Monday, January 17, 2011

காவலன் - கரை சேர்க்குமா விஜயை ?


தொடர் தோல்விகள்,திரையரங்கு உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பு,3 இடியட்ஸ் விலகல்,அரசியல்ரீதியான நெருக்கடிகள்  இத்தனையும் கடந்து திரைத்துறையில் தன்னை நிரூபித்தாக வேண்டிய ஒரு இக்கட்டான, கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்னும் நிலையில் இருக்கும் விஜய்க்கு அவரின் அத்தனை பிரச்சனைகளில் இருந்து ஓரளவேனும் அவரை வெளிக்கொணர உதவியிருக்கும் படம்  -  காவலன் .

பல வருடங்கள் கழித்து விஜய் உண்மையாகவே நடித்திருக்கும் படம் தான் காவலன்.ஒரு பத்து - பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த விஜயை இதில் பார்க்கலாம் (கதையும் அப்படியே). தன்னுடன் போனில் பேசும் பெண்ணுடன் காதல் வசப்பட்ட பின் வரும் ஒவ்வொரு சீனிலும் தளபதி தன்னை நிரூபித்திருக்கிறார்.ஒரு காலத்தில் விஜயின் ரசிகர்களாக இருந்து விஜயின் மசாலா டைப் படங்களைப் பார்த்து அவரை வெறுக்க ஆரம்பித்தவர்கள்  இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பார்கள்.அதிலும் அந்த பார்க் சீன் விஜய் படங்களின்  சூப்பர் சீன்களை வரிசைப்படுத்தினால் முதல் ஐந்து இடத்துக்குள் வந்து விடும்.

இது ஒரு சாதாரண படம்தான்.விஜய் மட்டும் இல்லாமல் போனால் இப்படம் ஊத்திக் கொள்ளக் கூடிய கதையம்சம் கொண்ட படம்.ப்ரண்ட்ஸ்,பிரியமானவளே காலகட்டத்தில் வந்திருந்தால் இது அவ்வளவு ஸ்பெஷலாக தோன்றியிருக்காது.வில்லு,வேட்டைக்காரன்,சுறாக்களுக்கு அடுத்ததாக வந்ததால் ரசிகர்களுக்கு இது நிச்சயமா ஒரு ஸ்பெஷல் விருந்து.மக்கள் வெகுகாலமாய் காண ஏங்கிக் கொண்டிருந்த விஜயை இதில் காணலாம்.முந்தைய விஜய் படங்களைப் போல் இது குழந்தைகளைக் கவர்வது எல்லாம் கடினமே.ஆனால் பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் உங்களை திருப்திபடுத்தக் கூடிய படமே காவலன்.

படத்தில் குறையென எனக்குப் பட்டது சில Outdated வடிவேலுவின் காமெடி காட்சிகளுக்கு பதில் கதை சொல்லுதலில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.படத்தின் ஆரம்ப காட்சிகள் புரிந்து கொள்வதற்குள் சரசரவென பறக்கின்றன.லிவிங்ஸ்டன்,மதன்பாப்,அமிதாப்  ஆகியோர் வரும் காட்சிகளை இன்னும் ரசிக்கும் படியாக மாற்றியிருக்கலாம்.

நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு போக்கிரி ஒன்று மட்டும் தான் அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தியது.அதன் பிறகு வந்த ஒவ்வொரு படமும் விஜயின் இமேஜை இறக்க மட்டுமே பயன்பட்டது.அஜித்துக்கு பில்லா,சூர்யாவுக்கு அயன்,சில்லுன்னு ஒரு காதல் ; ஆனால் விஜய் ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்வது போல் போக்கிரி தவிர வேறெந்த படமும் வரவில்லை.இப்படம் கல்லூரி படிக்கும் போதே வந்திருந்தால் விஜயை தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம் கல்லூரியில். சரியான மார்கெட்டிங் செய்தால் இப்படம் நிச்சயமாய் விஜயின் மற்றொரு வெற்றிப் படமாகும்.

நான் ரசித்த சில டயலாக்ஸ் :

அழகு கண்ணுக்கு மட்டும்தான்..மனசுக்கு இல்ல !

அவ்ளோ இஷ்டம் !

எனக்காக கொஞ்சம் வேண்டிக்கங்க !

மேற்சொன்னவற்றை விஜய் சொல்லும் போது இன்னும் அழகு.

இனிமேல் விஜய் ரசிகர்களும் காலர் வைத்த சட்டை போட்டு கொள்ளலாம்..அதை தூக்கி விட்டு சொல்லிக் கொள்ளலாம் 'நான் விஜய் ரசிகன்' என்று !

7 comments:

Vinu said...

சூப்பர்.......... விஜய் தான் எப்பவுமே மாஸ்

ராம்ஜி_யாஹூ said...

ok nice

Chitra said...

Present, Sir!

Raju said...

வ்வ்வ்வாழ்த்துகள் சொன்னேங்க!

Philosophy Prabhakaran said...

நண்பா... என்னை நினைவிருக்கிறதா... அடிக்கடி பதிவெழுதலாமே....

CS. Mohan Kumar said...

விஜய் படம் வந்தா தான் பதிவெழுதணும்னு இருந்தீங்களோ? :))

அன்புடன் நான் said...

பார்த்தேன்.... உண்மைதான்....
காவலன்....அசத்தல்.