Wednesday, December 30, 2009

விஜய்யும் ஜென் தத்துவமும் !



 பதிவர்கள் அனைவருக்கும்  புத்தாண்டு  வாழ்த்துக்கள்.

2009 - இந்த வருடம் என் வாழ்வில் மறக்க முடியாத பல சுவையான அனுபவங்களை அள்ளித் தந்த ஆண்டாகி விட்டது.

முதலாவது - கடந்த ஆண்டின் இறுதியில் பழக ஆரம்பித்த உறவொன்று பரிணாம வளர்ச்சி அடைந்து இந்த ஆண்டு அடுத்த கட்டத்துக்கு சென்றது.

இரண்டாவது - பல ஆண்டுகளாக வாசகனாய் மட்டுமே இருந்த நான் பதிவுலகில் சில கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி அடுத்த அவதாரம் எடுத்தது.

அப்புறம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பல வெளி கல்லூரிகளுக்கு(உள்நாட்டிலும் தான்) சென்று பரிசு மழையில் நனைந்தது.

வரும் ஆண்டும் இதே போல் எனக்கு நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன்.

என்ன ஒரு சுயநலம்!

மன்னிக்கவும்.இந்த பதிவை படித்து ஓட்டு போடுவர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக இருக்க கடவது!

பார்ரா!

சரி.என் பதிவை படிக்கும் அனைவருக்கும் புத்தாண்டு நல்லபடியாய் இருக்கும்.

மறுபடியும் பார்ரா!

சரி.சரி.உலக மக்கள் எல்லாரும் வரும் ஆண்டில் அமைதியான ஒரு வாழ்வை வாழ்ந்து ஒருவருக்கொருவர் சமாதானமும் அன்பும் போற்றுவார்களாக!

ம்ம்..இதுதான் சரி..என்ன ஒரு வில்லத்தனம்!

---------------------------------------------------------------------------------------

விஜயை கிண்டலடித்து அதிகமாக SMS அனுப்பும் நண்பன் ஒருவன் சமீபத்தில் என்னிடம் கேட்டான்..
'ஏண்டா மத்த படத்த எல்லாம் நல்லா ஞானக்கண்ணோட பாக்குற.ஆனா விஜய் படம்னு வந்தா மட்டும் என் உன் ரசனை இப்படி குறைஞ்சு போய்டுது?

நான் சொன்னேன்.

'வேட்டைக்காரன் பார்க்க குழந்தைகள் ரொம்ப அனத்தியதால் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்றோம்.அவர்கள் நன்றாய் ரசித்து பார்த்தார்கள்.விஜய் படம் பார்க்க குழந்தை போன்ற மனநிலை போதும்.குழந்தையாய் மாறினால் வாழ்க்கை குதூகலமாக மாறி விடும்.இதைத்தான் ஜென் தத்துவம் சொல்கிறது.'

அன்றிலிருந்து அவன் நிறுத்தி விட்டான்.விஜயை கிண்டலடிப்பதை அல்ல.அதை எனக்கு SMS அனுப்புவதை.

-----------------------------------------------------------------------------------
வரும் ஆண்டில் நான் எடுக்கப் போகும்  உறுதிமொழிகள் சில:

1 .காலேஜுக்கு செல்போன் கொண்டு போக கூடாது............
                         (விடுமுறை தினங்களில் மட்டும் )

2 .பாடங்களை முந்திய நாள் இரவே படித்து விட வேண்டும்.......
                         (தேர்வுக்கு முந்திய நாள் மட்டும் )

3 .வகுப்பறையில் தூங்கக் கூடாது................
                        (ஒரு நல்ல பிகர் செமினார் எடுக்கும் போது மட்டும்)

4 .மாஸ் கட் அடிக்க கூடாது..........
                        (அன்று நான் கல்லூரிக்கு முதலிலேயே விடுப்பு சொல்லியிருந்தால்)

5 .வேறு எந்த பெண்ணையும் சைட் அடிக்க கூடாது.......
                          ('அவள்' என்னருகில் இருக்கும் போது மட்டும்)

------------------------------------------------------------------------------------
புத்தாண்டு சிறப்புபுதிர்:

பள்ளியில் binary arithmetic படித்திருப்போம்.அதில் வரும் கூட்டல் கணக்கு:
                                                01 + 01 = 10
இதை இப்போது சொல்வதற்கு என்ன காரணம்?
தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

பதிவை ரசித்திருந்தால் ஓட்டு போட மறவாதீர்..மறவாதீர்..மறவாதீர்..

Saturday, December 26, 2009

மகனே என் அருமை மகனே!!




மகனே!
உன்னுடன் விளையாடும்
அடுத்த வீட்டு டாக்டரின்
பிள்ளையை போல
உனக்கும் உயர்விலை 
துணி வேண்டுமென்றாய்!
எடுத்துக் கொடுத்தேன்..
எனக்கான சீமைத்துணி
தியாகம் செய்து !!

அவனை போல
சைக்கிளில் தான்
பள்ளி செல்வேன் என்றாய்!
வாங்கி கொடுத்தேன்
என் கொலுசை விற்று!!

காட்டில் வெயிலில்
சுள்ளி பொறுக்க
கால் பொசுங்க
நடக்க இயலாததால்
செருப்பு வாங்க வைத்திருந்த
பணத்தையும் உனக்கு தந்தேன்!
அவனைப் போல
நீயும் கறுப்புக் கண்ணாடி அணிந்து
கதாநாயகனாட்டம் வலம் வர!!

உன் அப்பன்
குடித்துத் தொலைத்த
காசை நீயோ
படித்துத் தொலைத்தாய்
அவனைப் போல ஏதோ
கணினிப் படிப்பு!!

ஆனால் அவனுக்கு இல்லாத
தலைக்கனம்
உனக்கு இயல்பாய்!
இன்று அவனோ வெளிநாட்டில்
நீயோ என் காலடியில்

அவன் அங்கிருந்து
அனுப்பும்
வெளிநாட்டு மதுவின்
வாசனை மயக்கத்தோடு
என்னை விரட்டுகிறாய்
உனக்கு சைட் டிஷ்
வாங்க - நடக்கிறேன்
எனக்கான  இன்றைய
மாத்திரையை மறந்து!!

என்ன குடித்தாலும்
குடல்  புண்ணாகும்
அளவுக்கு அதிகமாக
குடித்து விடாதே - மகனே
என்னருமை மகனே!!!


இந்த கவிதை உரையாடல் கவிதை போட்டிக்கு.........

கவிதை பிடிச்சிருந்தா மறக்காம உங்க வோட்ட க்ளிக்கிட்டு  போய்டுங்க....
ச்சும்மா ஒரு கவிதை

Wednesday, December 23, 2009

முத்தமே!!




                                       சாயம் பூசாமலே
                                       போதை தரும்
                                       இதழ்களை குவித்து
                                       இச் இச் இச்'
                                       என இச்சை குறையா
                                       ஒரு முத்தத்தை
                                        மிக அழுத்தமாய் 
                                        நீ 'முத்தின' போது
                                        நெஞ்சினில் பரவிய
                                        ஏக்க உணர்வினில்
                                        சூடாகிப் போனது  
                                        என்
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                                             .
                                        செல்போனும் கூடத்தான்!!!

டிஸ்கி : ஏதோ உரையாடல் போட்டின்னு ஒன்னு நடக்குதாமே...அதுக்கு இந்த கவிதைய அனுப்பலாமான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க..:)