Saturday, December 26, 2009
மகனே என் அருமை மகனே!!
மகனே!
உன்னுடன் விளையாடும்
அடுத்த வீட்டு டாக்டரின்
பிள்ளையை போல
உனக்கும் உயர்விலை
துணி வேண்டுமென்றாய்!
எடுத்துக் கொடுத்தேன்..
எனக்கான சீமைத்துணி
தியாகம் செய்து !!
அவனை போல
சைக்கிளில் தான்
பள்ளி செல்வேன் என்றாய்!
வாங்கி கொடுத்தேன்
என் கொலுசை விற்று!!
காட்டில் வெயிலில்
சுள்ளி பொறுக்க
கால் பொசுங்க
நடக்க இயலாததால்
செருப்பு வாங்க வைத்திருந்த
பணத்தையும் உனக்கு தந்தேன்!
அவனைப் போல
நீயும் கறுப்புக் கண்ணாடி அணிந்து
கதாநாயகனாட்டம் வலம் வர!!
உன் அப்பன்
குடித்துத் தொலைத்த
காசை நீயோ
படித்துத் தொலைத்தாய்
அவனைப் போல ஏதோ
கணினிப் படிப்பு!!
ஆனால் அவனுக்கு இல்லாத
தலைக்கனம்
உனக்கு இயல்பாய்!
இன்று அவனோ வெளிநாட்டில்
நீயோ என் காலடியில்
அவன் அங்கிருந்து
அனுப்பும்
வெளிநாட்டு மதுவின்
வாசனை மயக்கத்தோடு
என்னை விரட்டுகிறாய்
உனக்கு சைட் டிஷ்
வாங்க - நடக்கிறேன்
எனக்கான இன்றைய
மாத்திரையை மறந்து!!
என்ன குடித்தாலும்
குடல் புண்ணாகும்
அளவுக்கு அதிகமாக
குடித்து விடாதே - மகனே
என்னருமை மகனே!!!
இந்த கவிதை உரையாடல் கவிதை போட்டிக்கு.........
கவிதை பிடிச்சிருந்தா மறக்காம உங்க வோட்ட க்ளிக்கிட்டு போய்டுங்க....
ச்சும்மா ஒரு கவிதை
Labels:
ச்சும்மா ஒரு கவிதை
19 comments:
நல்லாருக்கு.
நன்றி வானம்பாடிகள்..
அருமை என்ற ஒற்றை வார்த்தை போதாது, இந்தக் கவிதைக்கு. வாழ்த்துகள்!
நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது உங்கள் பின்னூட்டத்திற்கு..
ம்...குடிக்கும் பழக்கமும் நவீனமாகியிருக்கிறது. ஆனால் பாசம் இன்றும் அப்படியே (பல இடங்களில்)..வெற்றி பெற வாழ்த்துக்கள் வெற்றி..
நல்லா இருக்குங்க..
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அதான் பேர்லயே இருக்கே :)))
@புலவன் புலிகேசி
நன்றி தல..
@சுசி
நன்றி சுசி உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
நெஞ்சை பிழிந்தது...!
ரொம்ப நல்லா இருக்கு, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@தமிழ் வெங்கட்
மிக்க நன்றி..
@சிங்கக்குட்டி
நன்றி உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
நெஞ்சை தொட்டுட்டீங்க போங்க..
அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
@எப்பூடி
ரொம்ப நன்றிங்க..
@தியாவின் பேனா
மிக்க நன்றி..பாலோயர் ஆனதுக்கு..
மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
நன்றி தேனம்மை..
குடித்து விடாதே - மகனே
என்னருமை மகனே!!!//
avan adanga maatanga..
Post a Comment