Monday, February 1, 2010

மதுரை கருத்தரங்கம் - ஒரு அரைகுறை பார்வை

எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..அவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறேன்..அரைகுறை பார்வைன்னு ஏன் தலைப்பு வச்சிருக்கேன்னு கேட்கிறீங்களா..என்னாது கேட்கலையா..நீங்க கேக்காட்டியும் நாங்க சொல்லுவோம்..6 மணிக்கு முடிய போகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கெல்லாம் சென்று விட்டேன்..கருத்தரங்கு என்றால் ஏதாவது மொக்கை போடுவார்கள்..நாம் பதிவர்களைமட்டும் சந்தித்து விட்டு வரலாம் என்ற எண்ணமே காரணம்..பாதி நிகழ்ச்சிக்கு மட்டுமே சென்றதால் இது ஒரு அரைகுறை பார்வை ; வேணாம் அரை நிறை பார்வை !

நான் சென்ற போது டாக்டர் ஷாலினி கேள்வி-பதில் செஷன் நடத்திக் கொண்டிருந்தார்..என்னனமோ சொல்றாரு..ராமாயணம் பேசுறாங்க..மகாபாரதம் பேசுறாங்க..இதெல்லாம் தெரிந்து கொள்ள எங்கிருந்துதான் நேரம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை..அது மட்டுமல்ல மிகவும் சுவாரசியமாகவே பேசுகிறார்..அப்போதான் பீலிங்கா இருந்துச்சு..ச்சே..முதலிலேயே வந்திருக்கலாம் என்று..

நிகழ்ச்சி முடிந்ததும் வால்பையன்,தேவன் மாயம் போன்ற பதிவர்கள் குழுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்..நான் ஒரு ஓரமாக நின்று அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..அப்போதான் கா.பா (சாரி! பெயர் பெரிதாக இருப்பதால் சுருக்கிக் கொண்டேன்) வந்து என்னை யாரென்று கேட்டு மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார்..எல்லாரும் கை குலுக்கினார்கள்..செல் நம்பர் வாங்கினார்கள்..மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள்..கா.பா, ஸ்ரீதர்,ஜெர்ரி,தருமி,சீனா,காவேரி கணேஷ்  (ஆணி அதிகமிருப்பதால் அண்ணா,அய்யா போன்றவற்றை நிரப்பி கொள்ளுங்கள் ப்ளீஸ்!) .

வால்பையன் எழுதுவது மட்டுமல்ல பேசுவதும் சூப்பராக பேசுகிறார்..சிலர் நன்றாக எழுதுவார்கள் ஆனால் பேச வராது..எ.கா.க்கு என்னை கூட காட்டலாம் :)..அட! கல்லை கீழே போடுங்கப்பா..சிரிப்பான் போட்டா காமெடியா எடுத்துக்கணும்..வால் சீனா அய்யா குறித்து சொன்ன சின்ன கார் நக்கலை நினைத்து இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்..

கா.பா., ஸ்ரீதர்  குறித்து சொல்லியே ஆக வேண்டும்..தயக்கத்தோடு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தவனை அனைவரிடமும் அறிமுகப்படுத்தி என்னையும் இறுதி வரை கவனித்து கொண்டார்கள்..ஜெர்ரி விடைபெறும் போது என்னிடம் சொல்லி விட்டு கிளம்பினார்..அப்புறம் தருமி அய்யா,சீனா அய்யா ஆகியோர் என்னை போன்ற இளைங்கர்களுடன் பேசும் போது அவர்களும் இளைஞர்கள் ஆகி விடுகிறார்கள்..
முதலில் இவர்களுடன் பேச நான் அஞ்சிக் கொண்டிருந்தேன்..பெரிய மனிதர்கள் நம்மை கண்டு கொள்வார்களா என்று...அவர்களின் பழகும் விதத்துக்கு ஒரு சான்று : நான் கிட்டத்தட்ட மூன்று,நான்கு முறை போய் வருகிறேன் என்று கைகுலுக்கியும் கூட என்னால் போக முடியவில்லை..இறுதி வரை இருந்து விட்டுதான் வந்தேன்..நான் எந்த நிகழ்ச்சிக்கும் இறுதி வரையெல்லாம் இருப்பதில்லை..பாதியிலேயே எஸ்ஸாகி விடுவேன் என்பது கொசுறு தகவல்!

நான் கவனித்த ப்ளஸ் பாயிண்டுகள் :

-.->இவர்கள் யாரிடமும் எந்த ஈகோவும் இருப்பதில்லை..புதிதாக வருபவனிடம் கூட இவ்வளவு தோழமையுடன் பேச முடியுமா என்று வியந்து கொண்டிருக்கிறேன்..

-->அனைவரும் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறார்கள்..இவர்களை பார்த்து சோம்பேறியான எனக்கே 'ஏதாவது உதவி தேவையா' என்று கேட்க  தோன்றியது..

ஒரு மாவட்ட பதிவர்கள் கூடும் போதே இவ்வளவு நெகிழ்ச்சிகள் என்றால் மொத்த தமிழ்நாட்டின் பதிவர்கள் சந்தித்தால்...நினைத்தாலே புல்லரிக்கிறது..

                                 இது போல சொந்தம் தந்ததால் 
                                 கூகிளே வா நன்றி சொல்கிறோம் !!

என்ன ஒரு குறை..எப்போதும் ஒரு முக்கியமானவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பேன்..அவருடன் பேச முடியாததால் கோபித்து கொண்டார்..ஏன்யா சொந்த பந்தங்களை மறக்கும் அளவுக்கா அன்பு காட்டுவீர்கள்..கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் :)

அப்புறம் அவரை சமாதானப்படுத்தி பதிவர் சந்திப்பு குறித்தும் அவர்களின் தோழமையையும் சொன்னேன்..அப்போது அவர் சொன்னது..

'அவங்க எல்லாரையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடனும்ங்க..'

'கண்டிப்பா செல்லம்..அவங்க எல்லாரும்தான் நம் கல்யாணத்தில் சீப் கெஸ்ட் '

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

51 comments:

தருமி said...

முதலிலே தகவல் தெரிவிக்க முடியாது போயிற்று; தவறுதான்.

இனி வரும் நிகழ்ச்சிகளில் முதலில் இருந்தே நீங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

க.பாலாசி said...

நல்ல அனுபவம்...

அ.ஜீவதர்ஷன் said...

//கா.பா (சாரி! பெயர் பெரிதாக இருப்பதால் சுருக்கிக் கொண்டேன்)//

இதுக்கு பெயரையே எழுதியிருக்கலாமே -:)

அ.ஜீவதர்ஷன் said...

//இதுபோல சொந்தம் தந்ததால்
கூகிளேவா நன்றி சொல்கிறோம் !!//

supperb.

உங்கள் ஒற்றுமை ஓங்குக.

Paleo God said...

எப்போதும் ஒரு முக்கியமானவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பேன்..அவருடன் பேச முடியாததால் கோபித்து கொண்டார்..ஏன்யா சொந்த பந்தங்களை மறக்கும் அளவுக்கா அன்பு காட்டுவீர்கள்..கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் :)

அப்புறம் அவரை சமாதானப்படுத்தி பதிவர் சந்திப்பு குறித்தும் அவர்களின் தோழமையையும் சொன்னேன்..அப்போது அவர் சொன்னது..

'அவங்க எல்லாரையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடனும்ங்க..'
'கண்டிப்பா செல்லம்..அவங்க எல்லாரும்தான் நம் கல்யாணத்தில் சீப் கெஸ்ட் '//

வாழ்த்துக்கள்..:))

நிறைவான பதிவுதான்..:)

vasu balaji said...

/அவங்க எல்லாரையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடனும்ங்க..'
'கண்டிப்பா செல்லம்..அவங்க எல்லாரும்தான் நம் கல்யாணத்தில் சீப் கெஸ்ட் '//

ஆஹா! எப்ப?

Raju said...

டொய்ன்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ங்ங்..!

சைவகொத்துப்பரோட்டா said...

அட்வான்ஸ் கல்யாண வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

நடக்கட்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோசம் வெற்றி..இனிமேல் நாம அடிக்கடி சந்திக்கலாம்..

//'அவங்க எல்லாரையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடனும்ங்க..'
'கண்டிப்பா செல்லம்..அவங்க எல்லாரும்தான் நம் கல்யாணத்தில் சீப் கெஸ்ட் '//

எதிர்கால திட்டங்கள் பல கைவசம் வச்சு இருக்கீங்க..

வாழ்த்துகள்..:-)))

வெற்றி said...

@தருமி

நன்றி ஐயா :)

வெற்றி said...

@க.பாலாசி

நன்றி !

வெற்றி said...

@எப்பூடி ...

அதற்கடுத்த பத்திகளில் அவர் பெயரை சுருக்கமாக பயன்படுத்தியுள்ளேன் :)

வெற்றி said...

@எப்பூடி ...

நன்றி !

வெற்றி said...

@ஷங்கர்..

மிக்க நன்றி :)

வெற்றி said...

@வானம்பாடிகள்

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும் அய்யா :)

வெற்றி said...

@♠ ராஜு ♠

ஸ்டார்ட் மீசிக் :)

வெற்றி said...

@சைவகொத்துப்பரோட்டா

அட்வான்ஸ் நன்றி :)

வெற்றி said...

@அண்ணாமலையான்

நன்றி

வெற்றி said...

@கார்த்திகைப் பாண்டியன்

நன்றி ! உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் :)

திவ்யாஹரி said...

//6 மணிக்கு முடிய போகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கெல்லாம் சென்று விட்டேன்.....பாதி நிகழ்ச்சிக்கு மட்டுமே சென்றதால்//
ஒரு மணி நேரம் முன்னாடி போய்ட்டு பாதின்னு build up கொடுக்குறியே ஏன்ப்பா இப்படி?

//எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..அவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறேன்..//
எனக்கும் அந்த சந்தோஷம் வேணும்.. அடுத்த முறை தயவு செய்து கால் பண்ணுங்க வெற்றி.. வர்றதுக்கு முயற்சி பண்றேன்.. நல்லா எழுதி இருக்கீங்க வெற்றி..

//ஒரு முக்கியமானவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பேன்..//
அந்த முக்கியமானவரை கேட்டதாக சொல்லுங்க..

நிகழ்காலத்தில்... said...

அட்வான்ஸ் வாழ்த்துகள் நண்பரே..:))

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

Chitra said...

வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு பற்றி படிக்கும் போது, புது உற்சாகம் வரத் தான் செய்கிறது.

PRABHU RAJADURAI said...

வாழ்த்துக்கள்...அட்வான்ஸாக!

Thekkikattan|தெகா said...

கொடுத்து வச்ச ஆட்களப்பா :-).

புலவன் புலிகேசி said...

நல்ல சந்திப்பு அனுபவம். ஆமாம் அவங்களோட எப்ப கல்யாணம்?

பாலா said...

கலக்குங்க.........!!!!!! :) :)

===

என் காதுல இருந்து புகை வருது!! தெரியுதா?? :)

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா பதிவு நல்லா இருக்கு

அதைவிட காதல் தேவதையின் வேண்டுகோள் அருமை வெற்றி

நடக்கட்டும்

Balakumar Vijayaraman said...

கலக்குங்கள், வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

நாங்க இல்லாம எப்படி கல்யாணம் களை கட்டும்!

சுசி said...

நல்ல பதிவு..

வாழ்த்துக்கள்.. தூர இருக்கேன்னு சொல்லாது விட்ராதீங்க.. எனக்கும் அழைப்பு அனுப்பிடுங்க..

CS. Mohan Kumar said...

//எப்போதும் ஒரு முக்கியமானவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பேன்..அவருடன் பேச முடியாததால் கோபித்து கொண்டார்..//

இதுக்கேவா? கல்யாணத்துக்கு அப்புறம்?? ம்ம்ம் வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

//இது போல சொந்தம் தந்ததால்
கூகிளே வா நன்றி சொல்கிறோம் !!//

உண்மைதாங்க....

வெற்றி said...

@திவ்யா ஹரி

//அந்த முக்கியமானவரை கேட்டதாக சொல்லுங்க..//

அவரை உங்ககிட்ட கொடுத்துட்டு நான் என்ன செய்யுறது :)

வெற்றி said...

@நிகழ்காலத்தில்...

அட்வான்ஸ் நன்றிகள் நண்பரே :)

வெற்றி said...

@நேசமித்ரன்

நன்றி !

வெற்றி said...

@Chitra

நன்றி..

வெற்றி said...

@Prabhu Rajadurai

நன்றிகள்...அட்வான்ஸாக!

வெற்றி said...

@Thekkikattan|தெகா

நீங்களும் கொடுங்க..நான் வேணாம்னா சொல்றேன் :)

வெற்றி said...

@புலவன் புலிகேசி

இன்னும் சில ஆண்டுகள் ஆகும் நண்பரே !

வெற்றி said...

@ஹாலிவுட் பாலா

தெரியுதய்யா தெரியுது :)

வெற்றி said...

@thenammailakshmanan

மிக்க நன்றி :)

வெற்றி said...

@வி.பாலகுமார்

நன்றி

வெற்றி said...

@வால்பையன்

அதானே :)

வெற்றி said...

@சுசி

உங்களுக்கு இல்லாமலா :)

வெற்றி said...

@மோகன் குமார்

அப்புறம்தாங்க என்ன இருக்குன்னு தெரியல :(

வெற்றி said...

@Sangkavi

ஆமாம் நண்பரே !

Prabu M said...

சந்திச்சது ரொம்ப மகிழ்ச்சி வெற்றி...
பெரிய ஆணி இருந்ததால் (ஐயோ எனக்கும் ஒட்டிக்கிச்சு!!) சீக்கிரம் கிளம்பிவிட்டேன் அதான் உங்ககூட பேச முடியல...
இனிமேல் பேசலாம்... :)

cheena (சீனா) said...

அன்பின் வெற்றி

அரைநிறைப் பார்வை அருமை

பொதுவாக மதுரைக்காரங்க பாசமானவங்க - தெரியும்ல

அப்புறம் எப்ப கல்யாணம் ?

கை-பற்றப் போறவங்க்களுக்கும் உனக்கும் நல்வாழ்த்துகள் - வாழ்வில் எப்போதும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ஆமா அதென்ன வாலு அடிச்ச கமெண்டு - சீனா பற்றிஅய் சின்னக்கார் நக்கல் - தனி ம்டல்ல சொல்லு - வால ஒரு வழி பண்ணனும்