Thursday, January 14, 2010

அந்த மூன்று வார்த்தை!



                                         சூர்யா,மாயா - இவங்கதான் இந்த கதையோட ஹீரோ அண்ட் ஹீரோயின்.. இப்போ கதைக்குள்ள போவோம்.

இருவரும் வழக்கம் போல் மாமன் பிள்ளைகளாய் பிறக்க போய் கதை எழுதுபவனின் சதியால்  பக்கத்து வீட்டுகாரர்கள் என்றளவில் மட்டும் உறவாகி போனார்கள்.

சிறு வயதிலிருந்தே மிகவும் நெருங்கி பழகிய இருவரும் தங்கள் பெயர் ஒரே போல் முடிய வேண்டும் என்றெண்ணி சூரியன் சூர்யாவாகவும்,மாயன் மாயாவாகவும் பெயர் மாற்றி கொள்ள தீர்மானித்து சூரியன் மட்டும் பெயர் மாற்றலில் வெற்றி பெற்றான்..ஏன்னா மாயன் என்பது ஆம்பிள பேர்..அத எப்படி பெண் குழந்தைக்கு வைப்பாங்க..(சும்மா வாசிக்கனும்னு கடனுக்கு வாசிச்சா இப்படிதான் ஆகும்.கவனமா படிங்க..)

சூர்யாவுக்கு ஏகப்பட்ட கேள் பிரண்ட்ஸ்..ஆனாலும் யாரும் இதுவரைக்கும் அவன்ட்ட ப்ரொபோஸ் பண்ணதில்ல அப்படிங்கற அளவுக்கு அழகன்(?).

ஆனா மாயாவ  பாருங்க..அவளுக்கு  சூர்யா தான் உலகம்..சூர்யா எந்த பொண்ணுட்ட பேசுனாலும் அவளுக்கு பிடிக்காது.ஒரு நாள் சூர்யாட்ட வந்து இன்னிக்கு 'உன்ன நினைச்சிட்டே மருதாணி வச்சேன்..எப்படி சிவந்திருக்குன்னு பாரு' என்று ஆசையாய் அவள் உள்ளங்கைகளை காமிக்க அவனோ 'இது என்ன பெரிய சிவப்பு..உன் உதட்டின் வண்ணம் இன்னும் இதை விட சிவப்பு' என பிட்டை போட அவள் 'போடா எனக்கு வெட்கமா இருக்கு ' என அவன் கன்னத்தை கிள்ளிய போது நிஜமாகவே சிவந்து போனது அவன் கன்னம்..


ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஜூவாலஜி கூட பக்காவா பொருந்தும்..அவங்க வளர்க்கிற பூனைய சொன்னேங்க..(இருவர் கைகளிலும் செல்போன் இருப்பதால் புறா தப்பித்தது..)

இனா பாருங்க(எத்தன நாளைக்கிதான் ஆனாவையே பார்ப்பிங்க!)..அவ்ளோ க்ளோசா பழகியும் ரெண்டு பேருக்கும் ஒரு வருத்தம் இருக்கு..அவங்க இன்னும் அந்த மூன்று வார்த்தைகளை சொன்னதே இல்லை..பின்ன போன SMS ல  பழக ஆரம்பிக்குறவங்க கூட அடுத்த SMS ல அந்த வார்த்தைகளை சொல்லிக்கும் போது பத்து வருசமா பழகியும் நம்மளால இன்னும் சொல்ல முடியலயேன்னு உள்ளுக்குள்ளே பொருமிகிட்டு இருந்தாங்க..

அந்த நாள் வந்தது..இருவருக்கும் பள்ளி இறுதி தேர்வின் இறுதி தேர்வு..இன்னிக்கு சொல்லலேன்னா எப்பவும் சொல்ல முடியாதுன்னு முடிவெடுத்து இன்னிக்கு எப்படியாவது சொல்லிடனும்ன்னு முடிவெடுத்து 
கிளம்பிட்டாங்க..


சூர்யா மாயாவை நெருங்கி வந்து அவள் கண்ணும் இவன் கண்ணும் சந்தித்து இருவரின் பார்வைகளும் முத்தமிட்டு கொண்ட நேரத்தில் அவன் சொல்ல வந்ததை தைரியமாக சொல்லி விட்டான்..அவளும்  இதையே எதிர்பார்த்தவளாய் புன்னகையுடன் தலைகுனிந்து (வெட்கம்!) அவன் சொன்னதையே அவளும் சொன்னாள்..

தேர்வு முடிவுகள் வெளிவந்தன..எதிர்பாரா விதமாய் சூர்யா இறுதியாக எழுதின தேர்வில் பெயில் ஆகி இருந்தான்..அவளோ அந்த பாடத்தில் பள்ளியிலேயே முதலாவதாக தேறியிருந்தாள்..தேர்வு அன்று நடந்ததை நினைத்து பார்த்தான்.. அவள் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளும் ரீங்காரமாய் ச்சீய் தேனீயாய் அவன் காதில் கொட்டின..


                                            





                         ALL THE BEST!!!!!




 நீதி :  நல்லவங்க வாக்கு(மட்டுமே) பலிக்கும்..



 கதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

22 comments:

பரிசல்காரன் said...

/எத்தனை நாள்தான் ஆனாவையே பார்ப்பீங்க//

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் பாஸ்!

சூப்பர்!

vasu balaji said...

:)). நல்லா சொல்றாங்கப்பா நீதிய

என் நடை பாதையில்(ராம்) said...

கொன்னுடீங்க...

angel said...

uyiroda than irukenahhhhhhhhh

வெற்றி said...

@பரிசல்காரன்

//இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் பாஸ்!

சூப்பர்!//

நன்றி தலைவா!!

வெற்றி said...

@வானம்பாடிகள்
//:)). நல்லா சொல்றாங்கப்பா நீதிய//

நன்றிங்க.. :))

வெற்றி said...

@என் நடை பாதையில்(ராம்)
//கொன்னுடீங்க...//

சரிங்க..தலைமறைவாயிடுறேன்.. :))

வெற்றி said...

@angel
//uyiroda than irukenahhhhhhhhh//

அத டாக்டர்தாங்க சொல்லணும்..என்ட்ட கேட்டா நான் எப்படி சொல்லுவேன் :))

Priya said...

//ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஜூவாலஜி கூட பக்காவா பொருந்தும்./:...ha ha ha

Nice story!

பாலா said...

நீங்க பெரிய ரேஞ்சுக்கு வருவீங்க....!!!!!!! :) :)

(நான் நல்லவனா.. கெட்டவனா-ன்னு இன்னும் கொஞ்ச நாளில் தெரிஞ்சிடாது? ) :)

--

எப்படியெல்லாம் நீதி சொல்லுறாங்கய்யா..!!!


ALL THE BEST!!

அண்ணாமலையான் said...

ஹா ஹா ஹா ஹா ஹா நல்லாருக்கு வாழ்த்துக்கள்....

சங்கர் said...

நீ ரொம்ப நல்லவன்


நானும் மூணு வார்த்தை சொல்லிட்டேன்

சுசி said...

அய்யோ கடவுளே காப்பாத்து..

நானும் மூணு வார்த்தை சொன்னேன்.

சூப்பரா எழுதி இருக்கீங்க.

வெற்றி said...

@priya

நன்றி

வெற்றி said...

@ஹாலிவுட் பாலா

நன்றி..

//(நான் நல்லவனா.. கெட்டவனா-ன்னு இன்னும் கொஞ்ச நாளில் தெரிஞ்சிடாது? ) :)//

அது இனிமேல்தான் தெரியணுமா :))

வெற்றி said...

@அண்ணாமலையான்

நன்றிங்க..

வெற்றி said...

@சங்கர்

பின்னூட்டத்துக்கும் வோட்டுக்கும் நன்றி!

அட இது கூட மூணு வார்த்தை தான்..

வெற்றி said...

@சுசி
//அய்யோ கடவுளே காப்பாத்து..//

என்னை தேவையில்லாம கூப்பிடாதீங்க :))

கார்க்கிபவா said...

சகா.. அன்னைக்கே படிச்சு பின்னூட்டம் இட்ட மாதிரி நினைக்கிறேன்.. காணோமே!!

காமெடி நல்லா வருது.. தொடர்ந்து இந்த ரூட்டிலே ட்ரை பண்னுங்க :))

வெற்றி said...

நன்றி சகா..

ப்ளாகர் இப்போ ரொம்ப மக்கர் பண்ணுது..கமெண்ட் பப்ளிஷ் ஆச்சான்னு பார்த்துட்டுதான் கடைய அடைக்க வேண்டியத்திருக்கு..

ராம்குமார் - அமுதன் said...

குத்துங்க எஜமான் குத்துங்க.... இந்த பொம்பளைங்களே இப்படித்தான்ன்ன்ன்ன்ன்.... :) :) :)

சூப்பர் கதைங்க... பிராமாதமான நீதி வேற.... :)) :)) :))

காமேடீ கீமேடீல்லாம சூப்பரோ சூப்பரு....

வெற்றி said...

ரொம்ப நன்றி ராம்குமார் !