Saturday, February 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - முற்றிலும் யூத்துகளுக்காக

 விண்ணைத்  தாண்டி வருவாயா - இந்த படத்தை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும்.அவர்தான் த்ரிஷா - அவர் இந்த படத்தில் அவ்ளோ அழகு.இனிமேல் 'த்ரிஷா இல்லைனா திவ்யா' என்றும் யாரும் சொல்ல மாட்டார்கள்.எனக்கு த்ரிஷாதான் வேணும்ன்னு அடம்பிடிப்பார்கள்.


படம் முழுக்க ஒரு தேவதை போலவே வந்து போகிறார்.தேவதை என்ற சொல்லுக்கு த்ரிஷா என்று இன்றைய இளைஞர்கள் அர்த்தம் சொல்லுவார்கள்.வெகு சீக்கிரமே ஒரு கோவில் கட்டினாலும் அது அசாதாரணம் இல்லை.நான் படம் பார்க்க சென்றதே த்ரிஷாவுக்காகதான். அந்த எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செய்து விட்டார்கள் இந்த படத்தில்.

அவரின் அந்த கர்லி ஹேரை சொல்லவா இல்லை அந்த மென்மையான பார்வையை சொல்லவா இல்லை கழுத்துக்கு அழகு சேர்க்கும் அந்த டாலரை சொல்லவா இல்லை புடவையை கொஞ்சம் தளர்வாக உடுத்தியிருக்கும் அழகை சொல்லவா இல்லை அந்த ஸ்டைலான நடையை சொல்லவா.எதைச் சொல்லவென்றே தெரியவில்லை.அதிலும் நான் சொல்ல போகும் இந்த காட்சியில் யாராக இருந்தாலும் த்ரிஷாவின் ரசிகராகிவிடும் வாய்ப்பு இருப்பதால் த்ரிஷாவை தொடர்ந்து வெறுத்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காட்சியில் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

த்ரிஷாவின் திருமணத்தைப் பார்ப்பதற்காக கேரளா செல்லும் சிம்பு அங்கு இரவில் அவரை தனிமையில் சந்திப்பார்.அப்போது ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கும் த்ரிஷா அந்த இரவொளியில் நிலவாய் மின்னுவார்.

                      தொலைதூரத்து வெளிச்ச்சம் நீ !
                      உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே !!

இந்த வரிகளை நிச்சயமாக தாமரை அந்த ஸ்பாட்டில் தான் எழுதியிருக்க வேண்டும்.கச்சிதமாக பொருந்துகிறது த்ரிஷாவிற்கு.படத்தின் இறுதிவரை எல்லாக் காட்சிகளிலும் நேர்த்தியான உடை தேர்வு செய்த உடை வடிவமைப்பாளர் பாராட்டுக்குரியவர்.

அப்புறம் சிம்புவை பற்றி என்ன சொல்ல - மனிதர் பல இடங்களில் வாரணம் ஆயிரம் சூர்யாவை போல் நடிக்க முயன்று தோற்றிருக்கிறார்.சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எரிச்சலை வரவழைக்கிறது.எனக்கு ஆரம்பத்தில் சிம்புவை இந்த பாத்திரத்தில் பொருத்திப் பார்ப்பது கடினமாக இருந்தது.போக போக சரியாகி விட்டது.இதில் விரலாட்டி பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்திருப்பது மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

படத்தில் சிம்புவின் நண்பராக வருபவர் கொஞ்சம் மெதுவான திரைக்கதைக்கு ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார்.அவரின் முகமும் அவரின் குரலும் இவர் இதற்கு முன்னர் ஏதோ ஒரு படத்தில் நடித்தவர் என்று சொல்லுகின்றன.என்ன படம் என நினைவில்லை.

இந்த படத்தில் இன்னொரு நடிகர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.திரையில் அவரின் முகத்தை தேடாதீர்கள்.உங்களால் கண்டுபிடிக்க முடியாது.அவர்தான் பின்னணி இசை.ரகுமான் அவரின் வாத்தியங்களை வைத்து நம்மை மகுடி கேட்ட பாம்பாய் மயக்குகிறார்.குறிப்பாக சிம்பு முதலில் த்ரிஷாவை பார்க்கும் போது கேட்டில் சாய்வார்.அப்போதும் அப்புறம் சிம்பு குத்துச்சண்டையிடும் போதும் பின்னணி இசை செம!பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது.இனி படு ஹிட்டாகி விடும்.

காதலில் வரும் நிஜமான பிரச்சனைகளை யதார்த்தத்தோடு படமாக்கியிருக்கிறார்கள்.நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான காதல் கதைதான். ஆனால் நிறைய காட்சிகள் வாரணம் ஆயிரத்தை நினைவுபடுத்துகின்றன.அந்த ரயில் காட்சி,ஹீரோ காதலியை தேடி செல்லும் காட்சி,பாடல்களில் ஒரு ஐந்தாறு வெளிநாட்டு பிச்சைக்காரகள் ஹீரோவை சுற்றி ஆடும் காட்சி,இப்படி நிறையவே.அப்புறம் ஒரு பெண்ணை பார்த்த நொடியில் காதல் வருவது,பாதி காட்சிகளில் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்றவை  கவுதம் பாணியாகவே மாறி விட்டது.ஆனாலும் படம் பிடிக்கத்தான் செய்கிறது.

ஒரு காட்சியில் கவுதம் சுய எள்ளல் செய்கிறார்.அதைப் பார்த்த பின்பு  இப்படத்தில் அதை கைவிட்டுவிட்டார் என நினைத்தால் அதைத்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார்.இந்த படம் ஏ சென்டர் படம் என்றெல்லாம் சொல்லப் போவதில்லை.அப்புறம் சில குசும்பர்கள் 'நானே என்னை ஏ கிளாஸ் என்று சொல்லி நுண்ணரசியல் செய்வதாக' சொல்லும் அபாயம் இருப்பதால் அதை உங்க கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

'பச்சக் பச்சக்' என நினைத்த மாத்திரத்தில் சாதாரணமாக படத்தில் கிஸ் அடிப்பதால் 'ஆ ஊ ன்னா கிஸ் அடிச்சுடுறாங்க டா' என்ற கமெண்டை எல்லா தியேட்டர்களிலும் கேட்கலாம்.மொத்தத்தில் படத்தில் பிரித்து சாரி பிரிக்காம மேய்ந்திருக்கிறார் (யார் யாரை என்றெல்லாம் கேட்கக்கூடாது.அதை திரையரங்கில் காண்க!).இப்படம் வயதானவர்களுக்கு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.படத்தின்இரண்டாம் பாதி தொய்வாக செல்வதாக சிலர் சொல்கின்றனர்.ஆனால் எனக்கு படத்தில் பிடித்ததே இரண்டாம் பாதி தான்.

இன்னொரு முக்கியமான விஷயம்..'a film by ' என க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி என்டு கார்ட் போடுவார்கள்.அதை நம்பி வெளியே வந்து விடாதீர்கள்.ஆபரேட்டரிடம் படம் முடிந்து விட்டதா என கன்பார்ம் செய்து விட்டு வெளியேறவும்.

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

73 comments:

Chitra said...

விமர்சனத்தில், திரிஷாவை பிடித்த அளவுக்கு படம் பிடித்த மாதிரி தெரியவில்லை. :-)

யாத்ரீகன் said...

>விமர்சனத்தில், திரிஷாவை பிடித்த அளவுக்கு படம் பிடித்த மாதிரி தெரியவில்லை. :-)<

Repeattu..
>யதார்த்தத்தோடு படமாக்கியிருக்கிறார்கள்<
>வித்தியாசமான<

>>>ரயில் காட்சி,ஹீரோ காதலியை தேடி செல்லும் காட்சி,பாடல்களில் ஒரு ஐந்தாறு வெளிநாட்டு பிச்சைக்காரகள் ஹீரோவை சுற்றி ஆடும் காட்சி,இப்படி நிறையவே.அப்புறம் ஒரு பெண்ணை பார்த்த நொடியில் காதல் வருவது,பாதி காட்சிகளில் ஆங்கிலத்தில் உரையாடுவது <<<

Conflicts !!!

யாத்ரீகன் said...

>>>> ஒரு காட்சியில் கவுதம் சுய எள்ளல் செய்கிறார்.அதைப் பார்த்த பின்பு இப்படத்தில் அதை கைவிட்டுவிட்டார் என நினைத்தால் அதைத்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார். <<<<

Puriyalayey !!!

என் நடை பாதையில்(ராம்) said...

ஆஹா! எனக்கு கூட த்ரிஷாவ பிடிக்கும். ஆர்வத்தை தூண்டிடிங்க. போய் படம் பார்க்க வேண்டியது தான்.

மேவி... said...

என்ன பாஸ் ..த்ரிஷாவுக்காக படம் பார்த்த மாதிரி தெரியுதே ???

புலவன் புலிகேசி said...

//இப்படம் வயதானவர்களுக்கு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..//

அப்புடி சொல்லாதீங்க "கேபிளாருக்குப்" படம் புடிச்சிருக்காம்..

Prabu M said...

//அப்புடி சொல்லாதீங்க "கேபிளாருக்குப்" படம் புடிச்சிருக்காம்..//
ஹாஹா..சேட்டை மச்சி!! :)

வெற்றி... நண்பா... இது திரைவிமர்சனம் இல்ல த்ரிஷாவிமர்சனம்!!:))) ஹ்ம்ம்ம் இது வாலிப வயசு!! :)
நல்லா எழுதியிருக்கீங்க வெற்றி.. கதை பற்றி ஒரு லைன் கூட இல்ல...உங்க கருத்துக்களை மட்டும் கொடுத்து இன்னும் நாங்க பார்ப்பதற்கு புதுசாவே வெச்சிருக்கீங்க...... அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :)

வெற்றி said...

@Chitra

திரிஷாவை பிடிப்பதால் படமும் பிடிக்கிறது :)

வெற்றி said...

@யாத்ரீகன்

பிரச்சனைகளை யதார்த்தத்துடன் படமாக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்..நிச்சயமாக இந்த பிரச்சனைகள் காதலில் வரவே செய்யும்..என் அனுபவத்திலிருந்து இதை சொல்கிறேன் :)

cheena (சீனா) said...

ஓஓஒ வெற்றி - சுடச்சுட விமர்சனமா - பலே பலே - த்ரிஷா .......

பாத்துட்டுச் சொல்றேன்

நல்வாழ்த்துகள் வெற்றி

வெற்றி said...

@யாத்ரீகன்

படம் பாருங்க சார்..புரியும்..இங்கே சொன்னால் சுவாரசியம் இருக்காது :)

Raju said...

த்ரிஷாவின் காஸ்ட்யூம் டிசைனர் “ஷிட்னி” என்றூ நினைக்கின்றேன். பல முன்னணி நடிகைக்களுக்கும் இவர்தான்.

\\Posted by வெற்றி at 2:25 AM \\

திரிஷாவ நினைச்சுக்கிட்டே தூங்காம இருந்தீங்களா ராசா..?




\\Posted by வெற்றி at 2:25 AM \\

வெற்றி said...

@என் நடை பாதையில்(ராம்)

திரிஷாவை பிடிக்குமா..அப்போ டோன்ட் மிஸ் இட் !

Raju said...

\\ டம்பி மேவீ said...
என்ன பாஸ் ..த்ரிஷாவுக்காக படம் பார்த்த மாதிரி தெரியுதே ???\\

விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொல்றது இதுதான் போல..!

பதிவப் படிக்காம பின்னூட்ட்ம் போட்டா இப்பிடித்தான்.
:-)

வெற்றி said...

@டம்பி மேவீ

//நான் படம் பார்க்க சென்றதே த்ரிஷாவுக்காகதான்//

சொல்லியிருக்கிறேனே..கவனிக்கலியா..?

வெற்றி said...

@புலவன் புலிகேசி

கேபிள் சும்மா சொல்றாரு..அப்படி சொல்லி யூத்து ஜீப்ல ஏறலாம்னு நினைக்கிறாரு :)

வெற்றி said...

@பிரபு . எம்

நான் எப்போதுமே கதை பற்றி சொல்வதில் நண்பா..நான் இது திரை விமர்சனம் என்று சொல்லவில்லையே..த்ரிஷா புராணம் தான் :)

வெற்றி said...

@cheena (சீனா)

நன்றி ஐயா !

வெற்றி said...

@♠ ராஜு ♠

தகவலுக்கு நன்றி..தூக்கம் வராத காரணத்தை கண்டுபிடிச்சுட்டீங்களே :)

வெற்றி said...

@♠ ராஜு ♠

அதே அதே !

shortfilmindia.com said...

வந்தோமா .. விமர்சனத்தை படிச்சோமான்னு போவணும் புலவரே.. எதுக்கு.. என்னை இழுக்கிறீங்க.. இருங்க் உங்களுக்கும் ஒரு தண்டனை.. விரலாட்டியோட அப்பா நடிச்ச வீராசாமிய நூறு வாட்டி ரூமை பூட்டிட்டு ஓட விடறேன்.:)

கேபிள் சங்கர்

சைவகொத்துப்பரோட்டா said...

திரிஷாவ ரொம்பவே ரசிச்சு இருக்கீங்க போல, ரைட்டு நாளைக்கு "பாத்துர" வேண்டியதுதான், படத்தை சொன்னேன் :))

Unknown said...

அது என்னமோ தெரியவில்லை.கவுதம் மேனன் படத்தில் நடிகைகள் அனைவரும் மிக அழகாக தெரிகிறார்கள்.ஜோதிகாவில் தொடங்கி திரிஷா வரை

ஜெட்லி... said...

//!).இப்படம் வயதானவர்களுக்கு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்//


ஆமாம்ப்பா...என் கூட படம் பார்த்தா காலேஜ்
பசங்க நிறைய பேரு படத்தை பத்தி ரொம்ப
பெருமை அருமையா சொன்னாங்க......

Krishnav said...

படத்தில் சிம்புவின் நண்பராக வருபவர் கொஞ்சம் மெதுவான திரைக்கதைக்கு ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார்.அவரின் முகமும் அவரின் குரலும் இவர் இதற்கு முன்னர் ஏதோ ஒரு படத்தில் நடித்தவர் என்று சொல்லுகின்றன.என்ன படம் என நினைவில்லை. Pachi kili muthu charam, jothikaudan varuvar that taxi driver

பின்னோக்கி said...

யூத்துக்கான படம்னு சொல்லிட்டீங்க அதுக்காக இந்த படத்த பார்க்கணும். த்ரிஷாவுக்காக இல்லை :). போட்டோவிலேயே அழகா இருக்கு த்ரிஷா.. படத்துல கேட்கவ வேண்டாம்...

அ.ஜீவதர்ஷன் said...

எல்லாத்தையும் சொன்னேங்க இது எந்த படத்தோட காப்பிங்கிரத கடைசிவரை சொல்லலையே, ஒருவேளை இது கவுதமோட முதல் நேரடி தமிழ் படமா?

அண்ணாமலையான் said...

ரைட்டு

கடைக்குட்டி said...

அட என்னங்க .. பிரிச்சு மேய்ஞ்சு வெச்சு இருக்கீங்க.. நான் சொல்ல என்ன இருக்கு,,

த்ரிஷா வர்ணனைகள் அருமை.. உங்கள மாதிரி நான் ரசித்து பார்க்கல.. பிடிச்சது.. அவ்ளோதான்..

படம் கண்டிப்பாக யூத்துக்கு பிடிக்கும்.. அது கரெக்ட்டு..
எல்லாம் சரி..
இரண்டாம் பாதிதான் புடிச்சு இருக்குன்னு சொல்றீங்களே????

எ.கொ.ச.இ..

opinion differs..

வெற்றி said...

@shortfilmindia.com

நன்றி ! நீங்க பதிவை படிச்சீங்களா இல்லை பின்னூட்டத்த படிச்சீங்களா ?

வெற்றி said...

@சைவகொத்துப்பரோட்டா

நல்லா 'பாருங்க' :)

வெற்றி said...

@மின்னல்

அதற்கு முன்னர் ரீமா வந்தாரே..அவரை பிடிக்கலையா?

வெற்றி said...

@ஜெட்லி

நீங்க சொல்வதில் உள்குத்து ஏதும் இருக்கா?

வெற்றி said...

@Krishnav

தகவலுக்கு மிக்க நன்றி..நேற்று தியேட்டரில் நண்பர்கள் அனைவரும் மூளையை குழப்பிக்கிட்டு இருந்தும்..

வெற்றி said...

@பின்னோக்கி

சீக்கிரம் பாருங்க..

வெற்றி said...

@எப்பூடி ...

நான் ஆங்கில படமெல்லாம் பார்ப்பதில்லை..அதனால் காப்பி அடித்தாலும் கவலை இல்லை :)

வெற்றி said...

@அண்ணாமலையான்

நீங்க ஏன் சார் எல்லா பதிவுகளிலும் இதே வார்த்தையை சொல்கிறீர்கள்..'நடத்துநர்' என்பதற்காக இப்படியா :)

வெற்றி said...

@கடைக்குட்டி

முதல் பாதி பல படங்களில் பார்த்த காட்சிகளை போல இருந்தது..இரண்டாம் பாதிதான் கொஞ்சம் புதிதாக பார்ப்பது போல் இருந்தது..

ஜெகதீசன் said...

:)
enakkum pidicirundathu padam...

Prabhu said...

சேம் ஃபீல்!

Jackiesekar said...

வெற்றி நல்லா எழுதி இருக்கிங்க... வாழ்த்துக்கள்...

சென்னையில் இந்த படம் பிச்சிகிட்ட போகும்... இதுவே ஏப்ரல்ல வந்து இருந்தா? சக்கை போடு போட்டு இருக்கும்...

திவ்யாஹரி said...

கதையை சொல்லாம விமர்சனம் எழுதியிருக்கிறது நல்லா இருக்கு நண்பா.. த்ரிஷா எனக்கும் பிடிக்கும்.. so படம் பார்க்குறேன்..

இவ்வளவு தான் வர்ணிக்க முடிஞ்சிதா?
//அவரின் அந்த கர்லி ஹேரை சொல்லவா இல்லை அந்த மென்மையான பார்வையை சொல்லவா இல்லை கழுத்துக்கு அழகு சேர்க்கும் அந்த டாலரை சொல்லவா இல்லை புடவையை கொஞ்சம் தளர்வாக உடுத்தியிருக்கும் அழகை சொல்லவா இல்லை அந்த ஸ்டைலான நடையை சொல்லவா.எதைச் சொல்லவென்றே தெரியவில்லை.அதிலும் நான் சொல்ல போகும் இந்த காட்சியில் யாராக இருந்தாலும் த்ரிஷாவின் ரசிகராகிவிடும் வாய்ப்பு இருப்பதால் த்ரிஷாவை தொடர்ந்து வெறுத்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காட்சியில் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.//
:)

திவ்யாஹரி said...

@அண்ணாமலையான்

நீங்க ஏன் சார் எல்லா பதிவுகளிலும் இதே வார்த்தையை சொல்கிறீர்கள்..'நடத்துநர்' என்பதற்காக இப்படியா :)

நானே கேட்கனும்னு நெனச்சேன்.. அண்ணன் நடத்துநரா அதான்..
ரைட்டு..

Thenammai Lakshmanan said...

திரிஷாயணம் சாரி வி, தா, வருவாயா விமர்சனம் சூப்பர் வெற்றி

Anonymous said...

ohm

thirisya namaha...
ohm

thirisya namaha...
ohm

thirisya namaha.....

kaipulla
kalakketenga ponga...

hiooo
"'த்ரிஷா இல்லைனா திவ்யா' என்றும் யாரும் சொல்ல மாட்டார்கள்"

etha engio padicha pola erukkey..
neenga ganesha cholanaunu thirum..""

hmm nala eruku..
valthukal.

Valga valamudan
v.v.s sarbaga.
complan surya

மங்குனி அமைச்சர் said...

//விண்ணைத் தாண்டி வருவாயா//

அவ்வளவு தூரம் எல்லாம் வரமுடியாது சார் வூட்ல திட்டுவாங்க

Jerry Eshananda said...

// ..அவர்தான் த்ரிஷா - அவர் இந்த படத்தில் அவ்ளோ அழகு.//
அட...நெசமாவா ஜொள்ற.....சாரி சொல்ற...

Raghu said...

//அவர்தான் த்ரிஷா - அவர் இந்த படத்தில் அவ்ளோ அழகு.//

உத‌ட்டை சுழிக்க‌ற‌ மாதிரி ந‌டிக்க‌லையா? அதான்...:)

பனித்துளி சங்கர் said...

விமர்சனம் மிகவும் அருமை ! திரிஷா கொள்ளை அழகு இந்த படத்தில் . பகிர்வுக்கு நன்றி

நினைவுகளுடன் -நிகே- said...

விமர்சனம் மிகவும் அருமை ! பகிர்வுக்கு நன்றி

Prabu M said...

நண்பா...
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. (பிடித்த 10 பெண்கள்)
எனக்கு முன்னாடியே யாரும் சொல்லிட்டாங்களா!! ;)
இடுகை சுட்டி: http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html

Prabu M said...

நன்றி நண்பா :)
அவசரமே இல்ல.. உங்களுக்கு டைம் கிடைக்கும்போது உங்க ஸ்டைல்ல கலக்குங்க :)

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

Veliyoorkaran said...

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

பனித்துளி சங்கர் said...

பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்

நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html

பனித்துளி சங்கர் said...

புதிய பதிவு எப்பொழுது நண்பரே ? மீண்டும் வருவான் பனித்துளி !

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

வெற்றி said...

@ஜெகதீசன்
நன்றி

வெற்றி said...

@பப்பு
நன்றி

வெற்றி said...

@ஜாக்கி சேகர்

இப்ப மட்டும் என்ன குறையாவா ஓடிருக்கு? போதும் போதும் :))

வெற்றி said...

@திவ்யாஹரி

நன்றி..நான் சொன்ன நடத்துநர் - டீச்சர்..கண்டக்டர் இல்லீங்கோ :)

வெற்றி said...

@தியாவின் பேனா

நன்றி

வெற்றி said...

@thenammailakshmanan

//திரிஷாயணம்//

ரசித்தேன் :)

வெற்றி said...

@Complan Surya

தேவதைய தெய்வமாக்காதீங்க பாஸ் :)

//neenga ganesha cholanaunu thirum..//

????

வெற்றி said...

@மங்குனி அமைச்சர்

அது சரி..சார்ன்னு யாரை சொல்றீங்க..தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :)

வெற்றி said...

@ஜெரி ஈசானந்தா.

நான் எவ்ளோ சின்சியரா ஜொள்ளிருக்கேன்..'சொல்ற'ன்னு சொன்னதுக்குதான் நீங்க சாரி சொல்லணும்..

வெற்றி said...

@ர‌கு
படத்தை பாருங்க..உதட்டைக் குவிப்பீங்க :)

வெற்றி said...

@பனித்துளி
நன்றி

வெற்றி said...

@நிகே

நன்றி

வெற்றி said...

@பிரபு . எம்

அடுத்து இதுதான் :)

வெற்றி said...

@பனித்துளி

தொடர்ந்த வருகைக்கு நன்றி

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Priya said...

உண்மையிலேயே த்ரிஷா இந்த படத்தில் அழகாக இருந்தாங்க. அவங்க கர்லி ஹேர்ல ஆர‌ம்பிச்சி சேலை என்று எதையும் விடாம ரசிச்சு எழுதி இருக்கிங்க:)

விமர்சனம் நல்லா இருக்கு!