Saturday, January 30, 2010

தமிழ்ப்படம் - பூர்த்தியடையாத எதிர்பார்ப்புகள்


மு.கு : இது விமர்சனம் அல்ல..

இந்த பதிவர்கள் சொல்வதை இனிமேல் கேட்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன்..ஆளாளுக்கு படத்தை ஓவராய் ஏத்தி விட அடுத்த வாரம் படம் பார்க்கலாம் என்ற முடிவை மாற்றி ஆசை ஆசையாய் இன்றே கிளம்பி விட்டேன்..துணைக்கு ஒரு நண்பனையும் அழைத்துக் கொண்டு..(அவன் இனிமேல் நான் கூப்பிடும் எந்த படத்துக்கும் வர போவதில்லை என சொல்லி விட்டான் :((  )

படத்தின் முதல் பாதி தூள் கிளப்பியிருக்கிறார்கள்..ஒரு சில காட்சிகளை தவிர மற்றவைகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்..இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாச்சு..இதுக்கு முன்னால பிரண்ட்ஸ் படத்துக்கு தான் இவ்வாறு சிரித்திருக்கிறேன்..இந்த மாதிரி ஒரு பிரமாதமான நகைச்சுவையுடன் ஒரு முதல் பாதி எங்குமே காணாத ஒன்று..

ஆனால் இரண்டாம் பாதி ????????????????????

எந்த படமானாலும் முதல் பாதி மொக்கை போட்டு விட்டு இரண்டாம் பாதி  அடித்து நொறுக்கியிருந்தால் படம் சுயர் ஹிட்..இங்கே அது தலைகீழ் ஆகியிருக்கிறது...இ.பாதியில் நகைச்சுவை என்பது நீளமான சாலையில்  வரும் கி.மீ பலகையை போல்  ஆங்காங்கே தலை காட்டி விட்டு சென்று விடுகிறது..

அதிலும் D for Death என்று ஒருவர் வருவார்..அவர் யார் என்று திரையில் காண்பிக்கும் போது பாதி கூட்டம் திரையரங்கை காலி செய்து விடுகின்றது..கிளைமாக்ஸ் வரை ஒருவர் உக்காந்து பார்த்து விட்டு வந்தால் அவருக்கு பொறுமை என்பது நாடி,நரம்பு,ரத்தம்,சதை, இன்ன பிற வஸ்துக்களிலும் நிறைய ஊறியிருக்க வேண்டும்..

இறுதியாக நண்பன் கேட்டான்..'இந்த படத்துக்கு ஏன்டா என்னைய இவ்ளோ அனத்தி கூட்டிட்டு வந்த?

'இல்லைடா..பிளாக்ஸ்ல நல்லா விதமா ரிவ்யு போட்டிருந்தாங்க..அதான்டா'...

'அதை எல்லாம் நீ ஏன் நம்புற..ஆ.ஒ. படத்துக்கு கேவலமா எழுதியிருந்தாங்க..படம் எப்படி இருந்துச்சு?'

'சரிடா..இனிமேல் அவங்க சொல்றத நம்பலை' ...

மொத்தத்தில் முதல் பாதி - சரவெடி
இரண்டாம் பாதி - புஸ்ஸான சீனி வெடி  

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

30 comments:

Manoj (Statistics) said...

இந்த பதிவர் சொல்வதை இனிமேல் கேட்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.....

ஜெட்லி... said...

ரைட்....நான் திங்கள்கிழமை தான் போறேன்....
கோவா பாத்தியா???

ஜெட்லி... said...

அது என்னப்பா காதல் நகரம்...
அது எங்கே இருக்கு தமிழ்நாட்டில்??

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட் ரைட்....!

வெற்றி said...

@Statistics

காதை பொத்தி கொள்ளுங்கள் :)

வெற்றி said...

@ஜெட்லி

கோவா இன்னும் பார்க்கவில்லை..என்னுடன் வந்த நண்பன் பார்த்து விட்டான்..இந்த படத்துக்கு கோவா தேவலை என்று சொன்னான்..

வெற்றி said...

@ஜெட்லி

நான் இருக்கும் இடத்தில் :)

வெற்றி said...

@பிரியமுடன்...வசந்த்

எந்த அர்த்தத்துல சொல்றீங்கன்னு புரியலையே சகா ?

Cable சங்கர் said...

ஆ.ஓருவன் கமர்சியலாய் பெயிலியர்.. தமிழ்படம் அதனுடய பட்ஜெட்டுக்கு ஆ.ஓவை விட் மிகப்பெரிய ஓப்பனிங்..அதுவேபடத்தின் வெற்றியை நிர்னையத்துவிட்டது..

அ.ஜீவதர்ஷன் said...

சிலபேர் கோவாவை தோற்கடிப்பதற்காகவே தமிழ்படத்திற்கு பில்டப் குடுப்பதாக கேள்வி, உண்மையா?

வெற்றி said...

@Cable Sankar

//ஆ.ஓவை விட் மிகப்பெரிய ஓப்பனிங்//

என்ன ஜி இது..நான் இன்னிக்கு போனப்ப தியேட்டர் காத்தாடுச்சு..

ஆ.ஒ வை விட மிகப்பெரிய ஒப்பனிங் என்பதை ஏற்று கொள்ள முடியாது.

வெற்றி said...

@எப்பூடி ...

தெரியலையே..அந்த நுண்ணரசியல் எல்லாம் எனக்கு புரிவதில்லை !

சைவகொத்துப்பரோட்டா said...

//இ.பாதியில் நகைச்சுவை என்பது நீளமான சாலையில் ஆங்காங்கே வரும் கி.மீ பலகையை போல் ஆங்காங்கே தலை காட்டி விட்டு சென்று விடுகிறது..//

கலக்கல் வர்ணனை....

புலவன் புலிகேசி said...

//அதை எல்லாம் நீ ஏன் நம்புற..ஆ.ஒ. படத்துக்கு கேவலமா எழுதியிருந்தாங்க..படம் எப்படி இருந்துச்சு?'//

அதான் தல...ஆ.ஒ சிறந்த படம்...

சங்கர் said...
This comment has been removed by the author.
சங்கர் said...

மீ த மைனஸ் வோட்

வெற்றி said...

@சைவகொத்துப்பரோட்டா

நன்றி :)

வெற்றி said...

@புலவன் புலிகேசி

ஆமாங்க புலவரே !

வெற்றி said...

@சங்கர்

இந்த நாள் உங்க டைரியில குறிச்சு வச்சுக்கோங்க..தமிழ்மணத்துல பத்து அக்கவுன்ட் கிரியேட் பண்ணி உங்க அடுத்த பதிவுக்கு அத்தனையும் மைனஸ் வோட்டா குத்தல என் பேரு சங்கர் இல்ல :)

சங்கர் said...

ஹையா, இனிமே என் இடுகைகளுக்கு குறைஞ்சது பத்து ஓட்டு கிடைக்கும்

பின்னோக்கி said...

அட நீங்க ஒருத்தர் மட்டும் தான் படம் நல்லாயில்லைன்னு சொல்லியிருக்கீங்க. படம் உங்களுக்கு புடிக்கலையா சரி.

சுசி said...

//
'சரிடா..இனிமேல் அவங்க சொல்றத நம்பலை' ...//

ம்க்கும்.. இது உங்களுக்கு தமிழ்ப்படம் செஞ்ச பெரிய உதவி..

கார்க்கிபவா said...

சகா..முதல் பாதியோடு ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சுமார்தான்.. ஆனால் நீங்க...

அதை விடுங்க ஆ.ஒ எப்படின்னு கேட்டாரே உங்க நண்பர் அவர் கூட சேராதிங்க. உங்க ஊருல அந்த படம் இன்னும் ஓடுதா?

அப்புறம் ஆ.ஒ.பதிவர்கள் எல்லோரும் கொண்டாடினாங்க. நான்,கேபிள்,இன்னும் வெகு சிலரே குப்பையென்றோம் :))

வெற்றி said...

@சங்கர்

ஹலோ ரொம்ப ஆசைப்படக் கூடாது..என் பதிலை திரும்பவும் படிக்கவும் :)

//என் பேரு சங்கர் இல்ல :)//

தொப்பி தொப்பி :))) LOL

வெற்றி said...

@பின்னோக்கி

எனக்கு மட்டுமல்ல..யூத்து யாருக்குமே பிடிக்கலை..இங்கே விமர்சனம் எழுதுறவங்க எல்லாம் வயசானவங்களா இருக்காங்க :))

வெற்றி said...

@சுசி

கண்டிப்பா :)

வெற்றி said...

@கார்க்கி

அதான் சொன்னேனே சகா..முதல் பாதி சரவெடி வெடித்து விட்டு இரண்டாம் பாதியில் புஸ்ஸாகி போன சீனி வெடி வெடித்திருக்கிறார்கள்..

ஆ.ஒ இன்னும் ஓடத்தான் செய்கிறது..

அதிகம் பேர் பட விமர்சனத்துக்கு படிப்பது கேபிளையும்,உங்களையும், பரிசலையும் தான்..நீங்களும் கேபிளும் நெகட்டிவ் விமர்சனம் தானே எழுதினீர்கள் !

Rajan said...

//கிளைமாக்ஸ் வரை ஒருவர் உக்காந்து பார்த்து விட்டு வந்தால் அவருக்கு பொறுமை என்பது நாடி,நரம்பு,ரத்தம்,சதை, இன்ன பிற வஸ்துக்களிலும் நிறைய ஊறியிருக்க வேண்டும்..//

ஆமாப்பா ஆமாம் ! பாத்திரத்த சமீபத்துலதான் பாத்து தொலைச்சேன்

வெற்றி said...

@rajan RADHAMANALAN

ஆமாங்க..நம்மள மாதிரி யங் ப்ளட்க்கு எல்லாம் படம் பிடிக்கவே இல்லை..இந்த வயசான யூத்துகள்தான் தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுறாங்க..

Rajan said...

//இந்த வயசான யூத்துகள்தான் தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுறாங்க..//

லூஸ்ல விடுங்க ! இந்த படத்த நல்லாருக்குன்னு சொன்னா ! கெழட்டு பயலுகள யூத்துனு நாம நம்பிடுவோமாமா ?