வந்தாச்சு வந்தாச்சு !
நான் மறுபடியும் பதிவெழுத வந்தாச்சு !!
இடையில் சில நாட்கள் வேலை அதிகம் இருந்ததால் (உடனே 'யாரோட இடையில்' ன்னு எல்லாம் கமென்ட் போட்டு கலாய்க்க கூடாது) பதிவெழுத முடியாமல், பின் ஒரு நன்னாளில் பழைய வேகம் வந்து 'இனி எப்படியாவது பதிவெழுதி விடுவது' என முடிவெடுத்து இதோ வந்து விட்டேன்..
எதை எழுதுவது என தெரியவில்லை..பாதியில் ட்ராப்டில் தூசி மண்டிக்கிடக்கும் பதிவுகளை போடுவதா அல்லது புதிதாக எழுதுவதா என தெரியவில்லை..
சரி..ட்ராப்டில் இருப்பதை 'பொக்கிஷ'த்துக்கு அனுப்பி விட்டு புதிதாக வந்த மதராசபட்டினம் , களவானி படங்களின் விமர்சனங்களை எழுதலாம் என நினைத்தால் அதை ஏற்கனவே பலர் எழுதி விட்டார்கள்..பதிவுலகுக்கு ரீ-என்ட்ரியாக வரவிருக்கும் பதிவு கொஞ்சம் புதிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க தோன்றுகிறது என மனம் டைப்படிக்க சொல்கிறது..
பதிவுகள் போடாவிட்டாலும் அவ்வப்போது பதிவுலக நண்பர்களிடம் இணையம் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடுதலில்('டச்'சுக்கு தமிழில் இதுதானே அர்த்தம்) தான் இருந்தேன்..
தமிழ்,அர்த்தம் என்றவுடன் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.'அட்ஜஸ்ட்' என்னும் தமிழ் வார்த்தைக்கு செம்மொழி அர்த்தம் என்ன? நானும் யோசித்து யோசித்து பார்த்தேன்.பொறுத்தல்,அமைதியாக இருத்தல் இதை தவிர வேறு எந்த வார்த்தையும் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது.சரி ஒரு வேளை 'அட்ஜஸ்ட்' என்பதே செம்மொழி வார்த்தைதானோ என வரைமுறைக்கு வந்தால் 'ஜ' இடிக்கிறது.போதாக்குறைக்கு 'ஸ்' வேறு.ஸ்ஸ்ஸப்பாஆஆ !! உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..இல்லையென்றால் 'ஜ'வையும்,'ஸ்'சையும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போக வேண்டியதுதான்.'ஜெ'வையும் 'தாஸை'யும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டவர்களுக்கு இது ஒன்னும் பெருஞ்சிரமமில்லை.
என்னடா திடீரென்று அரசியல் பக்கம் தாவி விட்டேனென்று நினைக்கிறீர்கள் சரிதானே.'இந்த வயதில் எதற்கு அரசியல்.ஒழுங்காக தொழிலை பார்க்கலாமே?' என சிலர் சொல்லலாம்.இதைதான் நாங்களும் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.கேட்க மாட்டேன்கிறாரே.சரி அவர் தளவிதி(இங்கு எழுத்துப்பிழை என நினைப்பவர்கள் பதிவுக்கு வெளியே நிற்க வைக்கப் படுவார்கள்) அவர் கால்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில்.
சரி..எனக்கு தூக்கம் தூக்கமா வருது..நாளைக்கு பார்க்கலாம்.
டிஸ்கி: பதிவில் நிறைய கொம்பு தெரிவதாக உங்களுக்கு தோன்றினால் அது மிகையல்ல.இனிமே எல்லாம் அப்படித்தான்
என்னடா திடீரென்று அரசியல் பக்கம் தாவி விட்டேனென்று நினைக்கிறீர்கள் சரிதானே.'இந்த வயதில் எதற்கு அரசியல்.ஒழுங்காக தொழிலை பார்க்கலாமே?' என சிலர் சொல்லலாம்.இதைதான் நாங்களும் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.கேட்க மாட்டேன்கிறாரே.சரி அவர் தளவிதி(இங்கு எழுத்துப்பிழை என நினைப்பவர்கள் பதிவுக்கு வெளியே நிற்க வைக்கப் படுவார்கள்) அவர் கால்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில்.
சரி..எனக்கு தூக்கம் தூக்கமா வருது..நாளைக்கு பார்க்கலாம்.
டிஸ்கி: பதிவில் நிறைய கொம்பு தெரிவதாக உங்களுக்கு தோன்றினால் அது மிகையல்ல.இனிமே எல்லாம் அப்படித்தான்
14 comments:
இடையில் சில நாட்கள் வேலை அதிகம் இருந்ததால் (உடனே 'யாரோட இடையில்' ன்னு எல்லாம் கமென்ட் போட்டு கலாய்க்க கூடாது) பதிவெழுத முடியாமல்,
....."இடையில்" நிறைய வேலை இருந்தாலும், மீண்டும் வந்து "பதிவு" வேலையை கவனிக்க வந்து இருக்கும் வெற்றி முகமே, வருக! வருக! வருக!
வாங்க... வாங்க.... வாங்க.
நீங்க சொல்லி ஆங்கல வார்த்தைக்கு.... எனக்கு தெரிந்த...தமிழ்... பொறுத்தருள்.
ஹாஹாஹா..
வாங்க வாங்க..
ஆஹா வாங்கண்ணா வாங்க..
நான் பிளக் ஆரம்பிச்ச புதுசுல லீவுல போனிங்க இப்பத்தான் வர்ரிங்க , வாங்க , வாங்க ஸ்டார்ட் மூசிக்
வாங்கோ வாங்கோ..
வந்ததுமே தூக்கமா..
வாங்க.... வாங்க...
//இனிமே எல்லாம் அப்படித்தான்
//
;) ryttu...
@சித்ரா
அவ்வவ்..ஓவர் பில்டப் உடம்புக்கு ஆவாது அக்கோவ் :)
@கருணா
நன்றி..பொருத்தருள் பொருத்தமாக தெரியவில்லை
@கார்க்கி
நன்றி சகா
@மோகன் குமார்
நான் உங்களுக்கு அண்ணனா? ஏஇகொவெ
@மங்குனி
மன்னருக்கு மூசிக் கேக்கலன்னா தூக்கம் வராதாக்கும்..எகத்தாளத்தை பாரு :)
@சுசி
தூக்கம் வந்தனாலதான் தூக்கம் :)
@தேசாந்திரி
லெப்ட்டு :)
Post a Comment