Monday, December 21, 2009

வேட்டைக்காரன்-ஒரு விஜய் ரசிகனின் குமுறல்                                 வேட்டைக்காரன் - சில நாட்களாக பரபரப்பாக 'அடிபட்ட' பெயர்.இந்த அளவிற்கு வேறு எந்த நடிகரின் படமும் negative hype create பண்ணதில்லை.நிற்க.நீங்கள் விஜய் ரசிகராக அல்லாமல் விஜய் வசையராக இருந்தால் இந்த பதிவு உங்கள் உடல்நலத்திற்கோ மனநலத்திற்கோ உகந்ததல்ல.Reading ahead is injurious to health.
.
.
.
.
நாம் தொடரலாம்
.
.
                                 படம் வெளி வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் பதிவுலகத்துக்கு வெளியே நான் கேட்டவரையில் (நான் இன்னும் படம் பார்க்கவில்லை) SMSகளில்  வேட்டையாடப்பட்ட அளவுக்கு படம் ஒன்னும் மோசமில்லை என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.
                           
                               ஆனால் இங்கேதான் படம் வேட்டையாடப்பட்டு அதன்பிம்பம் சுக்குநூறாக மிளகுஇருநூறாக உடைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக உலக சினிமா பார்பவர்களுக்கு விஜய்யின் தற்போதைய படங்கள் பிடிக்காது.but common people படம் ரசிக்கத்தக்க வகையில் உள்ளதாகவே கூறுகின்றனர்.
                             
                                பலருடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் படத்தின் விமர்சனத்தையும் தாண்டி தனிமனித(விஜய்) தாக்குதலும் கிண்டலும் கேலியும்(காரணங்கள் நிறைய) நிறையவே 'தல'விரித்தாடியது.யாராக இருந்தாலும் அவர் தனது தகுதிக்கு மீறிய உயரத்தை அடைந்தால் இந்த வகை குத்துக்களை வாங்க வேண்டியது இருக்கும்.thats wat happening wit vijay.தொடர்ந்து மூன்று தோல்விப் படங்கள் கொடுத்தும் ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய mass opening இருக்கிறது என்றால் அவர் இருக்கும் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
                             
                                நான் 'பூவே உனக்காக' காலத்தில் இருந்து(நான் சினிமா பார்க்க ஆரம்பித்த காலம்)  விஜய் ரசிகன்.இதுவரை அவர் செய்த அனைத்தையும் ரசித்திருக்கிறேன் except மேஜர் சரவணன்.ஏனென்றால் அவர் விறைப்பாக மீசையை முறுக்கிக் கொண்டு வரும்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன்.தள ஏன் நமக்கு வராதத எல்லாம் ட்ரை பண்றீங்க.அதுக்குல்லாம் வேற ஆள் இருக்காங்க.நீங்க உங்களுக்கு என்ன வருமோ அத மட்டும் செய்யுங்க.
                          
                              அப்புறம் அவர் jump செய்வது மிகவும் நகைப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.மசாலா சினிமா என்றால் ஒவ்வொருவரையும் கவரும் வகையில் ஒவ்வொன்று இருக்கும்.அதில் குழந்தைகளை கவருவதற்காகதான் superman சாகசங்கள்.இது ஒன்றும் தவறல்ல.
                          
                                அவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது உலக சினிமாக்களை அல்ல.only a good entertainer .அந்த வகையில் வேட்டைக்காரன்-ரசிகர்கள் கொண்டாடத்தக்க ஒரு படமென நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போக்கிரியை ரசித்தவர்களுக்கு குருவி,வில்லு கசந்திருக்கும்.ஆனால் குருவி,வில்லு பார்த்து நொந்தவர்களுக்கு வேட்டைக்காரன் நிச்சயமாக ஒரு தித்திக்கும் தேனாகும்.
                           
                                'நான் விஜய் ரசிகன்' என்று உன்னால் காலரை தூக்கி சொல்ல முடியுமா என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லி கொள்வது 'நான் அணிவது round neck T shirts மட்டுமே'.
  
பின்குறிப்பு :
                         'நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல நாராயணா' என பின்னூட்டுபவர்கள் தங்கள் முகவரியை குறிப்பிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.அவர்களுக்கு நாராயணனிடம் இருந்து 2 மோர்டீன் கொசுவர்த்தி சுருள் அனுப்பி வைக்கப்படும்.                    


பதிவு பிடிச்சவங்க உங்க வோட்ட மறக்காம குத்திட்டு போய்டுங்க.........

17 comments:

கார்க்கி said...

//யாராக இருந்தாலும் அவர் தனது தகுதிக்கு மீறிய உயரத்தை அடைந்தால் இந்த வகை குத்துக்களை வாங்க வேண்டியது இருக்கும்.//

விஜய்க்கு தகுதி குறைச்சல் எதுவுமில்லை. அவர் ஒன்னும் நல்ல நடிகர்ன்னு பேரு வாங்கலையே. மாஸ் ஹீரோன்னுதான் வாங்கியிருக்கார். அதுக்கு அவ்ர் முழு தகுதியும் உடையவர்.

//நிறையவே 'தல'விரித்தாடியது//

ரசித்தேன்.

படம் ஹிட் என்று கலெக்‌ஷன் ரிப்போர்ட் சொல்லுது சகா.இனி வரும் காலம் அவ்ருக்கு நல்லபடியாகவே இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

கொசுவர்தி சுருள் கிடைகுமுன்னீகளே.

விமர்சனமோ விமர்சனம்

http://niroodai.blogspot.com

புலவன் புலிகேசி said...

விஜயை எல்லோரு கேலி செய்கிறார்கள் என்றால் அவருடைய நடிக்கத் தெரியாத நடிப்புதான் காரணம்..49 படமும் ஒரே மாதிரி இருந்தா யாருக்குதான் கோவம் வராது???

வால்பையன் said...

நான் சினிமா பாக்குறதேயில்லை

Anonymous said...

விஜய் அப்பா சந்திரசேகர் தான் திருமலை துடங்கி வில்லு, குருவி , வேட்டைக்காரன் என்ன template உருவாக்கி தந்திருப்பார் என ஒரு சந்தேகம்

வெற்றி said...

@கார்க்கி

ஆமாம் சகா..இங்கும் நான் அறிந்த வரையில் படம் ஹிட்தான்..
நன்றி சகா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

வெற்றி said...

@அன்புடன் மலிக்கா
//விமர்சனமோ விமர்சனம்

நன்றி மலிக்கா..

வெற்றி said...

@புலவன் புலிகேசி
//49 படமும் ஒரே மாதிரி இருந்தா யாருக்குதான் கோவம் வராது???//

50இல் இருந்து நிலைமை மாறும் தல...

வெற்றி said...

@வால்பையன்
அப்படியா?

வெற்றி said...

@Anonymous

நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் பெயரிலேயே சொல்லலாமே...

livingston baba said...

avar kita nanga keakurathu mass padam thann manakeadana padam alla

வெற்றி said...

@livingston baba

saringa boss.....

ரவிபிரகாஷ் said...

\\Reading ahead is injurious to health.// :) எச்சரிக்கை கொடுத்திருந்ததால் பயந்துகொண்டே படித்தேன். மிக நடுநிலையாக, சுவாரசியமாகவே எழுதியிருக்கிறீர்கள்.

வெற்றி said...

@ரவிபிரகாஷ்

மிக்க நன்றி சார்.. :)

Anonymous said...

Naan evan rasiganum illai. Theriyama vijay padathuku, oru throgiyaley poiten.. too much
torture.

"Priyamudan" and "thullatha manamum thullum" nadicha vijay'a ithu?. kodumai. kuppai padam.

Mudiyalai. Fans mattum illamey ellorum pakkurey madhri padam eppa vijay nadippar?.

அறிவு GV said...

மொதோ நாள், மொதோ ஷோ மாயாஜால்ல பாத்தேன். அப்பறம் ஆபீஸ் போகமுடியாம, வீட்டுக்கு வந்துட்டேன். வில்லு அளவுக்கு இல்லையேன்னு சந்தோஷப்பட்டுகிட்டேன்.
இப்பல்லாம் நானும் round neck T shirt தான் போடுறேன் வெற்றி..! :))

வெற்றி said...

நன்றி அறிவுGV உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

//இப்பல்லாம் நானும் round neck T shirt தான் போடுறேன் வெற்றி..! :))//

சியர்ஸ் சகா...