Thursday, October 22, 2009

பிரதமரை சந்தித்த கமல்!!!!!!!

கமல் : பம்பாய் கலவரத்தின் (1993) கொடுமைகளை நேரில் பார்த்து என்னால் மனம்தாள முடியாமல் அங்கேயே அழுது விட்டேன். உடனே சென்று திரைப்படப் பிரமுகர்களுடன் பிரதமர் நரசிம்மராவை சந்தித்தேன். நடந்த சம்பவங்கள் குறித்துக் கேட்டேன். மஹா ஆரத்தி பற்றி எதுவுமே தெரியாது என்றார். என்னுடன் வந்த நண்பர் இதைக்கேட்டு கேலியாக சிரித்து விட்டார் (அவர் முஸ்லிம் நண்பர்) இதனால் அவருக்கு கொஞ்சம் கோபம்.

கலவரங்களின் போது மகாத்மா காந்தி வீதியில் இறங்கி நடந்துள்ளார். வாருங்கள், நாங்கள் உங்களோடு வருகிறோம். பம்பாய் வீதிகளில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம் என்றேன்.

அது எனக்குப் பாதுகாப்பானதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்றார்.

பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? என்றேன்.

சற்று கோபமாக முறைத்த நரசிம்மராவ் நினைத்த உடன் கிளம்புவதற்கு இது ஒன்றும் சினிமா 'ஷுட்டிங் இல்லை என்றார். நீங்கள் நினைப்பது போன்றதல்ல சினிமா 'ஷுட்டிங். அதற்கும் ஏராளமான முன் திட்டங்கள் வேண்டும். மக்களைச் சந்திப்பதற்காக எங்களுடன் வரமுடியுமா? என்றேன்.

நிலைமையின் வளர்ச்சியைப் பார்த்து முடிவு செய்யலாம்'' என்றார்.

உடனே நான் இந்த நிலைமை மேலும் வளர அனுமதிக்கப் போகிறீர்களா?'' என்றேன்.

உடனே கோபமான அவர், எனக்கு நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறீர்களா?

Do you teach me english? என்றார். வேறெதுவும் கேட்க வேண்டுமா? என்று வேறுபக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.

பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு வெளியேறினோம். அப்போது ஆனந்த விகடன் இதழில் இச்சம்பவம் விரிவாக வந்திருந்தது.





ஹி ஹி  ஹி......இது பழைய  செய்திதான்...என்ன  பண்றது ...ரொம்ப நாளா ஒரு பதிவு  எழுதணும்னு ஆசை .....அதான் டோன்டூ ல இருந்து சுட்டு அதை பதிவா போட்டேன் .....
  முழு கட்டுரைக்கு http://dondu.blogspot.com/2009/10/2.html இங்கே சுட்டவும்....

 

3 comments:

புலவன் புலிகேசி said...

பழசாக இருந்தாலும் இதுவரை எனக்குத் தெரியாத நிகழ்வு....

வெற்றி said...

நன்றி நண்பரே.....என் முதல் பதிவின் முதல் பின்னூட்டம் உங்களுடையதுதான்...

புலவன் புலிகேசி said...

//என் முதல் பதிவின் முதல் பின்னூட்டம் உங்களுடையதுதான்..//

வாழ்த்துக்கள் தொதருங்கள்