Monday, January 25, 2010

விடைதேடல்



எப்போது வேலை கிடைக்கும்?

பெரிய கம்பெனிகள் கேம்பஸ் வருமா?

இந்த முறையாவது டிஸ்டிங்சன் வருமா?

உலக பொருளாதாரம் எப்போது நிமிரும்?

2020இல் இந்தியா வல்லரசாகுமா ?

வாழ்க்கை என்பது என்ன?

நான் என்பது யார்?

கர்மவினை - அதென்ன கருமம்?

எதற்காய் இந்த பிறப்பு ?









முக்கியமில்லை
விடைகள் இவற்றுக்கெல்லாம்!!
இப்போதே
விடைதெரிந்தாக  வேண்டிய
ஒரு கேள்வி!!!





கல்யாணத்த
எங்க ஊரில வச்சுக்கலாமா
அவங்க ஊரில வச்சுக்கலாமா ?
சொல்லிட்டு போங்க...

கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

பி.கு : இந்த டெம்ப்ளேட்ட தமிழ்மணத்துல இணைக்க முடியல..ஏன்னு தெரியல..அது கூட விடைதேடல் தான்..தெரிஞ்சா சொல்லிட்டு போங்க..:))

32 comments:

அண்ணாமலையான் said...

நாலு பேரு வர்ற மாதிரி இடத்துல வச்சிக்குங்க

அ.ஜீவதர்ஷன் said...

கல்யாணம்னா?

சுசி said...

முதல்ல கல்யாணம் யாருக்குப்பா??

வெற்றி said...

@அண்ணாமலையான்

நாலு பேரு மட்டும் வந்தா போதுமாங்க :))

வெற்றி said...

@ எப்பூடி ...
//கல்யாணம்னா?//

அது ஒரு விதமான கண்ணாமூச்சி ரே ரே விளையாட்டு :)

வெற்றி said...

@சுசி

கவிதைய இன்னொருக்கா படிங்க.. :)

Unknown said...

வாழ்த்துகள் வெற்றி! ஊரும் தேதியும் முடிவானதும் தகவல் சொல்லுங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

//கர்மவினை - அதென்ன கருமம்?//

அதானே, ஆனா பினிஷிங் டாப்பு :))

நட்புடன் ஜமால் said...

உங்க ஊரையும் அவங்க ஊரையும் சொல்லுங்க

சொம்பு வந்தவுடன் சொல்லிடறேன்

சங்கர் said...

அவுங்கவுங்க ஊர்ல வச்சிக்குங்க :))

Ashok D said...

//அவுங்கவுங்க ஊர்ல வச்சிக்குங்க :))//

honeymoonயும் அவுங்கவுங்க?? :)

திவ்யாஹரி said...

//இப்போதே
விடைதெரிந்தாக வேண்டிய
ஒரு கேள்வி!//

ஹா..ஹா..ஹா..
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்னு" அப்படியே ரவுண்டு வாங்க பார்ப்போம்..

எதுவாகினும் வாழ்த்துக்கள் வெற்றி.. சீக்கிரமா முடிவு பண்ணி எங்களுக்கு சொல்லுங்க வெற்றி.. பதிவர்கள் எல்லாரையும் ஒரே இடத்தில் பார்க்க ஆவலாக உள்ளேன்..

வெற்றி said...

@முகிலன்

கண்டிப்பா அண்ணா..உங்களுக்கு இல்லாமலா..

வெற்றி said...

@சைவகொத்துப்பரோட்டா

நன்றி :))

வெற்றி said...

@நட்புடன் ஜமால்

நாட்டாமை பாதம் பட்டா இங்க வெள்ளாமை வெளையுமடி!!

ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ....

வெற்றி said...

@சங்கர்

அப்போ ரெண்டு தடவை வைக்கணுமா :))

வெற்றி said...

@D.R.Ashok

உங்களுக்கும் பதில் மேல இருக்கு...

அல்லோ மேலன்னா கமெண்டுக்கு மேல பார்க்கணும்..விட்டத்த வெறிக்க கூடாது :))))

வெற்றி said...

@திவ்யாஹரி

//சீக்கிரமா முடிவு பண்ணி எங்களுக்கு சொல்லுங்க வெற்றி..//

நான் ச்ச்சின்ன பையன்ங்க..இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷம் ஆகும்..:))

தமிழ் உதயம் said...

நமக்கு நம் கல்யாணம் தான் முக்கியம். அவரவர் வினாக்களுக்கு அவரவர் விடை தேடிக்கட்டும்

பின்னோக்கி said...

பெண் பார்வையில் இந்த கவிதை வலி. ஆண் பார்வையில் “மொதல்ல படிச்சு முடிச்சுட்டு வேலை பார்க்கணும் :) “

வெற்றி said...

@தமிழ் உதயம்

நம் க்கு என்னங்க அர்த்தம்? என்னா உன்னா :))

வெற்றி said...

@பின்னோக்கி

நல்லாத்தான் நோக்குறீங்க :))

அமைதி அப்பா said...

கவிதையும், கவலையும் நன்றாக புரிகிறது..!
.
.

ராம்குமார் - அமுதன் said...

:) சூப்பருபா... நல்ல அவசியமான கேள்வி....

Radhakrishnan said...

இரண்டு ஊருக்கும் பொதுவான ஒரு ஊருல இருக்கிற கல்யாண மண்டபத்துல வைத்துக் கொள்ளலாம்.

நல்லதொரு தேடல். சமூக சிந்தனையுள்ள கவிதைனு ஒரு பின்னூட்டம் வேறு சொல்லி இருக்கிறதே.

அன்புடன் மலிக்கா said...

இப்புடிங்க இப்புடியெல்லாம்.

புது டெம்பிளேட் மாற்றி நானும் இதேநிலைதான். ஆனா மீண்டும் வேறு டெம்பிளேட் மாற்றினேன் வந்துவிட்டது சில டெம்பிளேட்டில் இதுபோன்று வருவதில்லைபோலும்..

Chitra said...

கேள்விகள் சூப்பர்! கல்யாணம் எங்கே வேணா வச்சுக்குங்க. எங்களுக்கு அழைப்பு உண்டா?

வெற்றி said...

@அமைதி அப்பா

நன்றி..உங்கள் பெயர் நன்றாக உள்ளது !

வெற்றி said...

@ராம்குமார் - அமுதன்

நன்றி :)

வெற்றி said...

@வெ.இராதாகிருஷ்ணன்

ஆனா நடுவுல இருக்கிற ஊருல எங்களுக்கு உறவினர் யாரும் இல்லேங்க :)

வெற்றி said...

@அன்புடன் மலிக்கா

ஆமாங்க ! மிக்க நன்றி :)

வெற்றி said...

@Chitra

உங்களுக்கு இல்லாமலா :)