தமிழ் - வார்த்தைகள் நிரம்ப பெற்ற ஒரு மொழி என்பது அனைவருக்கும் தெரியும்....ஆனால் என்னென்ன வார்த்தைகள் உள்ளன? அதன் அர்த்தம்,பயன்பாடு போன்றவை யாவை? இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தோர் வெகு சிலரே........
கீழ்க்காணும் சொற்களை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்...ஆனால் ஒரு கசக்கக்கூடிய உண்மை யாதெனில் அந்த வார்த்தைகளுக்குரிய ஆங்கில பதம் நமக்கு மிக பரிச்சயம்.......
ஆங்கிலத்தில் zillion என்று பெரிய எண்களை பொதுவாக குறிப்பார்கள்....Trillion க்கு அடுத்ததாக Quadrillion , Quintillion ,...என பட்டியல் நீண்டாலும் ஒவ்வொரு multiples of 1000 க்கு மட்டும்தான் அவர்களிடம் பெயர்கள் உள்ளன......ஆனால் தமிழிலோ ஒவ்வொரு multiples of 10 க்கும் பெயர் இருக்கிறது....
இங்கே ஒரு தலைமுறையே தாய்மொழி தமிழை பள்ளிகளில் கற்காத அவலம் தோன்றி உள்ளது ....இனியாவது மாறுவோம்....மாற்றுவோம்........
23 comments:
வணக்கம் வெற்றி,
நல்ல உபயோகமான பதிவை கொடுத்துள்ளீர்கள்.
எண் அடிப்படையில் எனக்கு ஒரு எதிர் மறை கருத்து உள்ளது. அந்த எண் 9(ஒன்பது) இதை நான் ஒற்று என்று தான் அழைக்க விருப்புகிறேன் . காரணம் ஆறு, ஏழு, எட்டு, பிறகு ஒற்று தானே வரவேண்டும்.எட்டு பத்துக்களை சேர்ந்தது (8*10=80) எண்பது. அப்படியானால் ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது தானே (9*10=90) ஒன்பது, ஆனால் நாம் இதை தொண்ணூறு என அழைக்கின்றோம். இது அடிப்படை தவறு என்று நினைக்கிறேன்.இந்த தவறு எது வரை தொடர்கிறது பாருங்கள்
9= ஒன்பது அல்ல ஒற்று
90= தொண்ணூறு அல்ல இது தான் ஒன்பது(ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது ஒன்பது)
900=தொள்ளாயிரம் அல்ல இது தான் தொன்னூறு (ஒன்பது நூறுகள் சேர்ந்தது தொண்ணூறு)இப்படி கடை நிலை வரை தவறு என்றே நினைக்க தோன்றுகிறது.இது பற்றி ஏதேனும் குறிப்பு இருந்தா சொல்லுங்க வெற்றி.
நன்றி, வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு உபயோகமான பதிவிற்கு
-அடலேறு
//அடலேறு said...
வணக்கம் வெற்றி,
நல்ல உபயோகமான பதிவை கொடுத்துள்ளீர்கள்.
எண் அடிப்படையில் எனக்கு ஒரு எதிர் மறை கருத்து உள்ளது. அந்த எண் 9(ஒன்பது) இதை நான் ஒற்று என்று தான் அழைக்க விருப்புகிறேன் . காரணம் ஆறு, ஏழு, எட்டு, பிறகு ஒற்று தானே வரவேண்டும்.எட்டு பத்துக்களை சேர்ந்தது (8*10=80) எண்பது. அப்படியானால் ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது தானே (9*10=90) ஒன்பது, ஆனால் நாம் இதை தொண்ணூறு என அழைக்கின்றோம். இது அடிப்படை தவறு என்று நினைக்கிறேன்.இந்த தவறு எது வரை தொடர்கிறது பாருங்கள்
9= ஒன்பது அல்ல ஒற்று
90= தொண்ணூறு அல்ல இது தான் ஒன்பது(ஒன்பது பத்துக்கள் சேர்ந்தது ஒன்பது)
900=தொள்ளாயிரம் அல்ல இது தான் தொன்னூறு (ஒன்பது நூறுகள் சேர்ந்தது தொண்ணூறு)இப்படி கடை நிலை வரை தவறு என்றே நினைக்க தோன்றுகிறது.இது பற்றி ஏதேனும் குறிப்பு இருந்தா சொல்லுங்க வெற்றி.
நன்றி, வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு உபயோகமான பதிவிற்கு
-அடலேறு //
நன்றி அடலேறு...தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...
நீங்கள் கூறுவது போல் ஒன்பதை ஒற்று என அழைத்தால் சில குழப்பங்கள் வரும்...அதாவது 'ஒன்று' என்பதற்கும் 'ஒற்று' என்பதற்கும் ஒலி ஒரே மாதிரியாக உள்ளது...அதே போல் எழுத்தின் வடிவிலும் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.....
இதையெல்லாம் யோசித்து வேண்டுமானால் தமிழ் அறிஞர்கள் சொற்களின் பிரயோகத்தை ஒருமுறை left shift செய்திருக்கலாம்..அதாவது ஒற்று<-ஒன்பது<-தொண்ணூறு<-தொள்ளாயிரம்..
ஆனால் அதிலும் முரண்பாடு வராமல் இல்லை...ஏனென்றால் குழப்பத்தை தீர்க்க ஒரு புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தாமல் நான் கூறியதைப் போல் left shift என்னும் அபத்தத்தை அவர்கள் செய்வார்களா என்னும் கேள்வி எழாமல் இல்லை...
இது என்னுடைய கருத்து மட்டுமே..குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை....வேண்டுமானால் தமிழ் ஆய்வாளர்களிடம் விசாரித்து பார்க்கலாம்...ஏன் நம் முதல்வரிடம் கூட பதில் இருக்கலாம்.........
நன்றி நண்பரே..சிந்தனையை தூண்டும் விதமாக கேள்வி கேட்டதற்கு.....
உருப்படியான பதிவு தம்பி
கேபிள் சஙக்ர்
//shortfilmindia.com said...
உருப்படியான பதிவு தம்பி
கேபிள் சஙக்ர் //
நன்றி அண்ணா.....தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...
//என பட்டியல் நீண்டாலும் ஒவ்வொரு multiples of 1000 க்கு மட்டும்தான் அவர்களிடம் பெயர்கள் உள்ளன......ஆனால் தமிழிலோ ஒவ்வொரு multiples of 10 க்கும் பெயர் இருக்கிறது....//
உண்மை நண்பரே....இன்று எதனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.
நல்லா எழுதுறீங்க...தொடருங்கள்..
nalla muyarchi....vazhthukkal...puthiya thagaval ithu enakku....
உங்க பின்னூட்டம் பற்றி தனி கருத்து உள்ளது நண்பரே, அலைபேசியில் இதுக்கான பதில் தருகிறேன் சரியா..
realy intresting bro
//புலவன் புலிகேசி said...
//என பட்டியல் நீண்டாலும் ஒவ்வொரு multiples of 1000 க்கு மட்டும்தான் அவர்களிடம் பெயர்கள் உள்ளன......ஆனால் தமிழிலோ ஒவ்வொரு multiples of 10 க்கும் பெயர் இருக்கிறது....//
உண்மை நண்பரே....இன்று எதனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். //
ஆமாம் நண்பரே...அதிலும் தமிழுக்காக போராடுகிறோம் என்று சொல்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் சேர்க்காதது வேதனை அளிக்கிறது...
// கிருஷ்ண பிரபு said...
நல்லா எழுதுறீங்க...தொடருங்கள்.. //
நன்றி கிருஷ்ண பிரபு...உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...கண்டிப்பாக இப்பணி தொடரும்....
//உங்கள் தோழி கிருத்திகா said...
nalla muyarchi....vazhthukkal...puthiya thagaval ithu enakku.... //
நன்றி கிருத்திகா...உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...
//அடலேறு said...
உங்க பின்னூட்டம் பற்றி தனி கருத்து உள்ளது நண்பரே, அலைபேசியில் இதுக்கான பதில் தருகிறேன் சரியா.. //
சரிங்க நண்பரே.....
//ஸ்ரீ.கிருஷ்ணா said...
realy intresting bro //
நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா...உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...
தமிழின் எண்ணிக்கைக் கணக்கில் இவ்வளவு இருப்பது ஆச்சரியம்தான்!!
//தேவன் மாயம் said...
தமிழின் எண்ணிக்கைக் கணக்கில் இவ்வளவு இருப்பது ஆச்சரியம்தான்!! //
ஆம் நண்பரே...எனக்கும் ஆச்சரியம் தான்..ஆனால் பலருக்கு இது தெரியாமல் போனது வேதனையாகவும் இருக்கிறது...
நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு.
ஆனால் ஒரு சந்தேகம், இதில் வரும் பாதி பெயர்கள் தமிழ் சொற்கள் அல்லவே (உதா: சங்கம், பத்மம்,கும்பம் போன்றவை)
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை.......
உங்கள் கேள்விக்கு விரைவில்(தேடல் என்று முடிகிறதோ) பதிலளிக்கிறேன்......
நல்லதொரு பதிவு. தமிழை தமிழர்களான நாமே காக்கமுன்வரவேண்டும்.....
ஆம் அன்புடன் மலிக்கா........நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
இந்த பதிவில் முதல் பின்னூட்டம் இட்ட அடலேறு எண் அடிப்படையிலான ஒரு வினா எழுப்பி இருந்தார்...அதற்கான பதிலை ஒரு பழைய பதிவிற்குறிய பின்னூட்டத்தை வாசிக்கும் போது காண நேரிட்டது....
ஒன்பது என்றால் ஒன்பத்து .
தொன்மையான பத்து .
தொன்மை என்றால் முந்தைய...
ஒன்பது என்பது பத்துக்கு முந்தையது என அர்த்தம்.
தொண்ணூறு என்பது நூறுக்கு முந்தையது.
தொள்ளாயிரம் என்பது ஆயிரத்துக்கு முந்தையது.....
இப்படியாக பட்டியல் நீள்கிறது......
வணக்கம் வெற்றி,
நீங்கள் சொன்ன மாதிரியும் இருக்கலா, விவரனை தளத்தின் சுட்டியை கொடுக்க முடியுமா.
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு.
ஆனால் ஒரு சந்தேகம், இதில் வரும் பாதி பெயர்கள் தமிழ் சொற்கள் அல்லவே (உதா: சங்கம், பத்மம்,கும்பம் போன்றவை)//
நண்பரே நீங்கள் குறிப்பிட்ட சொறகள் அனைத்தும் தமிழ் சொற்கள் தான் , இப்படி அபாண்டமா இந்த சொற்கள் தமிழ் சொற்களே இல்லைனு சொல்லீட்டீங்களே.
அடலேறு said...
நண்பரே நீங்கள் குறிப்பிட்ட சொறகள் அனைத்தும் தமிழ் சொற்கள் தான் , இப்படி அபாண்டமா இந்த சொற்கள் தமிழ் சொற்களே இல்லைனு சொல்லீட்டீங்களே.
என்னுடைய கருத்துப் படி அவை எல்லாம் வடமொழிச் சொற்கள் தான். தமிழ் சொற்கள் என்று ஆதாரம் இருந்தால், சொல்லுங்கள் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். நன்றி.
Post a Comment