Thursday, February 4, 2010

பதிவுலகத்துக்கு குட்பை !

அவ்வளவுதாங்க! எல்லாம் முடிஞ்சு போச்சு..இனிமேல் பதிவுலகத்த விட்டு போயிடலாம்ன்னு இருக்கேன்..ரொம்ப மனசு வெறுத்து போயிட்டேன்..ஒரு சின்ன பையன் எவ்வளவு தான் தாங்குவேன்..எனக்கும் சில உணர்வுகள் இருக்கிறது..ஆள விடுங்கப்பா சாமின்னு நான் புலம்பும் அளவுக்கு என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கிய சில விஷயங்கள் :

==> நான் எங்க போயி பின்னூட்டம் போட்டாலும் என்னை சுத்தி அடிக்கிறதுக்குன்னே சில பேரு இருக்காங்க ..ஸ்மைலி போடுறத கூட சீரியஸா எடுத்துக்குறாங்க..

==> நான் பதிவு போட்ட முதல் ஒரு மணி நேரத்தில் நூறு  ஹிட்ஸ்க்கு மேல வருது..ஆனா அதுல விழுற வோட்டு மூன்று அல்லது நான்கை தாண்ட மாட்டேங்குது..நான் என்ன அவ்ளோ கேவலமாவா எழுதுறேன் ?

==> இந்த கேபிள்,கார்க்கி,பரிசல் போன்றவர்கள் எல்லாம் பின்னூட்டம் போடுவதோட சரி..பாலோ பண்ணுவதோ வோட்டு போடுவதோ கிடையாது..'Follow' பட்டனை அமுக்கி ஒரு ரெண்டு மூணு கிளிக் பண்ணா என்ன குறைஞ்சா போயிடுவாங்க ? என்னை போன்ற சின்ன பதிவர்கள் அவர்களை பின்வாங்க ஆரம்பித்தால் அவர்களுக்கு நூறு பாலோயர் கூட தேறாது..

==> இந்த ராஜுங்றவரு கேபிள் கவிதைக்கு மட்டும் தான் எதிர் கவிதை எழுதுறாரு..நான் எழுதுற கவிதை எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியாதா? நான் கவிதை எழுதாம என்ன கழுதையவா எழுதுறேன்?

==>நான் காதல் (அ) காதலியை பற்றி பதிவு போடுவதால் எல்லாரும் பின்னூட்டத்துல எப்போ கல்யாணம் எப்போ கல்யானம்ன்னு கேக்குறாங்க..ஒரு 21 வயதே நிரம்பியஇளைஞனை இப்படியே கேட்டு உசுப்பேத்துதல் முறைதானா ?

==>சில சமயம் காதலைப் பற்றி பதிவு போட்டு விட்டு அதற்கு வோட்டு கேட்பது எனக்கு என் காதலை விற்பது போல் இருக்கிறது...
மேலே சொன்னதெல்லாம் டூப்பு மச்சி டூப்பு..கீழே சொல்ல போவது தான் டாப்பு...

ஒண்ணுமில்ல..இரண்டு மாத விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பித்து விட்டதால் இனி தொடர்ந்து பதிவு எழுத முடியாது..இனி ஒழுங்காக படித்து ஒரு வேலையில் அமர்ந்தால்தான் எனக்கென்று இருக்கும் ஒரு மிகப்பெரிய  பொறுப்பை 'கை-பற்ற' முடியும்..பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் பதிவு போட முடியும்..நண்பர்களுக்கு பின்னூட்டமோ வோட்டோ போட முடியாது..ரீடரில் தான் பதிவுகளை படிக்கிறேன்..அதுவும் கல்லூரியில் :) என்னை பின்னூட்டமிட தூண்டும்படி(வம்புக்கு இழுக்கும்படி)  ஏதும் பதிவுகள் இருந்தால் அங்கே பின்னூட்டலாம்..மற்ற நண்பர்கள் கோபித்து கொள்ள வேண்டாம்..அப்புறம் முக்கியமான ஒன்று..பாலோயர்ஸ் யாரும் விலகி போயிடதீங்கப்பா..அப்பப்போ பதிவுகள் போடுவேன் :))


ஆணி குறைவாக இருக்கும் மாலை நேரங்களில் டுவிட்டர் பக்கம் நான் தலைகாட்டலாம் சாரி வாலாட்டலாம்..

------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஹைக்கூ:

ஏய் ஓடாதீங்க..நில்லுங்க..ஹைக்கூவை நிதானமாக வாசிக்க வேண்டும்..முதல் இரண்டு வரிகளை மெதுவாக படித்து விட்டு கண்ணை மூடி கவிஞன்(ஹி ஹி! நான்தான்) என்ன சொல்ல வருகிறான் என்று யோசித்து விட்டு பின்பு மூன்றாவது வரியை வாசித்தால் ஒரு உணர்வு கிடைக்கும் பாருங்க..அப்போ நீங்க சொல்லுவீங்க ஹைக்கூகூகூ!!!!!!!

நாத்திகனின்
நெற்றியில் திருநீறு !வென்றது காதல் !!

-----------------------------------------------------------------------------------------------------------------

அப்புறம் ஒரு ஜோக் போடனும்ன்னு நெனச்சேன்..அதுக்குள்ள கார்க்கி அந்த வடையை லபக்கிட்டார்..இருந்தால் என்ன..என் வேலையை சுலபமாக்கியதற்கு நன்றி !

டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது
டீச்சர்:  தேசிய பூ?
மாணவன்: ஒரு சின்னத் தாமரை
டீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா
மாணவன்: கரிகாலன் காலைப் போல
டீச்சர் : (அடிக்கிறார்)
மாணவன்:  நான் அடிச்சா தாங்கமாட்ட
டீச்சர் : குட்டுக்கிறார்
மாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது
டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்
மாணவன் :??????????????????????????????
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

75 comments:

V.Radhakrishnan said...

பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது, நன்றாக படியுங்கள், பதிவுகள் எப்போது வேண்டுமெனிலும் எழுதிக்கொள்ளலாம். படிப்பவர்கள் இருந்து கொண்டேதானிருப்பார்கள்.

சங்கர் said...

இந்தப் பொன்மொழியைப் பற்றி உன்னோட கருத்து என்ன ?

There is always a little truth behind every 'just kidding'


:))))))))

சங்கர் said...

இன்னும் ஒண்ணு விட்டுப் போச்சே

==>> மைனஸ் ஓட்டு போட்டதோட மட்டுமல்லாமல், 'மீ த மைனஸ் வோட்'னு பின்னுட்டம் வேற போடுறாங்க

சங்கர் said...
This comment has been removed by the author.
சங்கர் said...

//எல்லாரும் பின்னூட்டத்துல எப்போ கல்யாணம் எப்போ கல்யானம்ன்னு கேக்குறாங்க..ஒரு 21 வயதே நிரம்பியஇளைஞனை இப்படியே கேட்டு உசுப்பேத்துதல் முறைதானா ?//

கேக்குறவங்க யாருன்னு பார்த்தா உனக்கே புரியும் :))

சங்கர் said...

//==> நான் எங்க போயி பின்னூட்டம் போட்டாலும் என்னை சுத்தி அடிக்கிறதுக்குன்னே சில பேரு இருக்காங்க//

அப்புறம் எப்படி பினா பனா ஆகறது, உனக்கு அரசியலே தெரியலையே

பிரியமுடன்...வசந்த் said...

ஜோக் சூப்பர் மச்சி

Saraj said...

இந்த ஜோக் குறும் செய்தில வந்தது தான :)....

//நாத்திகனின்


நெற்றியில் திருநீறு !


வென்றது காதல் !!//

நாளைக்கு நீங்க வச்சா பாக்கலாம்

வென்றது காதலானு :)எப்பவும் blog இல்லாம என் உடனும் பொழுதை கழிக்கவும்.......

ஜெரி ஈசானந்தா. said...

good boy.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல சேட்டை... சரிதான்...

ஐயா சாமி.. நான் பாலோ பண்ணிட்டேன்ப்பா..:-))))

அறிவன்#11802717200764379909 said...

எழுதறத இப்போ விட்டாலும் பின்னால் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்;ஆனால் இப்போ படிக்கிறத விட்டுட்டீங்கன்னா நெம்பக் கஷ்டம்..

அதனால...ஒழுங்கா படிக்கிற வழியப் பாருங்க..

திவ்யாஹரி said...

குட்பைன்னு பார்த்ததும் பதறி போய் வந்தா கிண்டலா பண்ற? நல்லா இருக்குங்க வெற்றி..

//நாத்திகனின்
நெற்றியில் திருநீறு !
வென்றது காதல் //
நல்லா இருக்கு.. konjam சரஜ் சொல்றதையும் கவனிப்பா..

//டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்//
மாணவன்: வேட்டை ஆரம்பமாகிடுச்சி டோய்ய்ய்ய்ய்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றாக படியுங்கள்

முகிலன் said...

//"பதிவுலகத்துக்கு குட்பை !//

தலைப்பைப் பாத்ததும் ரொம்ப சந்தோசப்பட்டுட்டேன்..

ஆமா மதுரையில எந்த காலேஜ்ல படிக்கிற? நானும் மதுரைல படிச்சவந்தான்.. :)

♠ ராஜு ♠ said...

சும்மாவா..?
மாசம் கரீக்ட்டா ஒண்ணாந்தேதியானா, கேபிளண்ணே செக் அனுப்பிருவாரு தெரியுமா..? !

சங்கர் said...

ப்ளாங் செக் தானே :)

சங்கர் said...

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்

'பதிவுலகுக்கு குப்பை'ன்னு படிச்சிட்டு, எப்பவும் போடுறது தானே, இதென்ன புதுசான்னு நினைச்சேன்

சங்கர் said...

//Saraj said...
நாளைக்கு நீங்க வச்சா பாக்கலாம்
வென்றது காதலானு :)//

@வெற்றி
இங்க மட்டும் தானே இந்த மரியாதையெல்லாம்

எப்பூடி ... said...

பாத்து பத்திரமா போயிற்று வாங்க.

கார்க்கி said...

ரைட்டு.. வெற்றியோட திரும்பனும்ன்னு உங்க கிட்ட சொன்னா இலக்கணப்பிழை ஆயிடும் :))

சுசி said...

ஓக்கே.. ஓக்கே..

பொறுப்பை நிறைவேத்துர வழிய பாருங்க முதல்ல..

நாங்க வெயிட் பன்றோம்..

Chitra said...

ஓட்டு போட்டுட்டேன்.
வாழ்த்துக்கள். அப்போ அப்போ பதிவு போட மறக்காதீங்க.

Cable Sankar said...

:)

வால்பையன் said...

Nice one

வால்பையன் said...

:-)

ராமலக்ஷ்மி said...

நல்லாப் படியுங்க. வாழ்த்துக்கள்.

ஹைக்கூ & ஜோக் அருமை:)!

சைவகொத்துப்பரோட்டா said...

வென்று வாருங்கள். காத்திருக்கிறோம்.

பரிசல்காரன் said...

இன்னும் மூணு மணிநேரத்துக்குள்ள உங்களை ஃபாலோ பண்றேன். எங்கயும் போகாதீங்க.

நான் உங்களைப் படிச்சுட்டுதான் இருக்கோம் பாஸ். தவிரவும் பதிவுலகைப் பொறுத்தவரை சின்ன பதிவர், பெரிய பதிவர் எதுவும் இல்லைங்க. ரெண்டு வாரம் எழுதலைன்னா நான் அம்பேல். ரெண்டுவாரம் தொடர்ந்து எழுதியும் ஒண்ணாவது நல்லா இல்லைன்னாலும் அம்பேல். அம்புட்டுதான்!

நல்லா படிங்க. உங்க காலேஜ் ஆண்டுவிழாவுக்கு கூப்பிடுங்க. கலக்கலாம்! (எதைன்னு தனியா சொல்றேன்)

நண்டு=நொரண்டு said...

வாழ்த்துக்கள்

Sangkavi said...

கலக்கல் பதிவு....

நல்லாப்படிச்சு உங்க லட்சியம் நிறைவேற என் வாழ்த்துக்கள்...

LK said...

iopathan unga pathivu en readerla vanduchi,. nalla padinga. appathan nalla velai kidachu officela irunthu blog podalam. en blog pakkamum vanga

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணி வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்தற வழியைப் பாரு தம்பி..!

மதார் said...

தம்பி நல்ல படிப்பா , இந்த அக்காவையும் மறந்துடாத .

நட்புடன் ஜமால் said...

ஆஹா நான் என் பதிவை பற்றி சிறு குறிப்பு இங்கே ஒரு கமெண்ட்ல விளங்கிடிச்சி - நன்றிங்கோ

--------------

ஜாலியா இருந்துட்டு வாங்க ...

வெற்றி said...

@V.Radhakrishnan

நன்றி..இனிமேல் படிப்புதான்..

வெற்றி said...

@சங்கர்

//There is always a little truth behind every 'just kidding'//

Not only little..but also some big truth.. :)

வெற்றி said...

@சங்கர்

அவங்களே உண்மைய ஒத்துக்கிடுறதால அவங்கள மன்னிச்சு விட்டுடலாம்..

வெற்றி said...

@ சங்கர்

//கேக்குறவங்க யாருன்னு பார்த்தா உனக்கே புரியும் :))//

புரியலையே ..

வெற்றி said...

@பிரியமுடன்...வசந்த்

தேங்க்ஸ் மாம்ஸ் !

வெற்றி said...

@சங்கர்

//அப்புறம் எப்படி பினா பனா ஆகறது, உனக்கு அரசியலே தெரியலையே//

நான் அரசியல்வியாதி ஆக விரும்பல :)

வெற்றி said...

@ஜெரி ஈசானந்தா.

thank u..

வெற்றி said...

@கார்த்திகைப் பாண்டியன்

அது !

வெற்றி said...

@அறிவன்#11802717200764379909

நன்றி..கண்டிப்பாக இனிமேல் கொஞ்ச நாளைக்கு படிப்புதான்..

வெற்றி said...

@திவ்யாஹரி

அப்படி பதறனும்ன்னு தான அந்த டைட்டிலையே வச்சேன்.. :)

வெற்றி said...

@T.V.ராதாகிருஷ்ணன்

கண்டிப்பாக..நன்றி..

வெற்றி said...

@முகிலன்

அதான..ஒருத்தன வழியனுப்பி வைக்குறதில என்னா சந்தோசம்..:)

அன்னிக்குத்தான மெயில்ல பெசுனோம்..அதுக்குள்ள மறந்துட்டீங்களா..

வெற்றி said...

@♠ ராஜு ♠

செக் அனுப்புவாரு..ஆனா உங்களுக்கு அனுப்புவாரா ?

வெற்றி said...

@ சங்கர்

//ப்ளாங் செக் தானே :)//

:))

வெற்றி said...

@சங்கர்

//'பதிவுலகுக்கு குப்பை'ன்னு படிச்சிட்டு, எப்பவும் போடுறது தானே, இதென்ன புதுசான்னு நினைச்சேன்//

ஆமாமா..எப்பவும் நீங்க போடுறதுதான..

சீக்கிரம் கண்ணை செக் பண்ணுங்க பாஸ்..

வெற்றி said...

@சங்கர்

கூட்டத்துல கட்டுசோத்த அவுக்ககூடாது தல :)

வெற்றி said...

@எப்பூடி ...

நன்றி உங்கள் அக்கறைக்கு :)

வெற்றி said...

@கார்க்கி

நன்றி பாலோயர் ஆனதற்கு :)

வெற்றி said...

@சுசி

நன்றி..உங்களை ரொம்ப நேரம் வெயிட் பண்ண விடாம சீக்கிரமே வந்துடுறேன்..

வெற்றி said...

@Chitra

நன்றி..கூடிய சீக்கிரம் அடுத்த பதிவு வருது..

வெற்றி said...

@Cable Sankar

என்ன தலைவரே வெறுமனே சிரிச்சிட்டு போயிட்டீங்க..நீங்க பேட் பாய்..கார்க்கி தான் குட் பாய் :)

வெற்றி said...

@வால்பையன்

நன்றி..

வெற்றி said...

@ராமலக்ஷ்மி

நன்றி :))

வெற்றி said...

@சைவகொத்துப்பரோட்டா

மிக்க நன்றி..

வெற்றி said...

@பரிசல்காரன்

//இன்னும் மூணு மணிநேரத்துக்குள்ள உங்களை ஃபாலோ பண்றேன். எங்கயும் போகாதீங்க.
//

மூணு மணி நேரத்துக்கு உங்க அகராதியில என்ன அர்த்தம் பாஸ் :)

//உங்க காலேஜ் ஆண்டுவிழாவுக்கு கூப்பிடுங்க. கலக்கலாம்! //

எனக்கு எதையும் கலக்கி பழக்கமில்லை :)

வெற்றி said...

@நண்டு=நொரண்டு

நன்றி..

வெற்றி said...

@Sangkavi

நன்றி :)

வெற்றி said...

@LK

கண்டிப்பா செய்வோம் பாஸ்..

வெற்றி said...

@உண்மைத் தமிழன்

உங்க அறிவுரைக்கும் அக்கறைக்கும் நன்றி அண்ணே..

வெற்றி said...

@மதார்

உங்களை எப்படிக்கா மறப்பேன்..இந்த பதிவுல முதல் அட்டாக் உங்களுக்குத்தானே.. :))

வெற்றி said...

@நட்புடன் ஜமால்

உங்களுக்கு என்னங்க விளங்குச்சு..எனக்கு புரியல..

பிரபு . எம் said...

யதார்த்தமா எழுதுறீங்க வெற்றி....
நல்லா படிங்க... நேரம் கிடைக்கும்போது எழுதவும் செய்யுங்க....
நானெல்லாம் படிச்சுமுடிச்சிட்டாலும் கூட மாசத்துக்கு ஒரு இடுகைதான் எழுதுறேன்!! :)

புலவன் புலிகேசி said...

சரி தல அப்பப்ப எழுதுங்க..நல்லா படிங்க..வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் வெற்றி

நல்லாப்படிச்சு வாழ்க்கையிலே முன்னேறி கை-பற்றி நல்லாருக்க் நல்வாழ்த்துகள்

கலயாணத்துக்கு அழைப்பு அனுப்புப்பா

ஆமா நானு நீ ராஜு எல்லாம் ஒரே ஜாதி தெரியுமா - பாத்துக்க ஆமாம்

( நானும் நானும் தொடர ஆரம்பிச்சிட்டேன்ல )

கிருபாநந்தினி said...

தலைப்பைப் பாத்தவுடனே டூப்புன்னு புரிஞ்சுடுச்சு. இருக்கட்டும். கவித நல்லாருக்கு வெற்றி! அதோட உல்டா கவித:
ஆத்திகன் நெற்றியில்
எங்கே காணோம் திருநீறு?

தோற்றது காதல்!

எப்பூடி? :)

வெற்றி said...

@பிரபு . எம்

நன்றி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.. :)

வெற்றி said...

@புலவன் புலிகேசி

சரி தல..நன்றி..

வெற்றி said...

@cheena (சீனா)

நன்றி..உங்களுக்கு இல்லாத அழைப்பா அய்யா..

அது என்ன ஜாதி ஐயா ?

வெற்றி said...

@கிருபாநந்தினி

அறிவுக் குத்துவிளக்குங்க நீங்க..

ஹையா..என் கவிதைக்கும் எதிர்கவிதை எழுத ஆள் கிடைச்சாச்சு :)

கண்ணகி said...

தாங்க முடியல...

வெற்றி said...

@கண்ணகி

கீழே போட்டுருங்க :)