Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் கண்ணாடியின் வழியே!!




இந்த படத்தோட கதைய படிக்கணும்னு வந்திருந்தீங்கனா சாரி நான் கதை சொல்ல போவதில்லை..விமர்சனமும் பண்ண போவதில்லை..என் மனதில் பட்ட சில விசயங்களை மட்டுமே எழுத போகிறேன்..

நேத்து ஈவ்னிங் ஷோ  போனேன்..முதலில் 50 ரூபாய் என்றவர்கள் பர்ஸில் இருந்து எடுப்பதற்குள் 100 ஆக்கி விட்டனர்..சரி என்று அடுத்த 50 எடுப்பதற்குள் ஹவுஸ்புல் போர்டு மாட்டி விட்டனர்..பேன்ட் பையை டைட்டாக தைத்த டெய்லரை திட்டிக் கொண்டே வெளியே வந்தேன்..

வரும் வழியில் பார்த்த நண்பன் படத்துக்கு டிக்கெட் புக் பண்ண போவதாக சொல்ல,எனக்கும் ஒன்று ஆர்டர் செய்து விட்டு வந்தேன் அவன் சொந்த செலவில்..இரவு பத்து மணிக்கு வெற்றி திரையரங்கினுள் சென்றோம் (எங்க தியேட்டர் இல்லீங்க)..படத்தை பத்து நிமிடத்துக்கு முன்னரே போட்டு விட்டார்கள்..நான் போகும் போது எம்.ஜி.ஆர் பாடலுக்கு கார்த்தி ஆடிக் கொண்டிருந்தார்..முதலில் இருந்து இராண்டாம் வரிசையில் தான் இடம் கிடைத்தது..கழுத்து வலி இன்னும் விடவில்லை..

அந்த கப்பலையும் தீவையும் பார்த்தவுடனே தோன்றி விட்டது இது சாதாரண படமல்ல என்று..படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க செல்வாதான் தெரிகிறார்..அவரின் படங்களில் வரும் எதையுமே நக்கலாக எடுத்து கொள்ளும் கதாநாயகன், அமைதியாக ஒரு கதாநாயகி (ஆண்ட்ரியா), அப்புறம் இன்னொரு ஹீரோ (ரீமா சென்)..எனக்கென்னமோ படத்தின் முதல் பாதியில் மட்டுமல்ல கிளைமாக்ஸ் வரை ரீமா தான் படத்தின் கதாநாயகனாக தெரிந்தார்..

படத்தின் ட்ரைலரில் கார்த்தி தலையை குனிந்து கொண்டே ஒரு காட்சியில் செல்வார்..அப்போதே வித்தியாசமாய் தெரிந்த அந்த காட்சியின் அர்த்தத்தை படத்தில் காணும் போது சுவாரசியமாக இருந்தது..

முதல் பாதியில் வரும் அந்த ஏழு ஆபத்துகள் நாம் தமிழ் படம் தான் பார்த்து கொண்டிருக்கிறோமா என்னும் எண்ணத்தை ஏற்படுத்தி விட கூடியவை..ஆபத்துகளை அவர்கள் எப்படி கடக்கிறார்கள் என்பதை லாஜிக் பார்க்காமல் பார்க்கவும்..ஏன் என்றால் இப்படம் ஓர் கற்பனை கதை மட்டுமே..

இரண்டாம் பாதியில் வரும் அந்த ராஜா காலத்து கதை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒன்று..அங்கே அந்த குகையில் உள்ளவர்கள் நிறைய வித்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்..அதிலும் ஓரிடத்தில் பார்த்திபன் ரீமாவின் உடலை தொடாமல் நிழலை தொட்டே அவரை எதிர்கொள்வார்..சபாஷ் போட வைத்த காட்சி..

பார்த்திபனுக்கும் ரீமாவுக்கும் நடக்கும் உரையாடலில் சங்க கால வார்த்தைகள் பயன்படுத்தபட்டிருக்கின்றன..புரிதல் ஒன்னும் கஷ்டமாக எல்லாம் இல்லை..பள்ளியில் மேல்நிலை வகுப்பில் செய்யுளை அர்த்தம் புரிந்து படித்திருந்தால் எளிதில் புரிந்து விடக்கூடியது  தான்..

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதற்காக அவர்கள் சிந்திய வியர்வை துளிகள்,மெனக்கெடல்கள் நன்றாகவே தெரிகிறது..ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையும் அவ்வப்போது கண்முன்  நிழலாடுகின்றது..இறுதியில் வரும் போர்க்கள காட்சி இன்னும் பிரமாண்டமாய் எடுத்திருக்கலாம்..செல்வாவின் பேட் லக் (நமக்கும்தான்)..அவருக்கு கிடைத்தது இவ்வளவு மட்டுமே செலவு செய்யும் தயாரிப்பாளர்..

இசையும் ஒளிப்பதிவும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சிறப்பான ஒரு ஒளி-ஒலி அனுபவத்தை தருகின்றன..

படத்தில் எனக்கிருந்த குறை இரண்டே இரண்டுதான் :

1 . மிகவும் எதிர்பார்த்த இரண்டு பாடல்கள் படத்தில் இல்லை..பெம்மானே - நான்கு வரியோடு அமுங்கி விடுகிறது..மாலை நேரம் - இன்னும் அவர்களுக்கு பொழுது சாயவில்லை போலும்..

2 . சில காட்சிகளை தியேட்டர்காரர்களே  கட் செய்து விட்டார்கள் என்று படம் பார்த்து விட்டு சில விமர்சனங்களை படிக்கும் போது தெரிந்தது..

மற்றபடி பெரிதாக குறை ஒன்றும் இல்லை..

எத்தனையோ படங்களை லாஜிக் பார்க்காமல் அற்ப விஷயங்களுக்காக ஓட வைத்திருக்கிறோம்..முதன் முறையாக நிகழ்காலத்தையும் வரலாறையும் இணைக்கும் இப்படத்தை தமிழ் என்னும் ஒரே காரணத்துக்காக ஓட வைக்கலாமே...

இறுதியாக ஒரு வேண்டுகோள் : எப்போதாவது வரும் இது போன்ற படைப்புகளை முதல் நாளிலேயே படத்தின் குறைகளை மட்டும் சொல்லி, புதிய முயற்சிகளை புறந்தள்ளி விடாதீர்கள்..தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே  ப்ளீஸ்!!

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..



32 comments:

குட்டிபிசாசு said...

///தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே ப்ளீஸ்!!//

நல்லா சொன்னிங்க!

ஜெட்லி... said...

nice....

திவ்யாஹரி said...

எப்போதாவது வரும் இது போன்ற படைப்புகளை முதல் நாளிலேயே படத்தின் குறைகளை மட்டும் சொல்லி, புதிய முயற்சிகளை புறந்தள்ளி விடாதீர்கள்..தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே ப்ளீஸ்!!

nan solla nenachatha neenga sollitinga.. thanks.. thaniya oru pathipu podalam nu nenachi sollama vitten.. good.. intha pathivuku neenga ketkamale vote kidaikum.. good work vetri..

தர்ஷன் said...

ம்ம் அருமையான விமர்சனம் வெற்றி

மாலை நேரம் பாடல் மாலை நேரத்து மயக்கம் படத்துக்காக கம்போஸ் செய்தது என நினைக்கிறேன் படம் கை விடப்பட்டதால் இந்த அல்பத்தில் பாட்டு இடம் பெற்றது.

பாலா said...

தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..

பனித்துளி சங்கர் said...

மீண்டும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது உங்களின் இந்த பதிவு வாழ்த்துக்கள் !!!

வெற்றி said...

நன்றி குட்டிப்பிசாசு..:)

மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை..

வெற்றி said...

நன்றி ஜெட்லி..

வெற்றி said...

நன்றி திவ்யாஹரி..

நீங்கள் சொல்ல வேண்டும் என்று எண்ணியதை நான் சொல்லியது மகிழ்ச்சியே!

வெற்றி said...

நன்றி தர்ஷன்

நீங்கள் சொல்லியிருப்பது இதுவரை கேள்விப்படாத தகவல்..நன்றி! :))

வெற்றி said...

@negamam

நன்றி..

வெற்றி said...

@சங்கர்

நன்றி நண்பரே..:))

Ashok D said...

:)

சாமக்கோடங்கி said...

இன்று தான் படம் பார்த்தேன். நீங்கள் சொன்ன எந்த பாடல் காட்சியுமே, அந்த தியேட்டர்ல காமிக்கல. கோயம்புத்தூர் சென்ட்ரல் தியேட்டர். படுபாவி அல்லாத்தையும் கட் பண்ணீட்டான்னு நெனைக்கிறேன்.
உங்கள் கடைசி வரி மிகவும் அருமை. ஆனால் என்னுடைய தாழமையான ஒரு கருத்து. இந்த மாறி ஒரு உலகத்தரமான படத்தை எடுக்கும்போது, செல்வராகவனின், வழக்கமான காமக்காட்சிகளைக் குறைத்திருந்தால், குடும்பத்துடன் அனைவரும் பார்த்திருப்பார்கள், அவருடைய நல்ல நோக்கமும் நிறைவேறியிருக்கும். நான் படம் பாக்கும்போது, குடும்பத்தோட வந்திருந்தவர்களை,நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன்.

அ.ஜீவதர்ஷன் said...

//தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே ப்ளீஸ்!!//

நெத்தியடி...


இப்படியே போனால் இனிவரும் காலங்களில் நல்ல தமிழ்ப்படங்கள் ஓடுவது ரொம்ப கஷ்டம்.

சுசி said...

//தமிழ் என்னும் ஒரே காரணத்துக்காக ஓட வைக்கலாமே...//

ஹஹாஹா..

வைக்கலாம்.. வைக்கலாம்..

துபாய் ராஜா said...

அவசர கோலத்தில் விமர்சனம் எழுதுபவர்களின் மத்தியில் அழகான,அமைதியான,நேர்மையான, நியாயமான விமர்சனம்.

குறையில்லாத எந்த பொருளும் இந்த உலகத்தில் கிடையாது. நமக்கு பிடித்த மாதிரி ஒரு பதிவு எழுத நேரம் ஒதுக்கவே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. மூன்று வருடம் இதே சிந்தனையாக இருப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை விமர்சனம் எழுதும் நண்பர்கள் யோசிக்க வேண்டும்.

அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.

வெற்றி said...

@D.R.Ashok

// :) //

என்னங்க கீபோர்டுல மூணு பட்டன் தான் இருக்கா.. :))

வெற்றி said...

@பிரகாஷ்

//நீங்கள் சொன்ன எந்த பாடல் காட்சியுமே, அந்த தியேட்டர்ல காமிக்கல.//

படத்துலேயே அந்த ரெண்டு பாட்டும் கிடையாதுங்க..

//வழக்கமான காமக்காட்சிகளைக் குறைத்திருந்தால், குடும்பத்துடன் அனைவரும் பார்த்திருப்பார்கள்//

ஆமாங்க..என்ன பண்றது..ஆனா முன் வந்த படங்களில் இருந்த அளவுக்கு இதில் இல்லை என்றெண்ணி சந்தோஷப்படுவோம்..

வெற்றி said...

@எப்பூடி

விடுங்க பாஸ்..மக்களில் வெகு வெகு சிலரே படிக்கும் பதிவுகளில் படத்தை தாறுமாறாக விமர்சிப்பதால் ஒன்னும் _____ முடியாது..

அதிலும் பதிவுகளை படிப்பவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்களே.. அவர்கள் கண்டிப்பாக படம் பார்த்து விடுவார்கள்..இவர்களின் பேச்சை ஒரு பத்து பேர் கேட்பதே பெரிய விஷயம்..

வெற்றி said...

@சுசி

என்னங்க ரெண்டு தடவ சொல்றத பார்த்தா வைக்கலாம்ன்னு சொல்றீங்களா இல்லை வைக்கணுமான்னு கேக்குறீங்களான்னு புரியல.. :))

வெற்றி said...

@துபாய் ராஜா

நன்றி..

//நமக்கு பிடித்த மாதிரி ஒரு பதிவு எழுத நேரம் ஒதுக்கவே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. மூன்று வருடம் இதே சிந்தனையாக இருப்பது எவ்வளவு கடினமான விஷயம்//

ரொம்ப சரிங்க..அவரின் பர்சனல் வாழ்வின் சோகங்களை மறந்து இப்படி ஒரு படைப்பு கொடுத்திருப்பது பாராட்டத்தக்கதே..

புலவன் புலிகேசி said...

உண்மையில் வரவேற்க தக்க படம்தான்

பிராட்வே பையன் said...

மிகச் சிறந்த விமர்சனம்.குறைகளைப் பெரிது படுத்தாமல் பாராட்டியபாங்கு
நன்று.

வெற்றி said...

@புலவன் புலிகேசி

மிக்க நன்றி தல..

வெற்றி said...

@பிராட்வே பையன்

ரொம்ப தேங்க்ஸ்!!

Anonymous said...

வாழ்த்துக்கள்.

கிருபாநந்தினி said...

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கலை. பார்க்கவேண்டிய படம்னு சொன்னது உங்க விமர்சனமில்லாத விமர்சனம்!

வெற்றி said...

நன்றி அம்மு..

வெற்றி said...

நன்றி கிருபா..

தாராளமா பாருங்க..

மணிஜி said...

நல்ல விமர்சனம் வெற்றி(படம் பெறுமா என்று தெரியவில்லை)மாலை சாங் ஷீட் பண்ணப்படவில்லை!

வெற்றி said...

கருத்துக்கு நன்றி தண்டோரா..

படம் நிச்சயம் வெற்றி பெறும்..