என்னவென்று தெரியவில்லை..சில நாட்களாக கணினி முன்னால் அமர்ந்தாலே தலையின் பின் பகுதியில் இடது புறம் வலி பின்னி பெடலெடுக்கிறது..காரணம் என்னவென்று தெரியவில்லை..மேலே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல tightened muscles என்னும் பகுதியில் ஆரம்பிக்கும் வலி அப்படியே ஒரு ஆர்க் போட்டு இடது புற காதில் வந்து முடிவடைகிறது..வலித்தவுடன் கணினியை அணைத்து விட்டு தலைகாணியில் முகம் புதைத்து கொள்வேன்..மனதுக்குள் 'என் பின்னந்தலையில சுர்ர்ர்ர்ர்ருங்குது'ன்னு பாடல் தோன்றும்..
ஒரு நண்பனிடம் கேட்ட போது ஒழுங்கான முறையில் அமராவிட்டால் வலி ஏற்படும்..கணினிக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் நாற்காலி வாங்கி பயன்படுத்து என்றான்..
சரி என கூறிவிட்டு கூகிளிட்ட போது காரணத்தை கண்டு பிடித்து விட்டேன்..கழுத்தின் பின்புறமுள்ள தசையில் அதிக அழுத்தம் ஏற்படும் போது இது போன்ற வலிகள் ஏற்படுமாம்..இனிமேல் ஒழுங்காக உட்கார்ந்து கொண்டு கணினி பயன்படுத்த வேண்டும்..உங்களுக்கும் இதை போன்ற அனுபவம் இருந்தால் பகிரவும்..
கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும்..அதை நினைத்தால் பயமாகவும் உள்ளது..
போனதும் அவர் ஸ்கேன் எடுக்க சொல்வார்..எடுத்தும் அவர் சொல்ல போவது இந்த இரண்டில் ஒன்றுதான்..
1 . உங்க தலையில ஒண்ணுமில்லை..('யோவ்!மூளை இருந்துச்சுயா, நல்லா பாரு ' அப்படினுல்லாம் காமெடி பண்ண முடியாது அங்க..)
2 . உங்களுக்கு பெரிய வியாதி இருக்கு..நீங்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்க போறீங்க..
இந்த வலி முதுகுதண்டு அழுத்தத்தால் வந்தால் அவர் சொல்ல போவது ஆப்சன் 1 ..
அவ்வாறு இல்லாமல் நான் பயந்து கொண்டிருக்கும் ஒரு காரணத்துக்காக வந்திருந்தால்
அவர் சொல்ல போவது ஆப்சன் 2 ..
ஆப்சன் 1 அவர் பதிலாக இருந்தால் ஒன்றும் பெரிதாக பயமில்லை..
ஆப்சன் 2 அவர் பதிலாக இருந்தால் 'வாழ்வே மாயம்' பாடிக் கொண்டு மீதி நாட்களை கடக்க வேண்டியதுதான்..
நான் பயந்து கொண்டிருக்கும் காரணம் வேறொன்றும் இல்லை..அடிக்கடி செய்திதாள்களில் போட்டு பயமுறுத்தும் ஒரு மேட்டர்..
அதிகமாக செல்போன் பயன்படுத்தினால் மூளையை பாதிக்கும்..
மணிக்கணக்கில் அடித்த அரட்டை உயிருக்கு மணி அடித்து விடுமோ என்றுதான் பயமாக இருக்கிறது..
பி.கு : அந்த கவலை எல்லாம் மூளை இருக்கிறவன் அல்லவா பட வேண்டும்..உனக்கேன் இந்த கவலை என்று கேட்க கூடாது..ஏன் என்றால் இது சுய புலம்பல் பதிவு..
பதிவு பிடிச்சிருந்தா மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..
38 comments:
புலம்பல் நல்லா அலம்பலா இருக்கு
See the following link regarding sitting position
http://www.wikihow.com/Sit-at-a-Computer
http://www.marjerizz.com/2009/03/computer-posture-correct-sitting.html
பேச வேண்டியவங்களோட, பேச வேண்டியதெல்லாம், பேசி முடிச்சிட்டா, அப்புறம் மூளை கலங்கினாலும் தப்பில்லை,
பேசுவதாலேயே மூளை கலங்கினா, அதுக்கு எதுவும் பண்ண முடியாது :)))))))
நாங்க கேட்கவேண்டிய பின்குறிப்பை நீங்களே கேட்டுட்டீங்க... இனி நாங்க என்ன சொல்றது?
சேச்சே ஆப்ஷன் ரெண்டு நடக்க சான்சே இல்ல..
நீங்க இன்னும் எத்தனை டெரர்ர்ர்ர்.. பதிவு போட வேண்டியதிருக்கு..
4 நாள் தரையில கழுத்துக்கு டர்க்கி டவல் சுத்திட்டு படுங்க சாமி. சரியாயிரும்.
//மணிக்கணக்கில் அடித்த அரட்டை உயிருக்கு மணி அடித்து விடுமோ என்றுதான் பயமாக இருக்கிறது..//
அவரா நீங்க....
@அண்ணாமலையான்
நன்றி மல..
@eMedicine-வலை வைத்தியம்
மிக்க நன்றி..புக்மார்க் செய்து விட்டேன்..
@சங்கர்
//பேச வேண்டியவங்களோட, பேச வேண்டியதெல்லாம், பேசி முடிச்சிட்டா, அப்புறம் மூளை கலங்கினாலும் தப்பில்லை,
பேசுவதாலேயே மூளை கலங்கினா, அதுக்கு எதுவும் பண்ண முடியாது :)))))))//
நீங்களாம் இப்படி பேசுனா ஏன் மூளை கலங்காது :))
@நாஞ்சில் பிரதாப்
//இனி நாங்க என்ன சொல்றது?//
ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்..அதெல்லாம் மூளை இருக்கறவங்க பண்ண வேண்டியது :)
@சுசி
எப்படியோ நல்லது நடந்தால் சரிதாங்க :)
@வானம்பாடிகள்
மிக்க நன்றி..கண்டிப்பாக செய்கிறேன்..
@எப்பூடி ...
//அவரா நீங்க....//
அவரேதாங்க...:)))
எல்லோருக்கும் ஆகறதுதானே நமக்கும் ஆகும். இதுக்கேல்லாம் வைத்தியம் கண்டுபிடிச்சுடுவாங்க. இதுக்கெல்லாம் பயந்தா, முடியுமா......???
பதிவை வாசித்தபின் கணினியை ஆஃப் பண்ணி விட்டேன்.
ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுபடியும் வந்தாச்சு....ஹெல்மெட் போட்டுட்டு கணினியைப் பார்த்தால் போச்சு.
@kannaki
பேருக்கேத்த மாதிரியே தைரியமாதான் இருக்கீங்க..:)
@goma
அய்யயோ..ஏங்க..
@goma
அதான பார்த்தேன்..இந்த குசும்புக்குதான் முதல் பின்னூட்டமா..:))
MRI Scan 8000 ரூபாய்ங்க :(
சரி விடுங்க மாமே.. எல்லாஞ்சரியாப்பூடும்!
எல்லோருக்கும் இருக்குற வலிதான் இதுக்குப் போயி அலட்டிக்கலாமா வெற்றி
சுலபமா சொல்லிட்டாங்க எல்லாரும்.. இது பத்தி நான் பின்னூட்டம் போட்டா உங்க வலைத்தளம் தாங்காதுங்க..
முடிஞ்சா ஒரு பதிவா கூட போட try பண்றேன்.. அவ்ளோ இருக்கு சொந்தக்கதை.. same pinch தான் சொல்ல முடியும் என்னால.. வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம்..
@பின்னோக்கி
ம்ம்..என்ன பண்றது..வேற வழி :((
@பரிசல்காரன்
ம்ம்..பார்க்கலாங்க..
@thenammailakshmanan
எல்லாருக்கும் இருக்கிற வலி தான்..ஆனா நமக்கு வலிக்கும் போது தான வலியின் கொடுமை புரியுது..
@divyahari
உங்களுக்குதாங்க என்னோட வலி புரிஞ்சிருக்கு..
டாக்(பன்னியே)டர்ர்ர்ர்ர் ஆயிட்டீகளா
சரி ஆகிடும் வெற்றி DOnt worry. Just see the doctor.
செல்லில் பேசுவதை குறைப்பது நல்லது. லேண்ட் லைனில் தான் நான் பெரும்பாலும் பேசுவேன். கணினி என்ன செய்றது.. அலுவலக வேலை.. இந்த ப்ளாக் மாதிரி போதை வேறு.. விட முடியுமா
@நட்புடன் ஜமால்
அய்யோ ராமா இந்த பிளாக்கருங்க கூடலாம் என்னை ஏன் கூட்டு சேர வைக்குற.. :))
@மோகன் குமார்
நன்றி..லேண்ட் லைனில் STD போட்டு மணிக்கணக்கில் கடலை போடுமளவுக்கு வசதி இல்லங்க... :)))
அன்பின் வெற்றி
நகைச்சுவை இடுகை - நன்று நன்று
நல்வாழ்த்துகள் வெற்றி
நன்றி ஐயா.. :))
மீ த 50.. (ஃபாலோயர்ஸ சொன்னேங்க)
நான் கூட கமெண்டுன்னு நினைச்சு பயந்துட்டேன் :))
வெற்றி! உங்க வேதனையை காமெடியா பகிர்ந்துக்கிட்டீங்க. சிரிச்சோம். ரசிச்சோம். எல்லாம் சரி... முதல்ல உடம்பைப் பார்த்துக்குங்க. கவலையா இருக்கு!
இப்போ சரி ஆகிடுச்சுங்க..உங்க அக்கறைக்கு நன்றி..:)))
Post a Comment