Wednesday, December 30, 2009

விஜய்யும் ஜென் தத்துவமும் ! பதிவர்கள் அனைவருக்கும்  புத்தாண்டு  வாழ்த்துக்கள்.

2009 - இந்த வருடம் என் வாழ்வில் மறக்க முடியாத பல சுவையான அனுபவங்களை அள்ளித் தந்த ஆண்டாகி விட்டது.

முதலாவது - கடந்த ஆண்டின் இறுதியில் பழக ஆரம்பித்த உறவொன்று பரிணாம வளர்ச்சி அடைந்து இந்த ஆண்டு அடுத்த கட்டத்துக்கு சென்றது.

இரண்டாவது - பல ஆண்டுகளாக வாசகனாய் மட்டுமே இருந்த நான் பதிவுலகில் சில கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி அடுத்த அவதாரம் எடுத்தது.

அப்புறம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பல வெளி கல்லூரிகளுக்கு(உள்நாட்டிலும் தான்) சென்று பரிசு மழையில் நனைந்தது.

வரும் ஆண்டும் இதே போல் எனக்கு நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன்.

என்ன ஒரு சுயநலம்!

மன்னிக்கவும்.இந்த பதிவை படித்து ஓட்டு போடுவர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக இருக்க கடவது!

பார்ரா!

சரி.என் பதிவை படிக்கும் அனைவருக்கும் புத்தாண்டு நல்லபடியாய் இருக்கும்.

மறுபடியும் பார்ரா!

சரி.சரி.உலக மக்கள் எல்லாரும் வரும் ஆண்டில் அமைதியான ஒரு வாழ்வை வாழ்ந்து ஒருவருக்கொருவர் சமாதானமும் அன்பும் போற்றுவார்களாக!

ம்ம்..இதுதான் சரி..என்ன ஒரு வில்லத்தனம்!

---------------------------------------------------------------------------------------

விஜயை கிண்டலடித்து அதிகமாக SMS அனுப்பும் நண்பன் ஒருவன் சமீபத்தில் என்னிடம் கேட்டான்..
'ஏண்டா மத்த படத்த எல்லாம் நல்லா ஞானக்கண்ணோட பாக்குற.ஆனா விஜய் படம்னு வந்தா மட்டும் என் உன் ரசனை இப்படி குறைஞ்சு போய்டுது?

நான் சொன்னேன்.

'வேட்டைக்காரன் பார்க்க குழந்தைகள் ரொம்ப அனத்தியதால் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்றோம்.அவர்கள் நன்றாய் ரசித்து பார்த்தார்கள்.விஜய் படம் பார்க்க குழந்தை போன்ற மனநிலை போதும்.குழந்தையாய் மாறினால் வாழ்க்கை குதூகலமாக மாறி விடும்.இதைத்தான் ஜென் தத்துவம் சொல்கிறது.'

அன்றிலிருந்து அவன் நிறுத்தி விட்டான்.விஜயை கிண்டலடிப்பதை அல்ல.அதை எனக்கு SMS அனுப்புவதை.

-----------------------------------------------------------------------------------
வரும் ஆண்டில் நான் எடுக்கப் போகும்  உறுதிமொழிகள் சில:

1 .காலேஜுக்கு செல்போன் கொண்டு போக கூடாது............
                         (விடுமுறை தினங்களில் மட்டும் )

2 .பாடங்களை முந்திய நாள் இரவே படித்து விட வேண்டும்.......
                         (தேர்வுக்கு முந்திய நாள் மட்டும் )

3 .வகுப்பறையில் தூங்கக் கூடாது................
                        (ஒரு நல்ல பிகர் செமினார் எடுக்கும் போது மட்டும்)

4 .மாஸ் கட் அடிக்க கூடாது..........
                        (அன்று நான் கல்லூரிக்கு முதலிலேயே விடுப்பு சொல்லியிருந்தால்)

5 .வேறு எந்த பெண்ணையும் சைட் அடிக்க கூடாது.......
                          ('அவள்' என்னருகில் இருக்கும் போது மட்டும்)

------------------------------------------------------------------------------------
புத்தாண்டு சிறப்புபுதிர்:

பள்ளியில் binary arithmetic படித்திருப்போம்.அதில் வரும் கூட்டல் கணக்கு:
                                                01 + 01 = 10
இதை இப்போது சொல்வதற்கு என்ன காரணம்?
தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

பதிவை ரசித்திருந்தால் ஓட்டு போட மறவாதீர்..மறவாதீர்..மறவாதீர்..

43 comments:

வால்பையன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல!

விஜய் படம்னாலே டெர்ரர் தான்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி..!

சங்கர் said...

அவருதான் ரெண்டு கையையும் தூக்கி எல்லாருக்கும் நன்றின்னு சொல்லிட்டு போயிட்டாருல்ல, அப்புறம் ஏன் இந்த கொல வெறி,

புத்தாண்டு வாழ்த்துக்கள் (ரெண்டு பேருக்கும்)

வானம்பாடிகள் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.:)

புலவன் புலிகேசி said...

புத்தாண்டு வாழ்த்துகள்

VISA said...

ஜென் தத்துவம் அருமை. நல்லா எழுதுறீங்க. தொடருங்கள். நால் பாலோகிறேன்.

புத்தாண்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

♠ ராஜு ♠ said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ..?!?


புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்.

கார்க்கி said...

01 = முதல் தேதி

01 = முதல் மாதம்

10 = 2010ம் வருடம்

சரியா சகா?

விஜய் படத்திற்கு இப்படி ஒரு விளக்கம் யாரும் தந்ததில்லை

வெற்றி said...

@வால்பையன்
நன்றி தல!

வெற்றி said...

@உண்மைத் தமிழன்
நன்றி அண்ணா முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

// முதலாவது - கடந்த ஆண்டின் இறுதியில் பழக ஆரம்பித்த உறவொன்று பரிணாம வளர்ச்சி அடைந்து இந்த ஆண்டு அடுத்த கட்டத்துக்கு சென்றது. //

அது மேன் மேலும் முன்னேறி அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வாழ்த்துகள்.

வெற்றி said...

@சங்கர்
டபுள் நன்றி!!

வெற்றி said...

@வானம்பாடிகள்
நன்றி :)

வெற்றி said...

@புலவன் புலிகேசி
நன்றி..

வெற்றி said...

@VISA
மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு..

வெற்றி said...

@ராஜூ
நன்றி பாஸ்.ரூம் மட்டுமல்ல பாம் போட்டு கூட யோசிப்போம் :)

வெற்றி said...

@கார்க்கி
சரிதான் சகா..

வெற்றி said...

@இராகவன் நைஜிரியா
மிக்க நன்றி.அதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருக்கேன். :)

LOSHAN said...

ஆகா கடி பின்னுறீங்க..

உறுதி மொழிகளை உருப்படியாக் காப்பாத்துவீங்கன்னு புரியுது..
நடத்துங்க..

வெற்றி said...

@LOSHAN
நன்றி.கண்டிப்பாக காப்பாத்துவேன்.

எப்பூடி ... said...

புத்தாண்டு வாழ்த்துகள்

எப்பூடி ... said...

நீங்கள் எனது தளத்தை சின்னப்புள்ளைத்தனமாக உள்ளது என்று கூறுகிறீர்கள் என்று நான் கருதியதால்தான் முதலில் உங்களுக்கு கோபத்தில் பின்னூட்டம் போட்டேன்.

ஆனால் ஒரு ஆங்கிளில் பார்க்கும் போது நன்றாக சொல்வது போலும் இருக்கிறது. எது எப்பிடியோ உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நான் பிழையாக விளங்கியிருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன். நான் சரியாக விளங்கியிருந்தாலும் முன்னர் போட்ட பின்னூட்டத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

வெற்றி said...

@எப்பூடி

உங்களுக்கு இவ்ளோ கோவம் வருமா? நான் இப்போதான் உங்களுடைய பதிலை பார்த்தேன்.நான் உங்களின் பதிவுகள் எனக்கு பிடித்தமையால் தான் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தேன்.சிறுவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை ஆனதால் அதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு மனபிம்பம் ஏற்படும்.இதுதான் நான் சொல்ல வந்தது.

மனதில் இருந்ததை ஒளிக்காமல் பேசியதற்கு நன்றி.மன்னிப்பெல்லாம் எதற்கு கேட்கிறீர்கள் அண்ணா?

எப்பூடி ... said...

உப்பு திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேண்டும்,அதேபோல் தப்பு செய்தவன் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும் , im toooooooo sorry ......

வெற்றி said...

விடுங்க தல..இதுக்கு போயிட்டு..

shortfilmindia.com said...

சைட் அடிப்பதில்லை என்ற கொள்கை கொஞ்சம் ஓவரா தெரியல..

கேபிள் சங்கர்

வெற்றி said...

அடைகுறிக்குள் இருந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா?

பிரியமுடன்...வசந்த் said...

ஜென் தத்துவம் கலக்கல் சகா...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

வெற்றி said...

நன்றி சகா..தொடர்ந்து வாங்க..

Saraj said...

புத்தாண்டு வாழ்த்துகள்!! நான் அருகில் இல்லாத பொழுது sight அடிக்குறிய இரு இரு உன்ன கவனிச்சுக்கிறேன் !!!என்கிட்ட நல்லா வாங்கபோற!!!! வகுப்பறையில் இந்த வருடமாவது தூங்காமல் கவனிக்கவும்(பாடத்தை)!!!பரிணாம வளர்ச்சி அடைந்த உறவை மிக விரைவில் ஆழைத்து செல் நமது இல்லத்திற்கு!!!!இந்த ஆண்டு நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!!!!இன்னும் எழுத என் வாழ்த்துகள் !!!என்றும் அன்புடன் இல்லை காதலுடன்...........

பரிசல்காரன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா!

உறுதிமொழிகள்ல என்னைக் கொன்னுபோட்டீங் போங்க!

(ஆனா அந்த கடைசி பாய்ண்ட் இடிக்குது... விடு... அதப்பத்தி தனியா டிஸ்கஸ் பண்ணுவோம்!)

வெற்றி said...

@Saraj
//வகுப்பறையில் இந்த வருடமாவது தூங்காமல் கவனிக்கவும்(பாடத்தை)!!!//

லெக்சரர் எவ்ளோ மொக்க போட்டாலும் தூங்காம கவனிக்குறதுக்கு என் பேரு ஒன்னும் S-ல ஆரம்பிக்கல.. :)

வெற்றி said...

@பரிசல்காரன்
'அவள்'க்கு வேற அர்த்தம் இருக்கு நண்பா..மறுபடியும் படிங்க..

ஷோபிகண்ணு said...

//3 .வகுப்பறையில் தூங்கக் கூடாது................
(ஒரு நல்ல பிகர் செமினார் எடுக்கும் போது மட்டும்)//

நல்ல விஷயமா தெரியுதே...

நினைவுகளுடன் -நிகே- said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வெற்றி said...

@ஷோபிகண்ணு
பின்ன.. :)

வெற்றி said...

@நினைவுகளுடன் -நிகே
நன்றி

சுசி said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உறுதிமொழிகள்?? கிர்ர்ரர்ர்ர்..

வெற்றி said...

நன்றிங்க..அதென்ன கிர்ர்ரர்ர்ர்?????

மோகன் குமார் said...

நல்லா எழுதுறீங்க கலக்குங்க

வெற்றி said...

நன்றிங்க!கலக்கிருவோம்

maddy73 said...

01+01=10 ?
சொல்லவே இல்லை..

வெற்றி said...

அது பைனரி அரித்மேடிக் நண்பா..