பின் மதிய நேரம்- துணைக்கு
யாருமில்லா
தேசிய நெடுஞ்சாலை
பேருந்து நிறுத்தத்தில்
எனக்கு ஆதரவாய்
எனது கைபேசி மட்டும்!
வந்தது பேருந்து
வந்து சேர்ந்தது
சந்தேகமும்..
ஒட்டுனருக்கும் நடத்துனருக்கும்
எங்காவது செல்ல
தோன்றினால்
தோள் மேல் கை
போட்டு கொண்டு
இந்த பேருந்தை
எடுத்து கிளம்பி விடுவார்களோ ?
தனியனாய் உள்ளேறி
பின்னிருக்கையின் மத்தியில்
அமர்ந்தேன்!
அதன் பின் தான்
அந்த பரவச
அனுபவம்!!
மிதமான இளவெயில்
இதமாக ஏன் முகத்தில் விழ !
சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே
ஜன.30 பிறந்தநாள் வாசகங்கள்
நிரம்பிய பதாகைகள் !
காதை பிளந்து
கபாலம் வரை கதிகலக்கும்
DTS தொல்லை இன்றி
காற்றின் ஓசை
இசையாய் தழுவ !
பேருந்தின் மிதவேக
குலுங்கல் என்னை
தொட்டில்லாட்ட !
சிறிது
கண்ணை மூடினால்
அடடா! அடடா!
இதுவல்லவோ
இங்கல்லவோ ஆனந்தம்!
அருகினில் அவள்
இல்லாததும்
குறையாய் தெரியவில்லை!
இருந்திருந்தால்
இவற்றையா
ரசித்துக் கொண்டிருந்திருப்பேன்!
அவளை மறந்து !!!!
இந்த கவிதை உரையாடல் கவிதை போட்டிக்கு.........
கவிதை பிடிச்சிருந்தா மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..
21 comments:
// இருந்திருந்தால்
இவற்றையா
ரசித்துக் கொண்டிருந்திருப்பேன்!
அவளை மறந்து !!!! //
மறக்க முடியலை போலிருக்கு... ??
பஸ்ஸில் போறவன் அதைப்பற்றி மட்டும் பேச வேண்டியது தானே, எதுக்கு ஜனவரி 30 எல்லாம் இழுக்குற :)))
//இருந்திருந்தால்
இவற்றையா
ரசித்துக் கொண்டிருந்திருப்பேன்!
அவளை மறந்து !!!! //
உங்க பீலிங் புரியுது பாஸ்
:))
நோ பீலிங்...கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
உரையாடல் போடியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், பேருலயே வெற்றிய வச்சிகிட்டு எல்லா பக்கமும் தேடுறிங்களா?
எப்பவும் தூங்கிட்டே இருங்க ..............
அப்படி தூங்குறதுல என்ன இருக்கு ........
நான் அப்ப உங்க கூட இருந்தாலும் தூங்க தான் செய்விங்க .......................
சோம்பேறி வெற்றி ...................... ;)
பரவில்லை கவிதை நல்லா இருக்கு ................:)
சூப்பர் .... கலக்குங்க........
@இராகவன் நைஜிரியா
அதெப்படி முடியும்..
@சங்கர்
நானும் மதுரைக்காரன்தான்டா அப்படின்னு காமிக்கதான்.. :))
@அத்திரி
உங்களுக்காவது புரியுதே..நன்றி பாஸ்..
@ஜெட்லி
:))
@புலவன் புலிகேசி
நன்றி தல.. :))
@வால்பையன்
பேருலேயே வால் இருந்தாலும் நீங்க வால்தனம் பண்ணாமலா இருக்கீங்க..:)
@Saraj
தூங்குனா தான கனவு வரும்..
கனவு வந்தா கனவுல யாரு வருவாங்க?
புரிஞ்சதா...அவங்க கூட கனவுல டூயட் பாடுறதுக்குதான் தூங்குறது..
@எப்பூடி
நன்றி நண்பா..
நல்லா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா கவிதை உங்களுக்கு கைகூடி வரும் நண்பா!
என்னங்க அப்போ இது நல்லா இல்லையா :((
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நீங்கஜனவரி முப்பதப்பத்தி பேசீட்டீங்கள்ள..?
ரெண்டு பஸ்ஸை எரிச்சு அதை வீடியோ கவ்ர் பண்ணீருவோம். ஜாக்கிரதை.
Post a Comment