Thursday, December 17, 2009
முதல் நாள் அனுபவம்!!!
கல்லூரி சென்ற
முதல் நாள் !
நிறைய படிக்க வேண்டுமென்பதை விட
நிறைய பார்க்கவே ஆர்வம்;
அன்றுதான் அவளை
முதலில் பார்த்தேனா - நினைவில்லை !
என் மீது அளவுக்கதிகமாய்
அன்பையும் கோபத்தையும்
ஒருசேர பொழிய போகிறவள்
இவள்தானா - தெரியவில்லை !
இதழ் வழியாய்
பேசியதை விட
குறுஞ்செய்தி வாயிலாய்
நிறைய பேசப்போவது
இவளுடன்தானா - தெரியவில்லை !
நேற்று உன் கனவுக்குள்
என்னை ஏன்
அனுமதிக்கவில்லை என
சண்டையிட போவது
இவள்தானா - தெரியவில்லை !
எல்லாவற்றையும் விட
என்னை விட என்
குடும்பத்தின் மீது
அக்கறை செலுத்த வந்தவள்
இவள்தானா - தெரியவில்லை !!
மொத்தத்தில்
பள்ளி நாட்களை போலவே
எல்லா பிகர்களையும் சைட் அடித்து
நன்றாகவே கழிந்தது அ(ந)ந்நாள்!!!!
டிஸ்கி: ச்சும்மா ஒரு கவிதை...
Labels:
ச்சும்மா ஒரு கவிதை
17 comments:
இப்போ தெரியாது!
பூரிகட்டையிலேயே மண்டையில செமட்தியா வாங்கும் போத் தெரியும் யாருன்னு!
//இப்போ தெரியாது!
பூரிகட்டையிலேயே மண்டையில செமட்தியா வாங்கும் போத் தெரியும் யாருன்னு!//
ஏன் தல இப்படி பயமுறுத்துறீங்க..
கவிதை அருமை
தொடர்ந்து எழுத வாழ்துக்கள்
இன்னும் எண்டர் கவிதை ரேஞ்சுக்கு வரல..:)))
கேபிள் சங்கர்
@உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com)
நன்றி உலவு
நிறைய படிக்க வேண்டுமென்பதை விட
நிறைய பார்க்கவே ஆர்வம்;//////
ethana peru ipdi kelambirukinga???
இவளுடன்தானா - தெரியவில்லை !/////////
kadasila kandupidichingala illayA??
@கேபிள் சங்கர்
இப்போதான ஆரம்பிச்சிருக்கோம்...அதுக்குள்ள உங்க ரேஞ்சுக்கு வர முடியுமா?
@உங்கள் தோழி கிருத்திகா
எனக்கு தெரிஞ்சு நான் ஒருத்தன் தாங்க..:-)
கண்டுபிடிக்காம கவிதை வருமா....
ஹா ஹா ஹா....இந்த கவிதை நாம சைட் அடிக்கும் அனைத்து பிகர்களுக்கும் பொருந்தும்...சூப்பர் தல
@புலவன் புலிகேசி
நன்றி தல.....
கண்ண தொறந்துகிட்டே கனவு கண்டியா என்ன?////
@அத்திரி
இல்லங்க நிஜம்தான்...
பூரிகட்டையிலேயே மண்டையில செமட்தியா என்கிட்ட தான் வாங்கப்போறாங்க !!!!
//Saraj said...
பூரிகட்டையிலேயே மண்டையில செமட்தியா என்கிட்ட தான் வாங்கப்போறாங்க !!!!//
Family Blogஆ, நடத்துங்க நடத்துங்க :))
// வெற்றி said...
இப்போதான ஆரம்பிச்சிருக்கோம்...அதுக்குள்ள உங்க ரேஞ்சுக்கு வர முடியுமா?//
இந்த அடக்கம் தான் உனக்கு இன்னும் பல கவிதைகளை தரும் :))
//சங்கர் said...
Family Blogஆ, நடத்துங்க நடத்துங்க :))//
:) :)
//இந்த அடக்கம் தான் உனக்கு இன்னும் பல கவிதைகளை தரும் :))//
கண்டிப்பா தல..
நன்றி நண்பா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்..
என்னாது
பள்ளி நாட்களப் போலயா
கெட்ட பையனா நீ - பாத்துக்கப்பா
நல்லாரு
நல்வாழ்த்துகள்
Post a Comment