Sunday, January 3, 2010

கற்றுக் கொடுக்கும் கள்ளம்




என் அப்பா
'யாரிடம் பேசுகிறாய்? '
என கேட்டால்
என்ன சொல்வது?

'தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் '
என்று சொல்..

வீட்டில்
'எங்கே செல்கிறாய்? '
என கேட்டால்
என்ன சொல்வது?

'கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் '
என சொல்ல தெரியாதா?

'பேலன்ஸ் ஏன் சீக்கிரம் தீர்ந்தது ?'
என கேட்டால்?

ஜாப் அலெர்ட்ஸ்க்கு
பிடிக்கிறார்கள் என
பொய் சொல்லடி!

'இந்த பரிசு யார் கொடுத்தார்கள்? '
என்றார்கள்..
சொல்லிவிட்டேன்
'என் பள்ளிதோழி என'

அப்பாடா என்றேன்
நிம்மதி
பெருமூச்சுடன்!

ஒவ்வொன்றாக
கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
கள்ளத்தனங்களை..
        .
        .
        .
        .
        .
        .
        .
        .
        .

நாளை எனக்கெதிராக
அவை பயன்படுத்தப்படாது
என்ற நம்பிக்கையில்!!

கவிதை பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

56 comments:

சங்கர் said...
This comment has been removed by the author.
சங்கர் said...

அட்டகாசம்

வெற்றி said...

நன்றி சங்கர்..

இராகவன் நைஜிரியா said...

களவும் கற்று மற... இதுக்கு பொருந்துமாங்க..

இராகவன் நைஜிரியா said...

// தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் '
என்று சொல்..//

ஒரு சிறிய பால் மாற்றம் தானே... தோழன் தோழி ஆகிவிட்டார்..

இராகவன் நைஜிரியா said...

// 'கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் '
என சொல்ல தெரியாதா? //

கல்லூரியில் இதெல்லாம் வேற சொல்லிக் கொடுக்கின்றார்களா?

இராகவன் நைஜிரியா said...

// ஜாப் அலெர்ட்ஸ்க்கு
பிடிக்கிறார்கள் என
பொய் சொல்லடி! //

யார் ஜாப்புக்கு என்றுக் கேட்டால்?

இராகவன் நைஜிரியா said...

இத படிக்கும் போது அனுபவம் பேசுகிறது மாதிரி இருக்கு...

என்ன நான் சொல்வது சரிதானே?

இராகவன் நைஜிரியா said...

// அப்பாடா என்றேன்
நிம்மதி
பெருமூச்சுடன்! //

ஆமாம்... உனக்கு இதுக்கு காசு எங்க இருந்து கிடைச்சதுன்னு கேட்காம விட்டாங்களே அத நினைச்சு.

இராகவன் நைஜிரியா said...

// நாளை எனக்கெதிராக
அவை பயன்படுத்தப்படாது
என்ற நம்பிக்கையில்!! //

நம்பிக்கைத்தான் வாழ்க்கையே..

இராகவன் நைஜிரியா said...

// கவிதை பிடிச்சிருந்தா மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க.. //

ஒட்டுப் போடுவது எங்கள் பிறப்புரிமை..

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தலா எழுதியிருக்கீங்க வெற்றி...!

வெற்றி said...

//களவும் கற்று மற... இதுக்கு பொருந்துமாங்க..//
கண்டிப்பா பொருந்தும்ங்க..

வெற்றி said...

//ஒரு சிறிய பால் மாற்றம் தானே... தோழன் தோழி ஆகிவிட்டார்..//

இது சின்ன மாற்றமா?

வெற்றி said...

//கல்லூரியில் இதெல்லாம் வேற சொல்லிக் கொடுக்கின்றார்களா?//

இல்லை...கல்லூரிக்கே நான்தான் சொல்லி கொடுக்கறது.. :)

வெற்றி said...

//யார் ஜாப்புக்கு என்றுக் கேட்டால்?//

அவ்ளோ தெளிவு கிடையாது..

வெற்றி said...

//இத படிக்கும் போது அனுபவம் பேசுகிறது மாதிரி இருக்கு...

என்ன நான் சொல்வது சரிதானே?//

மிக சரி..அனுபவம் இல்லாமலா?

வெற்றி said...

//ஆமாம்... உனக்கு இதுக்கு காசு எங்க இருந்து கிடைச்சதுன்னு கேட்காம விட்டாங்களே அத நினைச்சு.//

நீங்களே ஐடியா குடுத்துருவீங்க போலயே தல..

வெற்றி said...

//நம்பிக்கைத்தான் வாழ்க்கையே..//

நம்பிக்கைங்கற ஸ்டாண்ட்ல தான் வாழ்க்கைங்கற சைக்கிள் steady யா நின்னுட்டு இருக்கு..

வெற்றி said...

//ஒட்டுப் போடுவது எங்கள் பிறப்புரிமை..//

என்னது ஒட்டா ? எங்க எங்க ஒட்டு போட்டீங்க இதுவரைக்கும்?

வெற்றி said...

@பிரியமுடன்...வசந்த்
மிக்க நன்றிங்க..!

vasu balaji said...

இராகவன் அண்ணே. இதுக்கு கும்மியா இல்ல வரி வரியா படிச்சிக்கிறீங்களா:)) நல்லா இருக்கு வெற்றி

சுசி said...

//நாளை எனக்கெதிராக
அவை பயன்படுத்தப்படாது
என்ற நம்பிக்கையில்!!//

உங்க நம்பிக்கை வீண்போகாம இருக்கட்டும்.

நல்லா எழுதி இருக்கீங்க.

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு நண்பா..ஆமாம் இதுதான் கள்ளக் காதலோ..???ஹி ஹி ஹி

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு "வெற்றி ராஜ்".

உங்களுக்கு வரிசையா மூணு அழகான பெண் குழந்தைகள் பிறக்க போகுது, ஒவ்வொன்றும் ரொம்ப நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போனாலும், காதலிக்க மாட்டேன் என்று சொல்லி உங்களை மாப்பிள்ளை தேட சொல்லப்போகுது, நீங்கள் மாப்பிள்ளை தேடி தேடி தேடி அலையை போகிறீர்கள்.

இது என் சாபம்.

தவறாக நினைக்க வேண்டாம் "சும்மா" நகைக்க :-)

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு வெற்றி!

வெற்றி said...

@வானம்பாடிகள்
நன்றிங்க..

வெற்றி said...

@சுசி
நிச்சயம் வீண்போகாதுங்க.
நன்றி.

வெற்றி said...

@புலவன் புலிகேசி
நன்றி புலவரே
இது கள்ளம் சொல்லித் தரும் கள்ளமில்லா காதல்..

வெற்றி said...

@சிங்கக்குட்டி
நன்றி..
ஆமா ஏன் இந்த கொலைவெறி? எதையாவது சொல்லிட வேண்டியது..அப்புறம் சும்மா சொன்னேன் சுமந்துகிட்டே சொன்னேன்னு சொல்றது..

தவறாக நினைக்க இதுவும் வேண்டாம் "சும்மா" நகைக்க :-)

வெற்றி said...

@பா.ராஜாராம்
நன்றி..இப்போதான் ஒரு ஆத்மதிருப்தி பிறந்திருக்கிறது..முன்னாடியே வருவீங்கன்னு நெனச்சேன்..இப்போதான் வழி தெரிஞ்சதா? :):)

அன்புடன் மலிக்கா said...

/நாளை எனக்கெதிராக
அவை பயன்படுத்தப்படாது
என்ற நம்பிக்கையில்/

நம்பிக்கைதானே வாழ்க்கை வெற்றி.
ஆனபோதும், கொஞ்சம் உசார் வேனுமுங்க [நாளைக்கு]

கவிதை எதார்த்தம்.

thiyaa said...

அருமை

பனித்துளி சங்கர் said...

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!





வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

வெற்றி said...

@அன்புடன் மலிக்கா
நன்றிங்க..
நம்பிக்கை இருக்கும்போது உஷார் அவசியமில்லங்க..

வெற்றி said...

@தியாவின் பேனா
நன்றி

வெற்றி said...

@சங்கர்
மிக்க நன்றி..!

RAMYA said...

ம்ம்ம் நல்லா எழுதி இருக்கீங்க தொடருங்கள்!

// கவிதை பிடிச்சிருந்தா மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க.. //


பிடிச்சிருக்குங்க ஓட்டும் போட்டுடறோம் :)

வெற்றி said...

@RAMYA
ரொம்ப நன்றிங்க..!

அன்புடன் மலிக்கா said...

பலே நம்பிக்கை பலே...

நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க, வெற்றி
http://fmalikka.blogspot.com/

வெற்றி said...

நன்றிங்க..

பூங்குன்றன்.வே said...

//நாளை எனக்கெதிராக
அவை பயன்படுத்தப்படாது
என்ற நம்பிக்கையில்!!//

அசத்தல் கவிதை நண்பா.

புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

வெற்றி said...

நன்றி நண்பா..உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

வெற்றி said...

யாராவது இருக்கீங்களா?
ஒண்ணுமில்ல..இந்த தடவ பின்னூட்டத்தில அரை சதம் அடிக்கணும்னு ஆசையா இருக்கு..இனிமேல் வரவங்க ஜஸ்ட் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போங்க..
நன்றி!

வெற்றி said...

அரைசதம் அடிக்க பார்ட்நேர்ஷிப் கொடுப்பவர்களுக்கு கம்பெனி சார்பில் பின்னூட்ட அலவன்ஸ் தரப்படும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது!

பித்தனின் வாக்கு said...

அருமையான கவிதை, இன்றுதான் முதன்முதலில் உங்கள் பிலாக் படிக்கின்றேன். மிகவும் அருமை நன்றி.

வெற்றி said...

மிக்க நன்றி பித்தனின் வாக்கு..தொடர்ந்து வாங்க..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

வெற்றி said...

நன்றி உலவு..

வெற்றி said...

மீ தி 50th..எப்படியோ அரைசதம் அடிச்சாச்சு..இனிமேல் அடுத்த பதிவ ஆரம்பிக்க வேண்டியதுதான்!

அறிவு GV said...

கடைசில இருக்குற ஆப்பு தெரியாம, ரொம்ப ஆர்வமா படிச்சுட்டேன்.
நல்லா இருக்குங்க.

வெற்றி said...

நன்றி அறிவுGV..

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Sakthi said...

வெற்றி பெற வாழ்த்துகள்

ராம்குமார் - அமுதன் said...

அடி பொலியான கவிதை... என் உச்சி மண்டைல சுர்ர்ர்ர்ர்ர்....

cheena (சீனா) said...

அன்பின் வெற்றி

களவும் கற்று மற - கள்ளத்தனமெல்லாம் கற்க வேண்டும் - தேவைப்படும் போது பயன்படுத்தலாம் - ஆனால அதுவே தொழிலாகி விடக் கூடாது

நல்வாழ்த்துகள் வெற்றி
நட்புடன் சீனா