வந்தாச்சு !! 

இடையில் சில நாட்கள் வேலை அதிகம் இருந்ததால் (உடனே 'யாரோட இடையில்' ன்னு எல்லாம் கமென்ட் போட்டு கலாய்க்க கூடாது) பதிவெழுத முடியாமல், பின் ஒரு நன்னாளில் பழைய வேகம் வந்து 'இனி எப்படியாவது பதிவெழுதி விடுவது' என முடிவெடுத்து இதோ வந்து விட்டேன்.. 

எதை எழுதுவது என தெரியவில்லை..பாதியில் ட்ராப்டில் தூசி மண்டிக்கிடக்கும் பதிவுகளை போடுவதா அல்லது புதிதாக எழுதுவதா என தெரியவில்லை..

சரி..ட்ராப்டில் இருப்பதை 'பொக்கிஷ'த்துக்கு அனுப்பி விட்டு புதிதாக வந்த மதராசபட்டினம் , களவானி படங்களின் விமர்சனங்களை எழுதலாம் என நினைத்தால் அதை ஏற்கனவே பலர் எழுதி விட்டார்கள்..பதிவுலகுக்கு ரீ-என்ட்ரியாக வரவிருக்கும் பதிவு கொஞ்சம் புதிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க தோன்றுகிறது என மனம் டைப்படிக்க சொல்கிறது..

பதிவுகள் போடாவிட்டாலும் அவ்வப்போது பதிவுலக நண்பர்களிடம் இணையம் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடுதலில்('டச்'சுக்கு தமிழில் இதுதானே அர்த்தம்) தான் இருந்தேன்..

தமிழ்,அர்த்தம் என்றவுடன் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.'அட்ஜஸ்ட்' என்னும் தமிழ் வார்த்தைக்கு செம்மொழி அர்த்தம் என்ன? நானும் யோசித்து யோசித்து பார்த்தேன்.பொறுத்தல்,அமைதியாக இருத்தல் இதை தவிர வேறு எந்த வார்த்தையும் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது.சரி ஒரு வேளை 'அட்ஜஸ்ட்' என்பதே செம்மொழி வார்த்தைதானோ என வரைமுறைக்கு வந்தால் 'ஜ' இடிக்கிறது.போதாக்குறைக்கு 'ஸ்' வேறு.ஸ்ஸ்ஸப்பாஆஆ !! உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..இல்லையென்றால் 'ஜ'வையும்,'ஸ்'சையும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போக வேண்டியதுதான்.'ஜெ'வையும் 'தாஸை'யும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டவர்களுக்கு இது ஒன்னும் பெருஞ்சிரமமில்லை.

என்னடா திடீரென்று அரசியல் பக்கம் தாவி விட்டேனென்று நினைக்கிறீர்கள் சரிதானே.'இந்த வயதில் எதற்கு அரசியல்.ஒழுங்காக தொழிலை பார்க்கலாமே?' என சிலர் சொல்லலாம்.இதைதான்  நாங்களும் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.கேட்க மாட்டேன்கிறாரே.சரி அவர் தளவிதி(இங்கு எழுத்துப்பிழை என நினைப்பவர்கள் பதிவுக்கு வெளியே நிற்க வைக்கப் படுவார்கள்) அவர் கால்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில்.

சரி..எனக்கு தூக்கம் தூக்கமா வருது..நாளைக்கு பார்க்கலாம்.

டிஸ்கி: பதிவில் நிறைய கொம்பு தெரிவதாக உங்களுக்கு தோன்றினால் அது மிகையல்ல.இனிமே  எல்லாம் அப்படித்தான் 

Saturday, February 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - முற்றிலும் யூத்துகளுக்காக

 விண்ணைத்  தாண்டி வருவாயா - இந்த படத்தை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும்.அவர்தான் த்ரிஷா - அவர் இந்த படத்தில் அவ்ளோ அழகு.இனிமேல் 'த்ரிஷா இல்லைனா திவ்யா' என்றும் யாரும் சொல்ல மாட்டார்கள்.எனக்கு த்ரிஷாதான் வேணும்ன்னு அடம்பிடிப்பார்கள்.


படம் முழுக்க ஒரு தேவதை போலவே வந்து போகிறார்.தேவதை என்ற சொல்லுக்கு த்ரிஷா என்று இன்றைய இளைஞர்கள் அர்த்தம் சொல்லுவார்கள்.வெகு சீக்கிரமே ஒரு கோவில் கட்டினாலும் அது அசாதாரணம் இல்லை.நான் படம் பார்க்க சென்றதே த்ரிஷாவுக்காகதான். அந்த எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செய்து விட்டார்கள் இந்த படத்தில்.

அவரின் அந்த கர்லி ஹேரை சொல்லவா இல்லை அந்த மென்மையான பார்வையை சொல்லவா இல்லை கழுத்துக்கு அழகு சேர்க்கும் அந்த டாலரை சொல்லவா இல்லை புடவையை கொஞ்சம் தளர்வாக உடுத்தியிருக்கும் அழகை சொல்லவா இல்லை அந்த ஸ்டைலான நடையை சொல்லவா.எதைச் சொல்லவென்றே தெரியவில்லை.அதிலும் நான் சொல்ல போகும் இந்த காட்சியில் யாராக இருந்தாலும் த்ரிஷாவின் ரசிகராகிவிடும் வாய்ப்பு இருப்பதால் த்ரிஷாவை தொடர்ந்து வெறுத்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காட்சியில் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

த்ரிஷாவின் திருமணத்தைப் பார்ப்பதற்காக கேரளா செல்லும் சிம்பு அங்கு இரவில் அவரை தனிமையில் சந்திப்பார்.அப்போது ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கும் த்ரிஷா அந்த இரவொளியில் நிலவாய் மின்னுவார்.

                      தொலைதூரத்து வெளிச்ச்சம் நீ !
                      உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே !!

இந்த வரிகளை நிச்சயமாக தாமரை அந்த ஸ்பாட்டில் தான் எழுதியிருக்க வேண்டும்.கச்சிதமாக பொருந்துகிறது த்ரிஷாவிற்கு.படத்தின் இறுதிவரை எல்லாக் காட்சிகளிலும் நேர்த்தியான உடை தேர்வு செய்த உடை வடிவமைப்பாளர் பாராட்டுக்குரியவர்.

அப்புறம் சிம்புவை பற்றி என்ன சொல்ல - மனிதர் பல இடங்களில் வாரணம் ஆயிரம் சூர்யாவை போல் நடிக்க முயன்று தோற்றிருக்கிறார்.சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எரிச்சலை வரவழைக்கிறது.எனக்கு ஆரம்பத்தில் சிம்புவை இந்த பாத்திரத்தில் பொருத்திப் பார்ப்பது கடினமாக இருந்தது.போக போக சரியாகி விட்டது.இதில் விரலாட்டி பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்திருப்பது மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

படத்தில் சிம்புவின் நண்பராக வருபவர் கொஞ்சம் மெதுவான திரைக்கதைக்கு ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார்.அவரின் முகமும் அவரின் குரலும் இவர் இதற்கு முன்னர் ஏதோ ஒரு படத்தில் நடித்தவர் என்று சொல்லுகின்றன.என்ன படம் என நினைவில்லை.

இந்த படத்தில் இன்னொரு நடிகர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.திரையில் அவரின் முகத்தை தேடாதீர்கள்.உங்களால் கண்டுபிடிக்க முடியாது.அவர்தான் பின்னணி இசை.ரகுமான் அவரின் வாத்தியங்களை வைத்து நம்மை மகுடி கேட்ட பாம்பாய் மயக்குகிறார்.குறிப்பாக சிம்பு முதலில் த்ரிஷாவை பார்க்கும் போது கேட்டில் சாய்வார்.அப்போதும் அப்புறம் சிம்பு குத்துச்சண்டையிடும் போதும் பின்னணி இசை செம!பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது.இனி படு ஹிட்டாகி விடும்.

காதலில் வரும் நிஜமான பிரச்சனைகளை யதார்த்தத்தோடு படமாக்கியிருக்கிறார்கள்.நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான காதல் கதைதான். ஆனால் நிறைய காட்சிகள் வாரணம் ஆயிரத்தை நினைவுபடுத்துகின்றன.அந்த ரயில் காட்சி,ஹீரோ காதலியை தேடி செல்லும் காட்சி,பாடல்களில் ஒரு ஐந்தாறு வெளிநாட்டு பிச்சைக்காரகள் ஹீரோவை சுற்றி ஆடும் காட்சி,இப்படி நிறையவே.அப்புறம் ஒரு பெண்ணை பார்த்த நொடியில் காதல் வருவது,பாதி காட்சிகளில் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்றவை  கவுதம் பாணியாகவே மாறி விட்டது.ஆனாலும் படம் பிடிக்கத்தான் செய்கிறது.

ஒரு காட்சியில் கவுதம் சுய எள்ளல் செய்கிறார்.அதைப் பார்த்த பின்பு  இப்படத்தில் அதை கைவிட்டுவிட்டார் என நினைத்தால் அதைத்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார்.இந்த படம் ஏ சென்டர் படம் என்றெல்லாம் சொல்லப் போவதில்லை.அப்புறம் சில குசும்பர்கள் 'நானே என்னை ஏ கிளாஸ் என்று சொல்லி நுண்ணரசியல் செய்வதாக' சொல்லும் அபாயம் இருப்பதால் அதை உங்க கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

'பச்சக் பச்சக்' என நினைத்த மாத்திரத்தில் சாதாரணமாக படத்தில் கிஸ் அடிப்பதால் 'ஆ ஊ ன்னா கிஸ் அடிச்சுடுறாங்க டா' என்ற கமெண்டை எல்லா தியேட்டர்களிலும் கேட்கலாம்.மொத்தத்தில் படத்தில் பிரித்து சாரி பிரிக்காம மேய்ந்திருக்கிறார் (யார் யாரை என்றெல்லாம் கேட்கக்கூடாது.அதை திரையரங்கில் காண்க!).இப்படம் வயதானவர்களுக்கு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.படத்தின்இரண்டாம் பாதி தொய்வாக செல்வதாக சிலர் சொல்கின்றனர்.ஆனால் எனக்கு படத்தில் பிடித்ததே இரண்டாம் பாதி தான்.

இன்னொரு முக்கியமான விஷயம்..'a film by ' என க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி என்டு கார்ட் போடுவார்கள்.அதை நம்பி வெளியே வந்து விடாதீர்கள்.ஆபரேட்டரிடம் படம் முடிந்து விட்டதா என கன்பார்ம் செய்து விட்டு வெளியேறவும்.

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..