Saturday, October 23, 2010

ட்விட்னவங்க சந்திப்பு !!



இதை எப்பவோ பதியணும்னு நினைச்சேன்.கொஞ்சம் லேட்டாயிடுச்சு.ரொம்ப நாளா இன்டர்நெட்டில் பழகுற நண்பர்களின் முகத்தை நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.வேறெதுக்கு அவங்க எல்லாம் ஒரிஜினலா இல்ல 'பாட்'டான்னு தெரிஞ்சுக்கத்தான்.அப்போதான் திடீர்ன்னு ட்விட்டர்ல சாமி அண்ணன் அழைப்பு விடுத்தார்.டிபிசிடி சென்னை வருவதாகவும் அதையொட்டி நடக்கும் ட்வீட்டப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரலாம் என கூறினார்.அதனால் நானும் அங்கு கிளம்பினேன்.....ஆஆஆஆவ்வ்வ்வ் ! எழுதுற எனக்கே கொட்டாவி வருதுங்க.உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு.லிங்கு தர்றேன்.அங்க போய் மேட்டரை சாமியின் சுவையான நடையில் வாசிச்சுக்கோங்க.அங்க இருக்கிற புகைப்பட கமெண்டுகளை வாசிக்க மறந்துடாதீங்க.அங்க தான் இருக்கு மேட்டரு.(அங்கயா இருக்கு 'மேட்டரு'னு எல்லாம் கேட்ககூடாது ) இதுதான் அந்த லிங்க் http://ksaw.me/2010/09/08/tweetup-aug-2010/   டாட்.

அந்த பதிவுல நான் பதிந்ததை இங்கும் பதிந்து கொள்கிறேன்.


‘அண்ணன் டிபிசிடி அழைக்கிறார்’
ட்விட்டரில் இந்த வார்த்தைகளை முதலில் போட்டுத்தான் டிபிசிடி தலைமை ஏற்று நடத்தப் போகும் ட்விட்டர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.அந்த வார்த்தைகளுக்கு அப்படி என்னதான் சக்தி இருந்தது என தெரியவில்லை.
ஒருகாலத்தில் ‘வைகோ அழைக்கிறார்’,'இயேசு அழைக்கிறார்’ போன்ற வார்த்தைகள் நிகழ்த்திய மாயாஜாலத்தை மேலே சொன்ன அந்த வார்த்தைகளும் நிகழ்த்த தவறவில்லை.
ஆம்..பெசன்ட் நகரில் கூட்டம் என அறிவித்ததுதான் தாமதம்.நகரெங்கும் பெசன்ட் நகர் செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிய துவங்கி விட்டன.ஓரிரு நூறு இடங்களில் சிறப்பு பேருந்து விட சொல்லி பொதுமக்கள் மறியலில் கூட ஈடுபட்டதாக செய்தி வந்தது.’எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பதை போல் அன்றைய தினம் எல்லா பேருந்துகளும் ‘பெசன்ட் நகர்’ போர்டு போட்டு ஓடிக் கொண்டிருந்தன.
எவ்வளவு கூட்டம் என்றால் விழா அமைப்பாளர்களாகிய நாங்களே உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பயங்கர கூட்டம்.அங்கு வந்த மக்கள் கூட்டம் இடம் கிடைக்காமல் சர்ச்சுக்குள் நின்று கொண்டு எங்கள் பேச்சை கேட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அலைகடலென கூட்டம் என்ற உவமையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அலையும் கடலும் மட்டுமே பங்குபெற்ற கூட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இது போதாதென்று அன்று நடந்த சென்னை மாரத்தானில் கலந்து கொண்ட வீரர்கள் டிபிசிடி வருவதைக் கேள்விப்பட்டு டெஸ்டிநேஷன் நோக்கி ஓடாமல் நேராக பெசன்ட் நகர் வந்து விட்டனர்.
இதை அறிந்த தமிழக அரசு சும்மா இருக்குமா? தன்னுடைய உளவுத்துறையை அனுப்பி கூட்டத்துக்கு வரும் கூட்டத்தை அறிய சொன்னதால் அவர்களும் ரோந்து என்ற பெயரில் ஹெலிகாப்டரில் வந்து அவ்வப்போது நோட்டம் விட்டு செல்லும் பணியை செவ்வனே செய்தனர்.
என்னதான் டிபிசிடி நல்ல மனிதராக இருந்தாலும் அவரை பிடிக்காத தீய சக்திகள் இருக்கத்தானே செய்யும்.அவர்கள் இந்த கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்த நபர்கள் கர்ம சிரத்தையோடு சில வேலைகளில் ஈடுபட்டனர்.என்ன தெரியுமா? நாங்கள் குழுமியிருந்த இடத்துக்கு வந்து கூச்சலிட்டும் சில வாத்தியங்களை இசைத்தும் பாட்டு என்ற பெயரில் ஊளையிட்டும் பார்த்தனர்.ஊஹூம்..நாங்கள் அசையவே இல்லை..இதை கவனித்த இன்னொரு தீய சக்தி நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ஜிப்புக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து ஆசிட்டை பேசினான்.நல்ல வேளையாக அவன் வைத்திருந்த ஆயுதம் 'சின்ன' அளவில் இருந்ததால் ஆசிட் அங்கேயே சிந்தி விட்டது.நாங்கள் தப்பித்தோம்.

இதனை எல்லாம் தாண்டிதான் இந்த கூட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.கூட்டத்துக்கு வந்த மக்கள் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.இனிமேல் நாம் காலரை தூக்கி சொல்லி கொள்ளலாம்.
‘ 2011 நம்ம கையில ‘
‘அண்ணன் டிபிசிடி தான் அடுத்த முதல்வர்’


13 comments:

ஹாய் அரும்பாவூர் said...

வணக்கம்
உங்கள் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்

படிப்பு எப்படி போகிறது

அத்தி பூத்தது போல வரும் உங்க பதிவுக்கு மறுபடியும் ஒரு வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

nalla santhippu . vaalthukkal.

வெற்றி said...

@அரும்பாவூர்

நன்றி..படிப்பை எல்லாம் முடிச்சு வேலைக்கு சேர்ந்தாச்சு தல..அதான் பதிவு எழுத நேரம் கிடைப்பதில்லை.

@சரவணன்

நன்றி!

Karthik said...

அருமை. தொடர்ந்து காந்தியடிகளாரின் தண்டி யாத்திரை பெரு வெற்றியடைந்ததையும் தங்கள் எழுத்தில் வாசிக்க பிரியப்படுகிறேன். நன்றி. :)

ஹிஹி சும்மா. நல்ல பதிவுங்க. நான் தான் கலந்துக்க முடியாம போச்சு. ஆனா அண்ணன் டிபிசிடி அழைப்பை கேள்விப்பட்டு நாங்க பெங்களூருவே போனோம்ல. :)

வெற்றி said...

@கார்த்திக்

என்னாது காந்தி தண்டி யாத்திரையை முடிச்சுட்டாரா? சொல்லவே இல்லை.அப்போ அதையும் அடுத்து எழுதிடுவோம் :)

பெங்களூரு போனீங்களா?அவரு இதை பத்தி சொல்லவே இல்லையே..ஏன்ப்பா நீயாச்சும் கூப்பிடுருக்கக் கூடாது? போ இனிமேல் பதிவு பக்கம் வராதே :>

Karthik said...

//போ இனிமேல் பதிவு பக்கம் வராதே :>

ஆத்தோவ் பல்ல பத்தி மட்டும் நீ பேசாத ஆத்தோவ். என்னமோ நல்ல பல்ல வெச்சிருக்கிற மாதிரி. :)) (சின்னக்கவுண்டரில் கவுண்டர்.) பதிவு எழுதினா தான வரறதுக்கு. மக்கள்ஸ் படிப்பு எப்பிடி போகுதுன்னு கேக்கறாங்க. ஹிஹி. :))

வெற்றி said...

அடப்பாவி! எனக்கு பெரிய பல்லுன்னு சைடு கேப்புல குத்தி காமிக்கிறதை வன்மையா கண்டிக்கிறேன் :)

Karthik said...

அதையும் சீக்கிரம் பார்த்திருவோம். :)

2011 வேற நெருங்குகிறது. முதல்வர் ஆனதும் முதல் அறிவிப்பாக அண்ணன் டிபிசிடி அவர்கள் அஞ்சு எழுத்துக்களுக்குள் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரிச்சலுகை அறிவித்து முதல் கையெழுத்தை இடுவார் என்று சொல்லிக் கொள்வதில் பெரு, சிலே, அர்ஜென்டினா மகிழ்ச்சி அடைகிறேன்.

இவன்

கார்த்தி..(அவ்ளோதான்பா.)
நுங்கம்பாக்கம்.

எஸ்.கே said...

நல்ல சந்திப்பு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

Swami said...

என்னடா சனிக்கிழமை அதுவுமா என் பிளாக்கில ஹிட் அதிகமா இருக்குன்னு பார்த்த தம்பி நீ பண்ண வேலை :)

நன்றி தம்பி!!

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Philosophy Prabhakaran said...

என்ன நண்பா... எப்பயாவது தலைய காட்டுறீங்க... ஒரே ஒரு பதிவ போட்டுட்டு காணாம போயிடுறீங்க...

Prabu M said...

Superaa ezhuthiyirukka Vetri.. :)
Enjoyed reading it...

வெற்றி said...

நண்பர்கள் அனைவரின் கருத்துகளுக்கும் விசாரிப்புகளுக்கும் நன்றி..

பணியில் சேர்ந்துவிட்டமையால் முன்பு போல் எழுத முடியவில்லை('ஆமா! இல்லேனா மட்டும் தினமும் பதிவு எழுதி கிழிச்சிடுவியா'னு கார்த்திக் பதில் கமென்ட் போடக்கூடாது ஆண்டவா :) )

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பதிவிடுகிறேன்.