Tuesday, August 3, 2010

எந்திரன் கதை !!

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் மணி ௦௦௦௦௦00:43..

'இரும்பிலே ஓர் இருதயம்' பாடலை தொடர்ந்து பத்தாவது தடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.அதிலும் பாடலின் 35 வது செகன்ட் முதல் 55 வது செகன்ட் வரை வரும் இசை என்னை ஏதோ செய்துக் கொண்டிருக்கின்றன.

சரி.கதை சொல்றேன்னு சொல்லிட்டேன்.கதையை சொல்லிட்டு அப்புறம் பாட்டை பத்தி பாப்போம்.







'விஞ்ஞானியான ரஜினி ஒரு ரோபோ உருவாக்குறாராங்க.அது திடீர்ன்னு உணர்ச்சி வந்து காதலிக்க ஆரம்பிச்சுடுது.அதுனால வர்ற பிரச்சனைகளும்,சுவாரசியங்களும் தான் கதை'

என்னாது..அதான் எங்களுக்கு தெரியுமேங்கிறீங்களா.வாஸ்தவம்தாங்க.எனக்கும் அவ்ளோதான் தெரியும்.

வெயிட் வெயிட்.உடனே கோவப்பட்டு 'X' அ  அமுக்கிடாதீங்க.சொல்றேன் சொல்றேன்.டிரைலரை உன்னிப்பாக கவனித்தால் ஒரு விஷயம் புரியும்.(ஒன்னுதாங்க புரிஞ்சுச்சு.ப்ளீஸ் விட்டுடுங்க !) ஐஸ் அடிக்கடி ரோபோவுக்கு முத்தமிடுகிறார்.ரோபோ விஞ்ஞானியின் காதலுக்கு தூது போகிறது.ஏன்னா அவருக்கு காதல் செய்ய நேரமில்லை.செல்லமாக ஒரு பொம்மையை கொஞ்சுவதை போல் அதைக்  கொஞ்சுகிறார்.அதை வைத்து ரோபோவுக்கு உணர்ச்சிகள் பொங்கி ஒரு கட்டத்தில் ஐஸை காதலிக்க ஆரம்பித்து விடுகிறது.அதனால் தான் உருவாக காரணமாக இருந்தா விஞ்ஞானியிடம் சண்டை போட்டுக் கொண்டு ஐஸை தூக்கிக் கொண்டு போய் விடுகிறது.இதற்கிடையில் ஐஸையும் வில்லன்களிடம் இருந்து காக்கிறது.
ஒரு நிமிஷம்.நாமளே இவ்ளோ யோசிச்சா ஷங்கர் எவ்ளோ யோசிச்சிருப்பாரு.பார்க்கலாம்.மேல நான் சொன்னது சரியா இருந்தா நான் புத்திசாலி.சரியா இல்லேன்னா நீ முட்டாளான்னு  கேக்குறீங்களா ? ஐ,அசுக்கு புசுக்கு.சரியா இல்லேன்னா ஷங்கர் புத்திசாலி.

ஓகே.இப்போ மறுபடியும் பாட்டை பாக்கலாம்..யாரும் பழக்க தோசத்தில தம்மடிக்க எந்திரிச்சு போனா பிச்சு பிச்சு.இது தலைவர் படம்.

இதுநாள்வரை இந்த பாடலை போல் எந்த பாடலும் இப்படி பைத்தியம் பிடித்துக் கேட்டதில்லை.இந்த பாடலின் வரிகளா,இசையா,இல்லை பாடகர்களின் குரலா என்னை ஈர்த்தது எதுவென தெரியவில்லை..இந்த பாடலில் இருக்கும் மந்திர சக்தி இந்த நேரத்தில் எனது தூக்கத்தை ஆக்கிரமித்து பதிவெழுத தூண்டி விட்டது.

இந்த பாடல் படமாக்கிய விதத்திலும் சொதப்பாமல் இருந்தால் ,தயங்காமல் சொல்லி விடலாம் 'இந்த வருடத்தின் ஹிட் இதுவென்று'.

ரோபோவின் காதலையும்,அதைக் காதலிப்பதில் அந்த பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளையும் சொல்கிறது பாடல்.அதிலும் கீழே உள்ள வரிகள் ஒருமுறை என் நண்பர்களுடனான உரையாடலின் போது பேசப்பட்டவை.

'தொட்டுப் பேசும் நேரம் ஷாக்கடிக்க கூடும்.
காதல் செய்யும் நேரம் மோட்டார் வேகம் கூடும்
இரவின் நடுவில் பேட்டரிதான் தீரும்'

மேட்டர் இதுதான்.கல்லூரியில் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி திடீரென்று என்னைப் பேச சொல்ல நானோ என்ன பேசவென்று தெரியாமல் அப்போது பேப்பரில் படித்த செக்ஸ் ரோபோவைப் பற்றி அள்ளி விட்டேன்.நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா.அவங்களுக்குதான் பாடத்தை தவிர மத்த  எல்லாத்திலயும் டவுட்டு நல்லா வருமே.ஆரம்பித்தார்கள்.

'டேய் ரோபோன்னு சொல்ற ஷாக் அடிக்காதா?'
'இல்லடா..மேல இன்சுலேட்டிங் மெட்டீரியல் போட்டுருப்பாங்க.ஒன்னும் கவலை வேணாம்'ன்னு சொன்னேன்.

அடுத்து செந்திலோட ஒன்னு விட்ட தம்பிக்கு ரெண்டு விட்ட பையன் ஒருத்தன் கேட்டான்

'சப்போஸ் நாம லாக் ஆகி இருக்கிற நேரத்துல பேட்டரி இறங்கிடுச்சுன்னா என்னடா பண்றது?'

'மறுபடியும் எந்திரிச்சு போயி சார்ஜ் ஏத்திக்கோடா'

'எசகுபிசகா மாட்டிக்கிட்டு இருக்கும்போது அப்படியே உள்ளே இருந்து வெளிய எடுக்க முடியலேனா என்னா பண்றது? அப்போ எப்படி எந்திரிச்சு போறது?' என அவன் கேட்டது தான் தாமதம்,சுற்றியிருந்த அனைவரும் குபீரென சிரித்து விட்டோம்.இப்போது கூட 'அதை' நினைத்தால் என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.(அவனுக்கு நான் லாஜிக்கலாக யோசித்து ஒரு பதிலை சொன்னேன்.அதை இங்கே சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது)

டிஸ்கி: மதன் கார்க்கி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.ஒருவேளை அவருட்டயும் இதே சந்தேகத்தை அவரோட மாணவர்கள் கேட்டுருப்பாங்களோ? அவரை எப்பவாச்சும் மீட் பண்ணா கேக்கணும்.

டிஸ்கி 2 :இந்த எந்திர சக்தியை எந்த 'கண்ண'பிரானாலும் தடுக்க முடியாது.எத்தனை களவாணிப் பயல்களை ஆதரித்தாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறாது.ஹி ஹி ஹி !!!

11 comments:

singam said...

எந்திரன் பாடல்களை இங்கு கேட்கவும் பதிவுசெய்யவும் முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://kallimalar.blogspot.com/p/endhiran-songs-free-download.html

எப்பூடி.. said...

//மேல நான் சொன்னது சரியா இருந்தா நான் புத்திசாலி.சரியா இல்லேன்னா நீ முட்டாளான்னு கேக்குறீங்களா ? ஐ,அசுக்கு புசுக்கு.சரியா இல்லேன்னா ஷங்கர் புத்திசாலி.//

கழுவுற மீனில நழுவுறது என்கிறது இதைத்தானா?

கார்க்கிபவா said...

ரைட்டு....

இது 18+ பதிவு போல

தெரியாம சின்னைப்பையன் நான் வந்துட்டேன்

CS. Mohan Kumar said...

தலைவர்..
காதல்
யூத்
பீலிங்

Madhan Karky said...

:))

மங்குனி அமைச்சர் said...

'எசகுபிசகா மாட்டிக்கிட்டு இருக்கும்போது அப்படியே உள்ளே இருந்து வெளிய எடுக்க முடியலேனா என்னா பண்றது? அப்போ எப்படி எந்திரிச்சு போறது?'/////

ஹைய்யோ,ஹைய்யோ

வெற்றி said...

@எப்பூடி

நாங்க எல்லாம் சுறா அண்ணே..யார் கையிலயும் சிக்க மாட்டோம் :)

வெற்றி said...

@கார்க்கி

அதென்ன சகா..சின்னைபையன்?
'சின்' நிறைய பண்ணிருக்கீங்களோ :)

வெற்றி said...

@மோகன் குமார்

என்ன சொல்ல வர்றீங்க :)

வெற்றி said...

@மதன் கார்க்கி

Thanks for your comment..Though its a smiley,it worths more :)

வெற்றி said...

@மங்குனி

நன்றி உங்கள் தொடர் ஆதரவிற்கு :)