Saturday, January 9, 2010

கேபிளார்க்கு ஒரு அட்வைஸ்!




பார்வர்ட் செய்த கவிதை
'நீ எழுதினாயா'
என அவள் கேட்க
நான் சொன்னேன்
'இல்லை எனக்கும் 
பார்வார்டாய் தான் வந்தது

அதானே!
நீ பதிவிற்கு மட்டும்தானே 
கவிதை எழுதுவாய்..

எப்படி சொல்வேன் 
அவளிடம் 
எனக்கு கவிதை எழுத 
தைரியம் வந்தது 
இவருடைய கவிதையை 
பார்த்துதான் என்று!

பின்னே 
என் குருவின்  கவிதைகள் 
என
இவரின் கவிதைகளை 
நீட்டினால் 
கிழித்து தொங்க 
போட்டு விடுவார்களே 

நீ இவ்வளவு நாள்
ப்ளாக்கில் படித்தது
இந்த கருமத்தைதானா
என்று!

தலைவா!
உனக்கு நான் கூறுவது 
காமம் மட்டுமே 
கவிதையல்ல
வேறு பல 
விசயங்களையும் 
எண்டர் செய்யும் 
பாக்கியத்தை உன் 
எண்டர் கீ பெறட்டும்!!

இதே பாணியை 
தொடர்ந்து
செக்ஸ் கவிஞர்
என்னும் பட்டத்தை
வாங்கி 
சொந்த காசில் 
சூனியம் வைத்து 
கொள்ளாதீர்!!!!


சகல வயதினரும்
இரு பாலரும் 
வாசிக்கும் வண்ணம்
கவிதை இயற்றி
உம் எண்டர் கீக்கு
சாப விமோசனம்
கொடுத்தருள்வாய்!!!





பி.கு : நானும் எத்தன நாள்தான் கொத்து பரோட்டா ல நம்ம பேரு வாரம் ஒரு பதிவர் ல வரும்ன்னு காத்திருக்கிறது..அதான் புறவாசல் வழியா உள்ள நுழைந்திடலாம் என்னும் நம்பிக்கையில் இந்த பதிவை எழுதியுள்ளேன்..கவிதையின் நாயகன் லிங்க் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்.....

 கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..


 


  

27 comments:

அறிவு GV said...

நன்றாக உள்ளது..! நியாயமான கோரிக்கை..!

ஒத்துக்குறேன், உங்ககிட்டையும் என்டர் கீ இருக்குனு ஒத்துக்குறேன். நெக்ஸ்டு மீட் பண்ணுறேன்..! :)

Santhosh said...

இந்த மாதிரி பரபரப்பு தலைப்பு வெச்சிட்டு உள்ள சரக்கே இல்லாம இருந்தா கேபிளார் என்ன wireless கூட கண்டுகாது..

vasu balaji said...

எண்டர் கவிதைக்கு இப்படி வேற அர்த்தமிருக்கோ.:))

புலவன் புலிகேசி said...

கவிதை நன்றுதான்..அவர் காமத்துடன் இன்ன பிற விடயங்களையும் கவிதையாக்க வேண்டும்.

சங்கர் said...

அதுக்குள்ளே ஒரு மைனஸ், இப்பவே பிரபலமாயிட்ட, நடத்து

வெற்றி said...

@அறிவு GV
நன்றி..பாஸ் எல்லார்ட்டயும் எண்டர் கீ இருக்கு..அத அவங்க எது எதுக்கு பயன்படுத்துறாங்கங்கறது தான் மேட்டரே!

வெற்றி said...

@சந்தோஷ் = Santhosh
//உள்ள சரக்கே இல்லாம இருந்தா//

அப்போ அந்த மைனஸ் ஒட்டு நீங்கதானா தல..மிக்க நன்றி!!

//கேபிளார் என்ன wireless கூட கண்டுகாது..//

எந்த காலேஜ்ல சொல்லி கொடுக்கறாங்க wireless விட கேபிள்(அவர் இல்லீங்க) தான் பெஸ்ட்ன்னு..

வெற்றி said...

@வானம்பாடிகள்
ஆமாங்க!
நன்றி..

வெற்றி said...

@புலவன் புலிகேசி
நன்றி தல..அதேதான் ஏன் கோரிக்கையும்..

வெற்றி said...

@சங்கர்
அப்போ நானும் ரவுடி(பிரபல பதிவர்) ஆகிட்டேனா நண்பா.. :))

VISA said...

//பார்வர்ட் செய்த கவிதை
'நீ எழுதினாயா'
என அவள் கேட்க
நான் சொன்னேன்
'இல்லை எனக்கும்
பார்வார்டாய் தான் வந்தது' //

இத்தனை பார்வர்டு இருக்கே நீங்க பார்வர்டு கிளாஸா :)
உடனே விசா ஒரு ஜாதி வெறியன்னு சொல்லி பதிவு போட்டுடாதீங்க சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேனாக்கும்.

Cable சங்கர் said...

சிஷ்யா உன் அட்வைசுக்கு நன்றி.. பாரு.. நீ கூட யாருக்கு கவிதை எழுதியிருக்கே.. காதலிக்குதானே.. எங்க நீ தப்பா நினைச்சிருவியோன்னுதான் இந்த் கருமத்தையா படிக்கிறேன்னு சொல்லுவாங்க.. தனியா படிச்சா அதில இருக்கிற் விஷயம் அவஙக்ளுகும் பிடிக்குனு எனக்கு தெரியும்.. நிச்சயம் நான் காமத்தை மட்டுமே எழுதுவதில்லை. அதனுள் பல விஷயங்களை பற்றி எழுதியிருக்கிறேன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம் ....
தொடருங்கள் ...

Raju said...

ஹலோ.. நீங்க இப்புடி உசுப்பேத்தி உசுபேத்தியே அவரை நல்லா கவிதை எழுத வச்சுருவீங்க போலயே..!

அப்பறம் நானும் கவிஞராகும் அபாயமெல்லாம் இருக்கு.
ஆமா..சொல்லிப்புட்டேன்
:)

சங்கர் said...

@♠ ராஜு

அப்போ இதுவரைக்கும் எழுதினதெல்லாம் என்ன ?? :)))

வெற்றி said...

@VISA
//இத்தனை பார்வர்டு இருக்கே நீங்க பார்வர்டு கிளாஸா :)
உடனே விசா ஒரு ஜாதி வெறியன்னு சொல்லி பதிவு போட்டுடாதீங்க சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேனாக்கும்.//

அத எத்தன தடவ பாக்வர்ட்(பாக்ஸ்பேஸ்) அமுக்கி எழுதுனேன்னு எனக்குதான் தெரியும் :))

வெற்றி said...

@Cable Sankar
மிக்க நன்றி தல..நிச்சயமா தனியா உக்காந்து படிச்சா எல்லாருக்குமே படிக்கும்..

ஆனா அத மட்டுமே எழுத வேணாங்கறது தான் ஏன் எண்ணம!

வெற்றி said...

@நண்டு=நொரண்டு
நன்றி..

வெற்றி said...

@ராஜு
உங்களுக்கு நான் சொல்லணும்ன்னு நெனச்சத சங்கர் சொல்லிட்டாரு..

கேபிள் கவிதை எழுதுனா எல்லாரும் அடுத்து உங்க எதிர்கவுஜய தான் எதிர்பாக்குறாங்க..

டோன்ட் வொர்ரி..உங்கள வேணும்னா அடுத்து உசுப்பேத்தி விட்டுடுறேன்..

வெற்றி said...

@சங்கர்
ஆமா..அதேதான்..

பனித்துளி சங்கர் said...

ஒரு மாறுபட்ட சிந்தனைததான் .
அற்புதம் !
வாழ்த்துக்கள் நண்பரே !




வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

வெற்றி said...

நன்றி சங்கர்..

இராகவன் நைஜிரியா said...

கவித...

ஓகே

நன்று..

வெற்றி said...

நன்றி தலைவா..

பாலா said...

ப்லாகரின் சதி...!!

நான் இந்தப் பதிவுக்கு போட்ட பின்னூட்டம் எங்கே... எங்கே.. எங்கே..?

வெற்றி said...

போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சுங்க..சீக்கிரமா கண்டுபிடிச்சு தர்றதா சொல்லிருக்காங்க..:))

தறுதலை said...

பொங்கல் வாழ்த்துகள்.

முதல்ல அந்த ஆள திரை விமர்சனம் எழுதுறேன்னு 'தங்லீஷ்ல' படுத்தாம இருக்கச் சொல்லுங்கப்பா. அதுக்கு அப்புறமா கவுஜையோ கழுதையோ மேய்க்கறதப் பத்தி பேசலாம்.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'10)