Tuesday, December 1, 2009
கோவிலா கொடியவர்களின் கூடாரமா???
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை திங்கு திங்குன்னு ஆடுச்சாம்!! கோவில் கருவறைக்குள் லீலை நடத்திய அர்ச்சகர் - இச்செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி அலைகள் மனதில் பரவ தொடங்கின.ஏற்கனவே ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி வழிபாட்டுத் தளங்களில் பாலியல் கொடுமைகள் அதிகளவில் நடப்பதாக தெரிய வந்துள்ளது.இதில் இந்த செய்தி வேறு.
கோவிலுக்கு மன அமைதி தேடி வரும் பெண்களையும் சிறுமிகளையும் கோவில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்திருக்கிறார் இந்த குருக்கள்.
முன்பெல்லாம்(இப்போதும் சில இடங்களில்) கோவிலுக்குள் ஒரு சமூகம் நுழைவதையே தீட்டு ஏற்பட்டு விடும் என்று தடுத்துக் கொண்டிருந்த பெரியவர்கள் இப்போது நடந்தமைக்கு என்ன சொல்ல போகிறார்கள்??
பெண்கள் தைரியமாக வெளியிடங்களுக்கு செல்வதே கோவில் ஒன்றுதான் ..அங்கும் இதை போன்ற அக்கிரமங்கள் நடந்தால் என்னதான் செய்வது?
கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்களை கவனிக்கும் காவல்துறை உள்ளே சென்றும் நடப்பவற்றை அறிந்து கொளல் வேண்டும்.
வெளிபிரகாரங்களில் மட்டும் கண்காணிப்பு கருவிகள் வைத்தால் போதாது..கருவறைக்குள்ளும் வைத்து நடப்பவற்றை கண்காணிக்க வேண்டும்..
டிஸ்கி : இந்த பதிவு கோவில் கூடாது என்பதற்காக அல்ல...கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்பதற்காக...
மறக்காம உங்கள் வாக்கை தமிழிஷ்-ல குத்திட்டு போய்டுங்க......
12 comments:
வெற்றி.. இதில் அர்சகர் மட்டும் குற்றவாளி அல்ல.. அம்மன் போல போஸ் கொடுத்து கூடவே சரசமாட, வீடியோ எடுக்க உதவிய அந்த பெண்ணும்தான்.. ஸோ. .. இதில் ரெண்டு பேருக்கும் குற்றவாளி பட்டம்தான
கேபிள் சங்கர்
ஆமாம் சங்கர்..குற்றம் செய்தவர் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே........
இந்த அனியாயம் செய்ய எப்படித்தான் அந்த ஆளுக்கு மனசு வந்துதோ!!!
video enga??
ithu veliya vanthuttu?
innum veliye varaam ethanai pero???
vaalga tamil,valarga tamilagam,velattum mms.
//உங்கள் தோழி கிருத்திகா said...
இந்த அனியாயம் செய்ய எப்படித்தான் அந்த ஆளுக்கு மனசு வந்துதோ!!! //
மனம் இல்லாதவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது கிருத்திகா.......
கருவறைக்கும் பள்ளியறைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்....... புனித இடத்தில் களங்கம் ஏன்? நல்ல பதிவு.
//Tech Shankar said...
thanks //
??
//Chitra said...
கருவறைக்கும் பள்ளியறைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்....... புனித இடத்தில் களங்கம் ஏன்? நல்ல பதிவு.//
நன்றி சித்ரா....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.......
தேவையான இடுகை.
நன்றி வானம்பாடிகள்......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....
//முன்பெல்லாம்(இப்போதும் சில இடங்களில்) கோவிலுக்குள் ஒரு சமூகம் நுழைவதையே தீட்டு ஏற்பட்டு விடும் என்று தடுத்துக் கொண்டிருந்த பெரியவர்கள் இப்போது நடந்தமைக்கு என்ன சொல்ல போகிறார்கள்??//
வெற்றி இவனுங்கல்லாம் இந்த மாதிரி லீலைகளுக்காகதான் கருவரைக்குள்ள யாரையும் உடுறதில்ல..என்னைப் பொறுத்த வரை கொவில்களே வேண்டாம்..அவை பிச்சைக்காரர்களை உருவாக்கும் இடம் அவ்வளவுதான்..சாமியாவது வெங்காயமாவது
//சாமியாவது வெங்காயமாவது//
சரியாய் சொன்னிங்க தல....இதேதான் என் கருத்தும்...
Post a Comment